பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

காப்போசிக் கழலை

காப்போசிக் கழலை நோய்களைப் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

காப்போசிக் கழலை என்பது ஒருவகையான புற்று நோய் ஆகும். இது தோலையும் உள்ளுறுப்புகளையும் பாதிக்கும். பொதுவாக இந்நோயை உண்டாக்குவது மனித அக்கி வைரஸ் 8 ஆகும். பரவலான அறிகுறி தோலில் ஏற்படும் சிவப்பு அல்லது செந்நீல தேமல்களே. இவை பின்னர் முடிச்சுகள் எனப்படும் கட்டிகளாக வளரும். இது மண்டலங்களைத் தாக்கும் நோய். உள்ளுறுப்புகளைப் பாதிக்காமல் தோல் புண்களாகவும் இருக்கும்.

இதன் வகைகள்

  • வரன்முறை காப்போசிக்கழலை
  • ஆப்பிரிக்க இடஞ்சார் காப்போசிக்கழலை
  • மருத்துவத் திரிபால் தடுப்பாற்றல் அடக்கப்பட்ட நோயாளிகளில் காப்போசிக்கழலை
  • எய்ட்ஸ் தொடர்புடைய காப்போசிக்கழலை

நோயறிகுறிகள்

பொதுவாக தோலில் காணப்பட்டாலும், வாய், இரைப்பைக்குடல் பாதை, நுரையீரல் பாதை போன்ற உடல் பகுதிகளுக்கும் பரவும்.

தோல்

கைகால்களின் கீழ்ப்பகுதி, முதுகு, முகம், வாய், பிறப்புறுப்புகள் உள்ளடக்கிய பகுதிகளில் பொதுவாக பாதிப்பு இருக்கும். புண்கள் பெரும்பாலும் காறை போல் காணப்படும். அழற்சி அல்லது நிணநீர் தேக்கம் போன்று வீக்கம் இருக்கும். தோல் புண் சிதைவுகள், மனம் மற்றும் சமூக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

உள்ளுறுப்புகள்

நிணநீர் சுரப்பிகள், நுரையீரல், செரிமான மண்டலம் ஆகியவையே பொதுவாக பாதிக்கப்படும். எந்த உறுப்பு பாதிக்கப்படுகிறதோ அதற்கேற்ற படி அறிகுறிகள் தென்படும். நிணநீர் சுரப்பிகள் பாதிக்கப்பட்டால் கையிலும் காலிலும் வீக்கமும், வலியும் அசௌகரியமும் உண்டாகும்.

காரணங்கள்

மனித அக்கி வைரஸ் 8 (HHV-8) இதற்குக் காரணம். இது காப்போசிக் கழலை தொடர்புடைய அக்கி வைரஸ்  (KSHV) என்றும் அழைக்கப்படும். HHV-8 வைரஸ் உள்ள எல்லோருக்குமே காப்போசிக்கழலை உண்டாவதில்லை.

கீழ்க்காணும் குறைபாடுடைய உள்ளவர்களுக்கே இந்த வைரஸ் காப்போசிக் கழலையை உண்டாக்குகிறது:

  • பலவீனமான நோய்த் தடுப்பு மண்டலம்
  • மரபு ரீதியாகக் கொண்டுவரப்பட்ட HHV-8 வைரஸ் பாதிக்கும் அபாயம்

நோய்கண்டறிதல்

திசுச்சோதனை

காப்போசிக் கழலையைக் கண்டறிய திசுச்சோதனையே சிறந்த வழி. பாதிக்கப்பட்ட தோலில் இருந்து உயிரணு மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வகத்தில் காப்போசிக் கழலை பாதித்த உயிரணு உள்ளதா என்று சோதிக்கப்படுகிறது.

அகநோக்கல்

செரிமான மண்டலத்தில் காப்போசிக் கழலை இருந்தால் அகநோக்கல் முறை கையாளப்படுகிறது. இதில் எண்டோஸ்கோப் எனப்படும் மெல்லிய, நெகிழ்வான ஒரு குழாய் தொண்டை வழியாக உட்செலுத்தப்படுகிறது. இதன் மூலம் குடல், மண்ணீரல், கல்லீரல் போன்ற உடல் உள்ளுறுப்புகளில் குறைபாடோ  அல்லது காப்போசிக் கழலையின் அறிகுறிகளோ உள்ளனவா என்று நிபுணர் ஆராய்கிறார். சந்தேகத்திற்கு உரிய எதுவும் இருந்தால் திசுமாதிரி ஆய்வு செய்யப்படும்.

இது குறிப்பான தகவலே. நோய்கண்டறிதலுக்கும் மருத்துவத்திற்கும் உங்கள் மருத்துவரை அணுகவும்.

சிகிச்சை

காப்போசிக் கழலைக்கான சிகிச்சை கீழ்வருவனவற்றைப் பொறுத்து அமைகிறது:

  • அறிகுறிகளின் கடுமை
  • காப்போசிக் கழலையின் வகை
  • வரன்முறை காப்போசிக் கழலைப்புற்றின் வளர்ச்சிநிலை

வரன்முறை காப்போசிக் கழலைப்புற்று மெதுவாகப் பரவுகிறது. உடனடி மருத்துவம் தேவை இல்லை. ‘பொறுத்திருந்து பார்த்தல்’ என்ற கொள்கையைக் கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறது.

ஆப்பிரிக்க இடஞ்சார் காப்போசிக்கழலை

இதற்கு கதிர்வீச்சாலும் வேதியற் மருந்துகளாலும் மருத்துவம் அளிக்கப்படுகிறது.

மருத்துவத் திரிபால் தடுப்பாற்றல் அடக்கப்பட்ட நோயாளிகளில் காப்போசிக்கழலை: தடுப்பாற்றல் அடக்கிகளைக் குறைப்பது அல்லது தடுப்பது மூலம் இதற்குப் பொதுவாக சிகிச்சை அளிக்கப்படும்.

எய்ட்ஸ் தொடர்புடைய காப்போசிக்கழலை

நோய்த் தடுப்பு மண்டலத்தை பலப்படுத்த வலிமையான அதிதீவிர ரெட்ரோ வைரல் சிகிச்சை அளிக்கப்படும்.

இது குறிப்பான தகவலே. நோய்கண்டறிதலுக்கும் மருத்துவத்திற்கும் உங்கள் மருத்துவரை அணுகவும்.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்

2.91780821918
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top