பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சைக்குளோப் மற்றும் கொறித்துத் தின்னும் விலங்குகள்

சைகுளோப்கள் (Cyclops) மற்றும் கொறித்துத் தின்னும் விலங்குகளை (Rodents) கட்டுப்படுத்தும் முறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

கொறித்துத் தின்னும் விலங்குகள் கட்டுப்பாடு

பொறிவைத்தல் (Trapping) : எலிகளை பிடிப்பதற்கு நவீன முறையில் பயன்படுத்தும் கருவி எலி பொறி. பொறியில் எலி விழுந்த பிறகு அந்தப் பொறியை நீரில் மூழ்கடிக்க வேண்டும். பொறியின் மூலம் தற்காலிகமாக எலியின் எண்ணிக்கையை குறைக்கலாம். இதை அனைவரும் பயன் படுத்தினால், சிறந்ததாக அமையும். சில வேளைகளில் எலிகள் புத்திசாலித்தனத்துடன் பொறிகளில் விழாது.

எலிநச்சு (Rat Poison) : பேரியம் கார்பனேட் : இந்த நச்சு உணவு 4 பங்கு கோதுமை அல்லது அரிசி மாவுடன் ஒரு பங்கு பேரியம் கார்பனேட் கலந்து செய்யப்படுவதாகும். இந்தக் கலவையை நீருடன் சேர்த்து சிறிய வட்டவடிவ துண்டுகளாக உருவாக்க வேண்டும். இந்த நச்சு உணவை எலிவலைக்கருகிலும். மற்றும் எலி ஒடும் இடங்களிலும் வைக்கவேண்டும். இவற்றை சாப்பிட்ட 10-48 மணி நேரத்துக்குள் எலிகள் இறந்துவிடும்.

துத்தநாக பாஸ்பைடுகள் (Zinc phosphides) : இது 1 பங்கு துத்தநாக பாஸ்பைடுகளுடன் 20 பங்கு கோதுமை மாவு என்ற விகிதத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்துகள் அதிக நச்சுத்தன்மை வாய்ந்தவை. எலிகள் 3 மணி நேரத்திற்குள் இறந்துவிடும். இவைகளை தயாரிக்கும் போது பெரிய அளவில் முன்னெச்சரிக்கைகள் கையாளப்பட்டு, இரப்பர் கை உறைகள் பயன்படுத்தப் படவேண்டும். மீதியான மருந்துகள் காலையில் சேகரிக்கப்பட்டு, அடுத்த முறை பயன்படுத்தும் வரை பாதுகாப்பாக வைக்கப் படவேண்டும்.

புகையூட்டுதல் (Fumigation) : சையனோவாயு : கால்சியம் சையனைடு எலி வளைகளில் புகையூட்ட அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. 2 அவுன்ஸ் மருந்து ஒவ்வொரு எலி வளையிலும் சிறப்பான விசையேற்றி (Foot pump) மூலம் அடிக்கப் படுகிறது. எலிமேல் உள்ள தெள்ளுப்பூச்சிகள் கூட இந்த முறையில் கொல்லப்படும். புகையூட்டும் பணியைச் செய்யப் பயிற்சி பெற்ற பணியாட்கள் தேவை.

சுகாதாரத்தை மேம்படுத்துதல் (Improvement of Sanitation) : எலிக்கு உணவு, நீர் மற்றும் இருப்பிடம் ஆகிய மூன்றும் தேவை. இவை கிடைக்காவிட்டால் இயற்கையிலேயே இறந்துவிடும். மாறாக, சுற்றுப்புற சூழல் நன்றாக இருந்தால் எலிகளை நிரந்தரமாக கட்டுப்படுத்தலாம். இதற்கான முறைகள்

* சரிவர சேமித்து வைத்தலின் மூலம் உணவுப் பொருட்களை காத்திட வேண்டும்.

* எலிப்புகாத கிடங்குகள் மற்றும் தானிய சேமிப்பு இடங்களை அமைக்க வேண்டும்.

* குப்பையை சேகரித்து அகற்றுவதன் மூலம் எலிகள் இனம் பெருகுவதை தடுக்கலாம்.

* கட்டிடத்தில் உள்ள எல்லா ஒட்டைகளையும் அடைக்க (சிமெண்டால் பூசு வேண்டும்).

சைக்ளோப்களை கட்டுப்படுத்துதல்

1. இயற்பியல் முறை

வடிகட்டுதல் : தண்ணீரை மென்மையான துணியின் மூலம் வடிகட்டுவதால் போதிய அளவு சைகுளோப்கள் அகற்றப்படும். கொதிக்க வைத்தல் : 60°C வெப்பத்தில் நீர் கொதிக்க வைக்கப்படும்போது இவைகள் உடனே அழிக்கப்படும். இயற்பியல் முறை தனிப்பட்டவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

2. வேதியியல் முறை :

குளோரின் : குளோரின் 5 என்ற அளவில் சைகுளோப்களையும் புழுக்களின் லார்வாக்களையும் அழிக்கக்கூடியது. அதிக அளவில் மீதியான குளோரின் மருந்துகளை பயன்படுத்தி அகற்றப்பட வேண்டும்.

சுண்ணாம்பு : ஒரு காலன் நீருக்கு 4 கிராம் சுண்ணாம்பு என்ற அளவில் பயன்படுத்தினால், சைகுளோம்கள் உடனே அழிக்கப்படும்.

அபேட் : ஆர்கனோ பாஸ்பரஸ் என்பது பூச்சிக் கொல்லி மருந்து. ஒரு லிட்டர் நீரில் கலந்து பயன்படுத்துவதால் சைகுளோப்களை அழிக்கலாம். புழுக்களை கட்டுப் படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

2. உயிரியல் முறை : சிலவகை மீன்கள் (எ.டு) பார்பல் மீன் மற்றும் கம்பூசன் மீன் போன்றவை சைகுளோப்களை உணவாக்கிக் கொள்கின்றன. சைகுளோப்களை கட்டுப் படுத்துவதற்கு நம்பகமான நிரந்தர முறை : குடிக்கும் நீரை குழாய் மூலம் அனுப்புதல் மற்றும் ஆழ்துளை கிணறுகளை பயன்படுத்துவதாகும்.

ஆதாரம் : தமிழநாடு ஆசிரியர் பயிற்சி நிறுவனம்

Filed under:
3.42857142857
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top