অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

சாகாஸ் நோய்

சாகாஸ் நோய்

சாகாஸ் நோய்

இது ட்ரிபனசோமா க்ரூசி எனப்படும் ஒட்டுண்ணியால் நோயை ஏற்படுத்துகின்றது. இந்த ட்ரிபனோமா க்ரூசியானது பொதுவாக வேறு முலையூட்டிகளிலிருந்து பூச்சிகளால் மனிதர்களுக்கு கடத்தப்படும். இது ரெகுவிப்பூச்சி எனப்படும் பூச்சி வகையால் கடத்தப்படும். இந்த சாகாஸ் நோயானது இரத்த மாற்றீடு, அங்க மாற்றீடு, ஒட்டுண்ணியால் தொற்றுக்குள்ளான உணவு, மற்றும் தாயிலிருந்து குழந்தைக்கு தொப்பூள் கொடி மூலம் கடத்தப்படும்.

இந்நோயின் அறிகுறியானது இந்த தொற்றின் காலத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் வித்தியாசப்படும். ஆரம்ப கட்டங்களில் அறிகுறிகள் குறைவான தீவிரமுள்ளதாக காணப்படும். அத்துடன் இவை தொற்றுக்குள்ளான இடத்தில் வீக்கமானது ஏற்படும். இந்த நோயானது மோசமடையும் போது பாரதூரமான நீண்டகால அறிகுறிகள் ஏற்படும். இவை இதய நோய்கள், மற்றும் குடலின் அமைப்பில் விகாரங்கள் ஆகியன ஏற்படலாம்.

தற்போதுள்ள மருந்துகள் பெரும்பாலும் நோய்க்கு வினௌத்திறன் அற்றவையாகும். இந்தநோயானது, பூச்சியால் கடிக்கப்பட்ட இடத்தில் சொற்ய்யும் போது அல்லது மேலணிச்சவ்வு மற்றும் விழிவெண்படலம் ஆகியன ஊடாக கிருமியானது செல்லக்கூடும்.

குணங்குறிகள்

இந்த நோயின் ஆரம்ப தீவிரமான கட்டமானது சில வாரங்கள் மற்றும் மாதங்களுக்கு காணப்படும். இது பொதுவாக நோயாளியால் அவதானிக்கப்பட முடியாத அளவிற்கு சாதாரணமாகக் காணப்படும். காய்ச்சல், இளைப்பு, உடல் நோய், தலைவலி, சொறி, பசியின்மை, வற்றோட்டம், வாந்தி ஆகியன ஏற்படும். அத்துடன் ஈரல், கல்லீரல் ஆகியன வீக்கமுறல், நிணநீர்க்கணு மற்றும் சுரப்பிகளின் வீக்கம் ஆகியன ஏற்படலாம்.

கண்மடல்களில் வீக்கமானது கடித்த இடத்திற்கு அருகே ஏற்படும். இவை 3-8 வாரங்கள் வரை நீடிக்கும். குணங்குறிகள் மறைந்தாலும் சிகிச்சை வழங்கப்படாவிடின் நோயானது நீடிக்கும். சிலவேளை இதடத்தசையழற்சி, மூளைக்காய்ச்சல் ஆகியவற்றால் உயிரிழக்கலாம். நீண்டகாலத்திற்கு பின்னர் சாகாஸ்நோயானது நரம்புத்தொகுதி, சமிபாட்டுத்தொகுதி, இதயம் ஆகியன பாதிப்புக்குள்ளாகும். உணவு விழுங்குவதில் கஷ்டம், நிறை குறைவு, போசணை குறைவு, மறதி ஆகியன ஏற்படலாம். இந்நோயானது நுணுக்குக்காட்டியூடாக உறையாத குருதியானது பரிசோதிக்கப்பட்டு இந்நோய் கண்டறியப்படலாம். அத்துடன் பிறபொருளெதிரிப் பரிசோதனைகளும் பயன்படுத்தப்படும். பென்சிடஸோஸ், நைபேர்டிமொக்ஸ் ஆகியன இந்நோய்க்கு பயன்படுத்தப்படலாம்.

ஆதாரம் : ஆரோக்கிய தகவல் தளம்

கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate