অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

கொசுக்களை கட்டுப்படுத்துதல்

கொசுக்களை கட்டுப்படுத்துதல்

பல விதங்களில் கொசுக்களை கட்டுப்படுத்துவதை வகைப்படுத்தலாம்.

1) முட்டை புழுக்களை அழித்தல்

2) வளர்ச்சியடைந்த கொசுக்களை அழித்தல்

3) தனிமனிதனின் பாதுகாப்பு

முட்டைப்புழுக்களுக்கு எதிரான முறைகள்

1) கொசுக்களின் இனம் பெருகும் இடங்களை அகற்றுதல் : கொசுக்களின் இனம் பெருகும் இடங்களான குட்டைகள், சாக்கடைகள், கழிவு நீர் சேர்ந்த இடம் போன்றவைகளை அழித்தல். நிலத்தில் உள்ள பள்ளங்கள் நிரப்பப்பட வேண்டும். முறையான வடிகால் ஏற்பாடு செய்யவேண்டும். இந்த முறையில் கட்டுப்படுத்துவதை இனப்பெருக்க குறைத்தல் (Source reduction) எனப்படும்.

2) நீரின் மேல் எண்ணெய் தெளித்தல் (Application of oil) : தண்ணீரின் மேல் எண்ணெயை தெளிக்கும் போது அது நீரில் பரவிக் காணப்படும். கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களில் எண்ணெயை தெளித்தால் மேற்பரப்பு அழுத்தம் குறைக்கப்படுவதால் முட்டைப்புழுக்கள் மற்றும் கூட்டுப் புழுக்களின் நச்சுதன்மை குறைக்கப்படும். மேற்பரப்பு (Surfacetension) அழுத்தம் குறைக்கப்படுவதால் முட்டைபுழுவும், கூட்டுப்புழுவும் நீரில் மூழ்கும். எனவே அதற்கு காற்று கிடைக்காது.

மண்ணெண்ணெய் பெட்ரோல் கச்சா எண்ணெய் போன்றவை பயன்படுத்தப்படும். ஒரு ஏக்கர் நிலப்பரப்புக்கு 10-15 (gallon) கேலன் எண்ணெய் தேவை. வாரத்திற்கு ஒரு முறை எண்ணெய் தெளிக்கலாம்.

3) பாரீஸ்கிரீன்

பாரீஸ்கிரீன் அல்லது காப்பர் அசிட்டோ ஆர்சனிக் என்பது பசுமையான படிகாரதூள். இதில் ஆல்சனிக் ஆக்ஸைடு என்ற நச்சு உள்ளது. பாரீஸ்கிரின் அனாபிலஸ் கொசுக்களை மட்டும் அழிக்க சிறந்தது. இது கொசு இனப்பெருக்கம் செய்யும் இடங்களில் 2% தெளிக்கவேண்டும். பரிந்துரைக்கப்பட்ட அளவின்படி 1 ஹெக்டேர் நீர்பரப்புக்கு 1-25 கிலோகிராம் பாரீஸ் கிரின் தேவை

4) செயற்கை பூச்சிக்கொல்லிகள் (Synthetic Insecticides) DDT, BHC, Abateமாலதின் (Malathia) போன்றவை செயற்கை பூச்சிகொல்லிகளுக்கு எடுத்துக் காட்டுகள். இந்த மருந்துகள் கொசுக்களின் முட்டைப் புழுக்களை சரியாக அழிப்பதில்லை ஏனென்றால் அவைகள் விரைவில் எதிர்ப்பு சக்திக்குள்ளாகின்றன.

5) உயிரியல் கட்டுப்பாடு (Biological Control)

சிலவகை மீன்கள் கொசுக்களின் முட்டைப் புழுக்களை உணவாக்கிக் கொல்கின்றன. முக்கியமான மீன் ஜம்புசியா (Jambusia). இவை கொசுக்களின் மூட்டைகளை அழிக்க பயன்படுகின்றன.

முழுவளர்ச்சியடைந்த கொசுக்களுக்கு எதிரான முறைகள் (Antiadult measures)

முழுவளர்ச்சியடைந்த கொசுக்களை கட்டுப்படுத்துவதில் சுகாதாரப் பணியாளர்கள் பிரச்சனைகளை எதிர்நோக்கிகிறார்கள். கொசுக்கள் பலவிதங்களில் தொந்தரவு தரக்கூடியதும், நோய்களை பரப்பக் கூடியதும் ஆகும்.

முழுவளர்ச்சியடைந்த கொசுக்களை கட்டுப்படுத்த DDT, BHC லுயூடன், மாலதின் (Malattion) போன்றவை பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த பூச்சிக் கொல்லிகள் நீர்துளி (Spray) முறையில் அழுத்தத்துடன் பயன்படுத்தப்படுகின்றன.

வீடுகளில் மலேரியா கொசுவிற்கு எதிராக பயன்படுத்தப்படும் மருந்துகள்

மருந்து

அளவு cug/m2

பயன்படுத்தும் காலம்

DDT

102

6-12 மாதங்கள்

லின்டன்ஸ்

0.5

3 மாதங்கள்

மாலதியான்

2

3 மாதங்கள்

Oms-33

22

3 மாதங்கள்

ஆதாரம் : தமிழநாடு ஆசிரியர் பயிற்சி நிறுவனம்

கடைசியாக மாற்றப்பட்டது : 6/21/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate