অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

பூச்சிகள் மூலம் நோய் பரவும் முறைகள்

பூச்சிகள் மூலம் நோய் பரவும் முறைகள்

அறிமுகம்

சுற்றுசூழலில் பூச்சிகள் எண்ணிக்கையற்ற வகைகளில் காணப்படுகின்றன. பூக்களின் மகரந்த சேர்க்கைக்கு உதவியாக பூச்சிகள் இருக்கின்றன. பொதுவாக பூச்சிகள் மனிதனுக்கு பயனுள்ளவைகளாக இருக்கின்றன. ஆனால் அதே சமயத்தில் கேடு விளைவிக்கக் கூடியவைகளாகவும் இருக்கின்றன. அவைகள் தானியங்கள் மற்றும் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை அழிக்கக்கூடியதாகவும் மற்றும் ஒரு சில நோயை கடத்தக்கூடிய அல்லது சுமக்கக்கூடியவைகளாக காணப்படுகின்றன. பூச்சிகளைப் பற்றி மருத்துவத் துறையில் படிப்பதற்கு மருத்துவ பூச்சியியல் (medical entomology) எனப்படும். இவை நோய் தடுப்பு மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

நோய் உண்டாக்கும் பூச்சிகளின் சில வகைகள்

1. கொசுக்கள்

*அனோபிலிஸ்

*க்யூலெக்ஸ் (Calex)

2. ஈக்கள்

*வீட்டுஈக்கள்

*மணல் ஈக்கள்

* டெஸ்டீ ஈக்கள்

* கருப்பு ஈக்கள்

3. மனிதப்பேன் (Humanlice)

* தலை மற்றும் சீலை (அ) உடம்புபேன்

* பொதுவான (அ) நண்டுபேன்.

4. தெள்ளுப்பூச்சிகள் (Fleas)

* எலி தெள்ளுப்பூச்சிகள்

* மணல் தெள்ளுபூச்சிகள்

5. மூட்டை பூச்சிகள் (Bugs)

6. உண்ணிகள் (Ticks)

* கடின உண்ணிகள் (Hardticks)

* மென்மையான உண்ணிகள் (Soft Ticks)

7. சிறு பூச்சிகள் (Mites)

* லெப்டோ டிராம்பிடியம் பூச்சி (Leptotrombidiammites)

* டிராம்பிருலெய்டு பூச்சி (Trombicutidmity)

* சொறி பூச்சி (Itchmite)

8. சைகுளோப்கள் (Cyclops)

9. கொறித்துத் தின்னும் விலங்குகள் (Rodents)

பூச்சிகளின் மூலம் பரவும் நோய்கள் (Arthropod Borne diseases)

இந்தியாவின் சுகாதார பிரச்சனையில் பூச்சிகளின் மூலம் பரவும் நோய்களும் ஒன்று. பூச்சிகளின் மூலம் பரவும் நோய்கள் கீழே அட்டவணையில் காட்டப்பட்டுள்ளன.

பூச்சிகள்

பரவும் நோய்கள்

1. கொசு

மலேரியா, பைலேரியா, ஜப்பானிய மூளைக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல், டெங்கு இரத்தக்கசிவு காய்ச்சல் (Dengue haemorrahagic fever)

2. ஈக்கள்

டைபாய்டு காய்ச்சல், பேதி, சீதபேதி, காலரா, இரைப்பை குடல் சார்ந்த நோய்கள், அமீபாதொற்று (amoebiasis), புழுக்களின் நோய், இமைப்படலத்தில் அழற்சி (Conjunctivitis) மற்றும் இமை அரிப்பு நோய்

3.மணல் ஈ (Sandfly)

காலா அசார், காய்ச்சல் (Kala-Zar)

4.டிசெட்சி ஈ (Tsetsefly)

தூக்க சுகவீனம் (Sleeping Sickness)

5. பேன்

பேன் தொல்லை, பரவும் நச்சுக்காய்ச்சல் (Epidemic Typhus) ட்ரென்ச் காய்ச்சல் (Trenchfever)

6.எலிதெள்ளு பூச்சி(RatFlea )

பியூபோனிக் பிளேக் நச்சுக் காய்ச்சல், சிஜரோசிஸ் (Chriggerosis)

7.கருப்பு (BlackFly)

ஆன்கோ செர்சியாசிஸ் (Onchocerciasis)

8. மூட்டைப்பூச்சி

சாகஸ் நோய் (Chagas Disease)

9. கடின உண்ணி (Hardtick)

உண்ணிநச்சுக் காய்ச்சல், நச்சு மூளை உறை வேக்காடு, திமிர்வாத உண்ணி நோய்

10. மென்மை உண்ணி (Soft tick)

கியூ காய்ச்சல் (QFever), பிணியில் வீழ்த்தும் காய்ச்சல் (Relapsing fever)

11.டிராம்பிகுலெய்டு பூச்சி(Trombiculiadmite)

சொறியும் நச்சு காய்ச்சல் (Ricketlsial-pox)

12. இச்சிமைட் (Itch-mite)

சிரங்கு

13. சைகுளோப்கள் (Cyclops)

புழுக்கள் மற்றும் நாடாப் புழுக்களின் நோய்தொற்று

14. கரப்பான் பூச்சி

குடல் சம்பந்தப்பட்ட நோய்த் தொற்று

பூச்சிகள் மூலம் நோய் பரவும் முறைகள் (Transmission of arthropodborne diseases)

பூச்சிகளின் மூலம் பரவும் நோய்கள் மூன்று வகைகளில் பரவுகின்றன.

1. நேரிடைத் தொடர்பு (Direct Contact) : இந்த முறையில் பூச்சிகள் ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு நெருங்கிய தொடர்பில் பரவுகின்றன. (எ.டு) சொறி சிரங்கு மற்றம் பேன் தொல்லை

2. இயந்திர முறையில் பரவுதல் (Mechanical Transmissions) : நோய்க்காரணிகள் இயந்திர முறையில் கடத்தப்படுகின்றன. பேதி, சீதபேதி, டைபாய்டு, உணவுநச்சு மற்றும் இமை அரிப்பு போன்றவை இயந்தர முறையில் ஈக்களின் மூலம் கடத்தியால் பரவுகின்றன.

3. உயிரியல் முறையில் பரவுதல் (Biological Transmission) : பூச்சிகளுக்குள்ளே நோய்க்கான காரணிகள் விருத்தியடைதல் அல்லது வளர்ச்சி மாற்றங்களை அடைதலுக்கு உயிரியல் முறையில் பரவுதல் என்று பெயர். இது மூன்று வகைப்படும்.

a. இனப்பெருக்கம் (Propagative) : நோய்க்கான காரணி அல்லது நுண்மம் எந்த மாற்றமும் அடையாமல் கடத்தியின் உடலில் இனப்பெருக்கமடைவதை இனப்பெருக்க முறை எனப்படும் (எ.டு.) எலி தெள்ளுப்பூச்சியில் பிளேக் பேசிலஸ்

b. சுழற்சி இனப்பெருக்கமுறை (Cyclopropagative) : பூச்சியின் உடலில் நோய்க்காரணி பல மாற்றங்களை அடைந்து இனப்பெருக்கம் செய்யும். (எ.டு) அனாபிலஸ் கொசுவில் மலேரியா ஒட்டுண்ணி

C. வளர்ச்சி மாற்றம் (Cyclo-development) : நோய்க்கான காரணி அல்லது நுண்மம் வளர்ச்சி மாற்றங்களை அடையும். ஆனால் பூச்சியின் உடலில் இனப்பெருக்கம் அடையாது (எ.டு) கியூலெக்ஸ் கொசுவில் பைலேரியா ஒட்டுண்ணி

