பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

துயில்மயக்க நோய்

துயில்மயக்க நோயை பற்றிய குறிப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன.

அறிமுகம்

உறக்க - விழிப்பு சுழற்சியை மூளையால் கட்டுப்படுத்த முடியாத போது உண்டாகும் நரம்புக் கோளாறே துயில்மயக்க நோய். இக்கோளாறினால் ஒருவர் காலமற்ற காலங்களில் எல்லாம் தூக்கத்திலாழ்வார். துயில்மயக்க நோயுள்ளவர்களுக்கு இரவுநேரத் தூக்கம் இடையூறு நிறைந்ததாக இருக்கும். பகல் நேரத்தில் அசாதாரணத் தூக்கத்திலாழ்வர். இது பலவேளை தூக்கமின்மை நோய் எனத் தவறாகக் கருதப்படும்.

துயில்மயக்க நோயுள்ளவர்கள் தூங்க ஆரம்பித்தவுடன் 5 நிமிடங்களிலேயே துரித விழியசைவு (REM) நிலையை அடைவர். ஆனால் பெரும்பாலானோர் ஒரு மணி நேரம் வரை ரெம் நிலையை அடைவதில்லை. ரெம் துயிலில்தான் பெரும்பாலான கனவுகள் ஏற்படும்

நோயறிகுறிகள்

பகல்நேர மிகைத் தூக்கம்:

போதுமான அளவுக்கு இரவில் உறங்கினாலும் பகல்நேர மிகைத்தூக்கம் ஏற்படுவதே துயில்மயக்க நோயின் முக்கிய இயல்பு. நேரமற்ற நேரத்திலும், இடங்களிலும் கூட ஒருவருக்குத் தூக்கம் வரும் அல்லது தூங்கி விழுவார் அல்லது நாள் முழுவதும் களைப்பாக உணர்வார்.

அசைவற்றுப்போதல் (Cataplexy)

பலமான உணர்ச்சிகளால் திடீரென ஏற்படும் தசை பலவீனம் அசைவிழத்தல் ஆகும் (எனினும் பலர் உணர்ச்சித் தூண்டல் இல்லாமலேயே அசைவற்றுப் போதல் உண்டு). வெறும் முகத்தசைகள் தளர்தலில் இருந்து நாடி அல்லது தலை தொங்குதல், முழங்கால் பலவீனம் அல்லது முழுக் குலைவு வரை ஏற்படலாம்.

பிற அறிகுறிகளில் அடங்குவன

  • மாயத்தோற்றம் – மெய்யற்றவைகளைப் பார்த்தலும் கேட்டலும்
  • மன ஒருமைப்பாடு கொள்வதில் சிரமம்
  • இடையூறான இரவுத் தூக்கம்

தன்னிச்சையான நடத்தை – தூங்கும்போதும் பேசுதல் அல்லது அங்குமிங்கும் அலைதல் போன்ற இயல்பான செயல்பாடுகளில் ஈடுபடுதல்.

காரணங்கள்

  • துயில்மயக்கம் ஒரு தன்தடுப்பாற்றல் பதில்வினையால் உண்டாகிறது.
  • டிரிப் 2-  (trib 2) என்ற எதிர்பொருளுக்கு எதிராக உண்டாகும் தன் தடுப்பாற்றல் பதில்வினையால் ஓரெக்சின் (orexin) குறைவு உண்டாகிறது என்றும், இதனால் துயில்மயக்கம் ஏற்படுகிறது

நோய்கண்டறிதல்

துயில்மயக்கத்தின் அனைத்து அறிகுறிகளும் இருந்தால் நோயைக் கண்டறிதல் எளிது. ஆனால் தூக்கத்தின் தாக்குதல் தனித்தனியாகவும், தசை பலவீனம் இல்லாமலும், இலேசாகவும் இருந்தால் நோய்கண்டறிதல் மிகவும் கடினம். தசை பலவீனம் தனியாகவும் ஏற்படலாம். வழக்கமாக துயில்மயக்கத்தைக் கண்டறிய பயன்படுத்த நடத்தப்படும் சோதனைகள் வருமாறு:

உறக்கப்பன்னளவைமானி (The polysomnogram)

இரவுத் தூக்கத்தில் மூளையின் தூக்க அலைகள் மற்றும் பல நரம்பு மற்றும் தசை செயல்பாடுகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகின்றன. சோதனையின்போது, துயில்மயக்கம் உள்ளவர்கள், விரைவாகத் தூங்கி, ரெம் நிலையை உடனடியாக அடைந்து இரவு உறக்கத்தில் அடிக்கடி விழிப்பார்கள். பகல் நேரத் தூக்கத்தை உண்டாக்கும் பிற சாத்தியமான தூக்கக் கோளாறுகளையும் கண்டறிய உறக்கப்பன்னளவைமானி சோதனை உதவிசெய்கிறது.

பன்முகத் தூக்க செயலிழப்பு சோதனை (The Multiple Sleep Latency Test (MSLT):

இயல்பாக விழிக்கும் காலத்தில் நோயாளி 2 மணி நேரத்துக்கு ஒருமுறை உறங்க வாய்ப்பளிக்கப்படுகிறது. இரவில் தூங்கும் போதும் சோதனை செய்யப்படும்.

எப்வொர்த் தூக்க அளவு (The Epworth Sleepiness Scale)

துயில்மயக்கம் உட்பட தூக்கக்கோளாறுகள் இருப்பதை அறிய கொடுக்கப்படும் சுருக்கமான வினாப்படிவம் இது. இந்தச் சோதனைகள் எல்லாம் பொதுவாக ஒரு துயிலியல் நிபுணரால் நடத்தப்படுகின்றன.

சிகிச்சை

இந்நோயைக் குணப்படுத்த முடியாவிட்டாலும் கட்டுப்படுத்தலாம். பகல் பொழுதில் கால வரையறை செய்து அடிக்கடி குறுகிய குளியல் எடுப்பது மிகையான பகல் தூக்கத்தைக் கட்டுப்படுத்த ஒரு சிறந்த வழி.

வாழ்க்கைமுறை:

இதில் அடங்குவன

  • மனவழுத்தம் நிலைமையை மோசமாக்கும்.
  • ஆரோக்கியமான சமநிலை உணவு விழிப்பு நிலையை மேம்படுத்தும்.
  • முறையான உடல் பயிற்சி. ஆனால் தூங்கப்போவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன் பயிற்சியை நிறுத்திவிட வேண்டும்.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்

3.09615384615
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top