பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஈக்கள் மற்றும் பேன்களை கட்டுப்படுத்துதல்

ஈக்கள் மற்றும் பேன்களை கட்டுப்படுத்தும் முறைகள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

ஈக்களை கட்டுப்படுத்த சமுதாயத்தால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்

சுற்றுப்புறச்சூழல் மேம்படுத்தப்படாவிட்டால் ஈக்களை கட்டுப்படுத்த முடியாது. சுற்றுப்புற சுகாதாரம் கெட்டுப்போகும்போது ஈக்கள் அதிக அளவில் பெருக்கமடையும் ஈக்களை கட்டுப்படுத்துவதற்கு கீழ்கண்ட சுகாதார நடவடிக்கைகள் முக்கியம்.

1. திறந்த வெளியில் மலம் கழித்தலை தடுக்க வேண்டும்.

2 கழிவு நீக்கத்துக்குரிய கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டும்

3) மனிதன் மற்றும் விலங்கு கழிவுகளை சரியான முறையில் அகற்றவேண்டும்

4) குப்பைகளையும் சமையலறை கழிவுகளையும் சரியான முறையில் சேகரித்து மற்றும் சுகாதாரமான முறையில் அகற்ற வேண்டும்.

5. பொதுவான சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும்

பூச்சிகொல்லிகளை பயன்படுத்துதல் : நவீன பூச்சிக்கொல்லிகள் தற்போது ஈக்களை கட்டுப்படுத்துவதில் பயனற்றவை. அதிக அளவில் ஈக்கள் பூச்சிகொல்லி மருந்துகளுக்கு எதிர்ப்பு தன்மை கொண்டது. ஈக்கள் அதிக அளவில் பெருகியிருந்தால் DDT 5% அல்லது மெலாதியான் 5% 100 ச.மீக்கு 4 லிட்டர் என்ற விகிதத்தில் பயன்படுத்தலாம்.

ஈ காகிதங்கள் (Fly papers) : பசைத்தன்மையுள்ள இந்த காதிதங்கள் சூடான கலவையான பிசின் மற்றும் ஆமணக்கு எண்ணெயினால் தயாரிக்கப்பட்டது. வெளிச்சத்தில் பறக்கும் ஈக்கள் இந்த பசைத்தன்மையுள்ள பேப்பரில் சிக்கிக்கொள்கின்றன. சிறிய அளவில் மட்டுமே ஈக்கள் இதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.

ஈக்களிடமிருந்து பாதுகாப்பு (Protection against Flies) : வீடுகள், மருத்துவமனைகள், மீன் மற்றும் இறைச்சி கடைகள். இது போன்ற இடங்களில் வலை அமைப்புகளை அமைத்தல். ஆனால் இந்த திரைகள் விலை உயர்ந்தவை.

சுகாதார போதனை (Health Education) : ஈக்களை ஒழிக்கும் இயக்கத்திற்கு மக்களின் ஒத்துழைப்பை பெறவேண்டும். ஈக்களின் கட்டுப்பாட்டை சுகாதார போதனையின் மூலம் மக்களுக்கு தெளிவாக விளக்க வேண்டும்.

தலை மற்றும் உடல் பேன்களை கட்டுப்படுத்துதல்

1. பூச்சிக்கொல்லிகள் : 1% DDT தூளை தேய்ப்பதன் மூலம் தலையிலுள்ள பேன்களை விரைவாக கட்டுப்படுத்த முடியும். இந்த தூளை முடியில் தேய்த்துவிட்டு 24 மணி நேரத்திற்கு பின் முடியை கழுவவேண்டும். ஒரு வாரத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக தேய்க்கலாம். மாறாக 0.2% லிண்டன்ஸ் (Lindance) தேங்காய் எண்ணெயில் கலந்தும் பயன்படுத்தலாம்.

உடல் பேன் (Bodylice) : DDT தூளை பயன்படுத்துவது சிறந்த மருந்து துணிகளில் உள்ள இந்த தூளை எல்லா வழியிலும் மற்றும் உட்புறமும் தூளை ஊதவேண்டும். இந்த செயல்முறைக்கு பேன்களை (Delousing) அழித்தல் என்று பெயர்.

பேன் தூளுக்கு எதிர்ப்பு தன்மை கொண்டதாக இருந்தால் மாலதியான் அல்லது வின்டன் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

2. சுய சுத்தம் (Personal Hygiene) : தினமும் சோப்பும் நீரும் கொண்டு குளிப்பதன் மூலம் பேன்களை தவிர்க்கலாம். நீண்ட கூந்தலை உடைய பெண்கள் அடிக்கடி முடியைக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். துண்டு மற்றும் படுக்கை துணிகளை சோப்புடன் சுடுநீரில் அலசி, சூடாக சலவைப்பெட்டியில் தேய்த்து (Hot iron) வைக்க வேண்டும். உடல் பேன்களை கட்டுப்படுத்த உடைகளை கொதிகலன் அல்லது அழுத்த நீராவிக்கலன்களில் தொற்று நீக்கம் செய்யலாம்.

ஆதாரம் : தமிழநாடு ஆசிரியர் பயிற்சி நிறுவனம்

3.28571428571
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top