பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தெள்ளுப்பூச்சிகள் மற்றும் உண்ணிகள்

தெள்ளுப்பூச்சிகள் மற்றும் உண்ணிகளை கட்டுப்படுத்தும் முறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

தெள்ளுப்பூச்சிகளை அழித்தல்

எலித்தெள்ளு புச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள்

1. பூச்சிக்கொல்லிகள்

* தெள்ளுப்பூச்சிகள் DDT தூள் அல்லது 57% மாலதியான் (Malation) தூளை ஸ்ப்ரே (Spray) செய்வதின் மூலம் விரைவாக கட்டுப்படுத்தலாம்.

* இந்த பூச்சிக்கொல்லி தூளை கம்பளம் அல்லது ஜமுக்காளங்களுக்கு அடியில், கோணிப்பைகளில் மற்றும் கிடங்குளில் தூவலாம்.

* இந்த தூளை எலிவளைகளில் தூவலாம்.

2. எலிகளை கட்டுப்படுத்துதல்

எலிகளை கட்டுப்படுத்தினால் தெள்ளுப் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

உண்ணிகள் (Ticks)

உண்ணிகளை கட்டுப்படுத்துதல் :

1. பூச்சிக்கொல்லிகள் : ஒரு ஏக்கர் பரப்பில் 1-2bs DDT லிண்டேன் அல்லது மாலதியான் தூளை தெளிப்பதன் மூலம் உண்ணிகளை கட்டுப்படுத்தலாம். நாய்கள் மற்றும் கால்நடைகள் வளர்ப்பு இடங்களில் இவ்வாறு பயன்படுத்தலாம்.

2. சுகாதாரம் (Sanitation) : தரையில் உள்ள வெடிப்புகள் மற்றும் விரிசல்கள் குறிப்பாக கட்டிடங்களில் உடனே நிரப்பப்படவேண்டும்

3. வேலையாட்களின் பாதுகாப்பு

*வேலை இடங்களில் வேலை செய்பவர்கள் பாதுகாப்பான உடைகளை அணியவேண்டும்.

*வேலை முடிந்தவுடன் உடலில் உண்ணிகள் ஒட்டிக் கொண்டுள்ளதா என்பதை பரிசோதித்து உடனே அகற்றி விடவேண்டும்.

சொறி சிரங்கு பூச்சி (Itchmite)

சொறி சிரங்கு பூச்சிகளை கட்டுப்படுத்துதல்

சொறி சிரங்குகளை கட்டுப்படுத்த குடும்பத்திலுள்ள அனைவருக்கும் சிகிச்சையளிக்கப்பட வேண்டும். நோயாளியை முதலில் சோப்பு, நீர் கொண்டு தேய்த்து கழுவ வேண்டும். பின்னர் கீழ்கண்ட மருந்துகளில் ஏதாவது ஒன்றைதடவலாம்.

* பென்சைல் பென்சோயட் (Benzylbenzeate) 25%

* சல்பர் களிம்பு 2-10%

• பென்சீன் எக்ஸா குளோரைடு (Benzene Hexachloride) 0.5%

ஆதாரம் : தமிழநாடு ஆசிரியர் பயிற்சி நிறுவனம்

Filed under:
2.82352941176
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top