பூச்சிகளை கட்டுப்படுத்துவதின் கொள்கைகள் (Principles of arthropod Control)

பூச்சிகளை கட்டுப்படுத்துவதின் பொதுவான கொள்கைகள்

a. சுற்றுசூழல் கட்டுப்பாடு

b. வேதியல் கட்டுப்பாடு (அ) இரசாயணக்கட்டுப்பாடு

C. உயிரியல் கட்டுப்பாடு

d. மரபுக் கட்டுப்பாடு .

e. புதிய முறைகள்

a). சுற்றுசூழல் கட்டுப்பாடு

*சுற்றுசூழல் கட்டுப்பாடு

இந்த முறையில் பூச்சிகள் சிறந்த அணுகு முறையில் கட்டுப்படுத்தப்படும் ஏனென்றால் இது நிரந்தரமான ஒன்று. சுற்று சூழல் மேம்பாட்டிற்கு எடுத்துக்காட்டுகளாவன.

* கொசுக்கள், ஈக்கள் பெருகும் இடங்களை அழித்தல்.

* பள்ளங்கள் நிரப்பப்பட்டு, வடிகால் ஏற்பாடு செய்ய வேண்டும்.

* சரியான நீர் வழங்கீடு

* பாதுகாக்கப்பட்ட குடிநீரை குழாய் மூலம் பயன்படுத்தல்

* கழிவுகளையும், கழிவுப் பொருட்களையும் சரியான முறையில் அகற்றுதல்

* வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக பேணுதல்

b. இரசாயனக் கட்டுப்பாடு : குளோரின், பாஸ்பரஸ் மற்றும் கார்பனேட் அடங்கிய வேதிப்பொருட்களும் பூச்சிகொல்லி மருந்துகளும் நுண்மம் கடத்திகளை அழிக்கக்கூடியது. இந்த வேதிப்பொருட்கள் சுற்றுசூழலை பாதிக்கக்கூடியதாக இருப்பதால், முக்கியமாக இவைகள் மாற்றப்பட்டு DDT போன்றவைகளை பயன்படுத்தலாம். மேலும் சிதைக்கக்கூடியதும், மனிதனுக்கும் விலங்குக்கும் குறைந்த நச்சு விளைவை ஏற்படுத்தக்கூடிய மீத்தைல் குளோர், அபேட் (Abate) போன்றவைகளை பயன்படுத்தலாம்.

c. உயிரியல் கட்டுப்பாடு : உயிரியல் கட்டுப்பாட்டு முறையில் சுற்றுசூழல் மாசுபடுவதை குறைக்கலாம். சிலவகை மீனை வளர்க்கலாம். அவை முட்டைப் புழுக்களை உணவாக்கிக் கொள்ளும். ஒரு சில பூஞ்சைகள் கொசுக்களை அழிக்கக்கூடியது.

d. மரபுக்கட்டுப்பாடு : புதுடெல்லியில் உள்ள WHO ICMR ஆராய்ச்சி நிறுவனங்கள் அதிக அளவில் மரபுமுறையில் கொசுக்களை கட்டுப்படுத்த முயல்கிறது. ஆண் கொசு கருத்தடை குரோமோசோம் இடமாற்றம், சைட்டோ பிளாஸ்மிக் இன்கம்டபிலிட்டி ஆகியவை நல்ல பலனைத் தந்துள்ளன.

e. புதிய முறைகள் (Newermethods) : புதுமையான முறைகள் பூச்சிகளை கட்டுப்படுத்த கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை

a). பூச்சிகளை வளர்ச்சியை கட்டுப்படுத்துதல்

b) மருத்துவ முறையில் கருத்தடை (Chemosterilants)

C) இன ஈர்ப்பு சக்தி (Sex attractants arPheromones)

ஆதாரம் : தமிழநாடு ஆசிரியர் பயிற்சி நிறுவனம்

கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate