অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

ஆயுர்வேதம்

ஆயுர்வேதம்

ஆயுர்வேதம் – அடிப்படை

ஆயுர் வேதம் இந்திய துணை கண்டத்தின் பழமையான மருத்துவ முறை ஆகும். சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் உருவானது. ஆயுர்வேதம் என்ற சொல்லானது “வாழ்க்கை அறிவியல்”என்றுப்பொருள்படும். இது சமஸ்கிருத வார்த்தைகளான “ஆயுஸ்”என்பது வாழ்க்கை என்றும் வேதா என்பது அறிவியல் என்றும் இரண்டும் சேர்த்து ஆயுர்வேதம் ஆனது. மற்ற மருத்துவ முறைகள் போல் அல்லாமல் ஆயுர்வேத முறையில் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது உடல் ஆரோக்கியத்தை மேம்பட செய்கிறது. ஆயுர்வேதத்திற்கு முக்கிய நோக்கமே தேக சம்மந்தமான நோய்களை குணமாக்ககூடியது.

ஆயுர் வேதத்தின் நெறிப்படி மனித உடலானது நான்கு அடிப்படைகளை கொண்டதாகும். அவை தோசா, தத்து, மலம் மற்றும் அக்னி. ஆயுர்வேதத்தில் உடல் அமைப்பு அடிப்படைகள், மிகப்பெரிய சிறப்பான அம்சங்கள் ஆயுர்வேதத்தில் உள்ளடங்கியுள்ளது. இவை “மூலசித்தாந்த” அல்லது ஆயுர்வேத சிகிச்சை அடிப்படைகள் என்று அழைக்கபடுகின்றது.

தோசா

தோசா மூன்று முக்கிய பிரிவுகள் கொண்டது. அவை வாதம், பித்தம் மற்றும் கபம் எனப்படுகிறது. இது மூன்றும் உடலை அழிக்கும் மற்றும் உட்சேர்க்கைக்குரிய வளர் சிதை மாற்றங்களை கட்டுப்படுத்தவும், மாற்றவும் வல்லவை, உடல் முழுவதும் செரிக்கின்ற உணவுகளின் செயல்பாடாகவும் உள்ளது. இது உடலின் கட்டமைப்பிற்கு உதவுகின்றது. இந்த தோசத்தில் குறைபாடுகள உண்டாவதினால் உடலில் நோய்கள் உண்டாகிறது.

தாது

தாது என்பது உடலுக்கு உறுதுனையாக இருப்பது ஆகும். இது உடலில் ஏழு திசு அமைப்புகளாக உள்ளன. அவைகள் ரசம், அக்டா, மம்சா, மெடா, அஸ்தி, மிஜா, சுக்ரா ஆகியவைகளை ரத்தம், சதை, கொழுப்பு, திசுக்கள், எலும்பு, எலும்பு மஜ்ஜை மற்றும் விந்துக்கள் என அழைக்கப்படுகிறது. இந்த தாதுக்கள் உடலுக்கு அடிப்படை ஊட்டச்சத்தினை மட்டுமே அளிக்கும். மனநிலை மற்றும் அதன் வளர்ச்சிக்கும் உடல் கட்டமைப்பிற்கும் உதவுகிறது.

மலம்

மலம் என்பது உடலின் கழிவு பொருட்கள், அல்லது அழுக்கை குறிக்கிறது. இது உடலின் மூன்றின் தொகுதிகளில் மூன்றாக உள்ளது. மலம், சிறுநீர் மற்றும் வியர்வை என மலம் வகைபடுத்தலாம். உடலில் இருந்து வெளியேற்றும் கழிவுப்பொருட்கள முறையாக வெளியேற்றுவது உடல் நலனுக்கு அத்யாவசியமாகும். மலத்தில் இரண்டு வகைகள் உண்டு. அவை மலம் மற்றும் கிட்டா. மலம் என்பது உடலில் ஏற்படும் கழிவு , கிட்டா என்பது தாதுவின் கழிவுப்பொருட்களாகும்.

அக்னி

அக்னி உடலின் வளர்சிதை மற்றும் செரிமான செயல்பாடு அனைத்தும் உடலின் உயிரியல் தீயினால் நடப்பவையே ஆகும். அக்னி அடிப்படையாக உடலின் கால்வாய், கல்லீரல் மற்றும் திசு செல்களில் பல்வேறு என்சைம்கள் உள்ளன.

உடல் ஒருங்கினைப்பு அமைப்பு

ஆயுர் வேதத்தில் வாழ்க்கை உடலின் புத்தி, மனம் மற்றும் ஆன்மா, உணர்வு இவை நான்கும் உடலின் கூட்டு வேலையாகும். வாழும் மனிதன் மூன்றில் ஒன்றாக திரளுதல்(வாதம், பித்தம் மற்றும் கபம்) அடிப்படை திசுக்கள் (ரசம், ரத்தம், மஜ்ஜை, எலும்பு, கொழுப்புதசை, எலும்பு மஜ்ஜை மற்றும் விந்து)மற்றும் உடலின் கழிவு உற்பத்தியில் சிறுநீர், வியர்வை போன்றவை கழிவுப் பொருட்களாக உள்ளது. இதனால் மொத்த உடலில், உருவாகும். கழிவுகளை வெளியேற்றுவதால் உடலை ஆரோக்கியமாக இருக்கச் செய்கிறது. இந்த உடல் ஒருங்கினைப்பு அமைப்பு மற்றும் அதன் உட்பொருள்களை வளர்ச்சி மற்றும் அந்த கழிவுகள் செயல்படுத்த முடியும். இது உணவு உட்கொள்வது செரிமானம், உறிஞ்சுதல், ஜீரணம் மற்றும் வளர் சிதை மாற்றம் குறிப்பிடத்தக்க உயிர் (அக்னி) மூலம் உளவியல் இயல் அமைப்புகள் மூலம் நோயை குணப்படுத்தமுடியும்.

பஞ்ச மஹா புத்தாஸ்

ஆயுள் வேதத்தின்படி மனித உடலானது பிரபஞ்சத்தின் அடிப்படை கூறுகளை கொண்டிருக்கிறன. அவை பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகும். உடல் நலம் மற்றும் உடல் உறுப்புகளில் இவை உடலின் கட்டமைப்பிற்கு தேவைகேற்ப சீரான முறையில் வெவ்வேறு விகிதங்களில் உடலில் அமைந்துள்ளது. உடலின் அணி வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியானது உணவு மற்றும் அதன் ஊட்டச்சத்தினை சார்ந்திருக்கின்றன . (எ. கா) நாம் உண்ணும் உணவில் அடிப்படை கூறுகளை கொண்டுள்ளது. இவை உயிர் தீயினால் எரிக்கப்பட்டு பின்பு அவை உடலின் கூறுகளை வளப்படுத்துவதற்கு உதவுகிறது.

உடல் நலம் மற்றும் நோய்

உடல் நலம் மற்றும் நோயானது உடலின் பல்வேறு உட்பொருட்களின்¬ இடையே சமநிலை மற்றும் மொத்த உடல் அணியும் ஒரு சீரான நிலையில் இருப்பது அல்லது இல்லாமல் இருப்பது பொறுத்து சார்ந்திருக்கிறது. உடலின் உள் மற்றும் வெளிப்புற காரணிகளும் உடலின் இயற்கையான சமநிலையில் தொந்ததரவு உண்டாக்கி நோய்களை உருவாக்க முடியும். இந்த சமநிலை இழப்பானது முறையில்லாத உணவு முறை, விரும்பத்தகாத பழக்கம் , மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையில் கவனம் செலுத்தாமை, ஆகியவைகளினால் ஏற்படுகிறது. பருவ கால இயல்பு, முறையற்ற உடற்பயிற்சி அல்லது உடலின் உறுப்புகளின் ஒழுங்கற்ற பழக்கவழ்க்கங்கள் இந்த தகுதியில்லாத செயல்களினால் உடலிலும், மனதலிலும் , உடல் சமநிலையில் குழப்பம் உண்டாக்கும். உடலில் மற்றும் கடினமான மன இறுக்கம் சரியான வாழ்க்கை முறை , நன்னடத்தை போன்றவை பஞ்சகர்மா மற்றும் ரசாயன தீர்வுக்குள்ளது.

நோயறிதல்

ஆயுர் வேதத்தில் உடல் பரிசோதனையில் எப்போதும் தனி குறிப்பிட்ட உறுப்பை மட்டும் பரிசோதிக்காமல் முழு உடலையும் பரிசோதிப்பார். மருத்துவர் மிக கவனமாக நோயாளிகளின் உடல் உறுப்புகளில் செயல், மனநிலை ஒழுங்கு ஆகியவற்றில் கவனம் செலுத்துவர் பாதிக்கப்பட்ட உடல் திசுக்கள், உடல் உறுப்புகளில் எந்த நோய் எந்த இடத்தில் பாதிப்பு உள்ளது. எந்த தளத்தில் அமைந்துள்ளது என பரிசோதனை செய்வர். உடலின் மூலக்கூறு (திசுக்கள்)இருப்பிடம், தினசரி வேலை முறை, உணவு பழக்கவழக்கங்கள் சமூக பொருளாதார மற்றும் நோயாளியின் சுற்று சூழல், போன்ற நிலைமைகளுக்கு கீழ்கண்டவாறு பரிசோதனையில் செய்யப்படுகிறது:

  • பொது உடல் பரிசோதனை
  • துடிப்பு பரிசோதனை
  • சிறுநீர் பரிசோதனை
  • மலம் பரிசோதனை கண்கள் மற்றும் நாக்கு பரிசோதனை
  • தொட்டுணரக்க்கூடிய மற்றும் செவிப்புலன் செயல்பாடு பரிசோதனை ஆகும்.

சிகிச்சை

அடிப்படையாக சிகிச்சை முறை தனிமைபடுத்தி அணுகுவது ஆகும். இப்படி நோயாளியை தனிமையாக்கி சிகிச்சை அளிக்கும் மருத்துவரால், இயல்பாக சுத்ந்திரமாக நோயாளியை நோயில் இருந்து விடுவித்து உடல் நலத்தைஅளிக்கிறார. ஆயுர்வேதாவின் உயர் பணி குறிக்கோள் உடல் நலத்தை பேணி, நலத்தை மேம்படுத்தி, நோய்தடுப்பு, நோயை குணமாக்குதல் ஆகும்.

ஒவ்வொரு உடலிலும் நோய்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை –நோய் உண்டான காரணம், உண்டான இடம், பஞ்சகர்ம விதிமுறைகளின்படி மருந்துகள், சரியான உணவு பழக்கம், செயல் மற்றும் நடப்பு முறை , சமநிலையை திரும்ப அடைதல், உடலை வலிமையாக்குதல், போன்றவைகளை கூடிய வரை எதிர் காலத்தில் சரி செய்ய முடியும்.

சிகிச்சை பொதுவாக மருந்துகளை எடுத்துக்கொள்ளும் போது , குறிப்பிட்ட உணவு கட்டுபாடு , பரிந்துரைக்கப்பட்ட செயல்பாடு இந்த மூன்று நடவடிக்களை பயன்படுத்த இரண்டு வழிகளை கையாளப்படுகிறது. முதல அணுகு முறையானது நோய் எதிர்ப்பு தூண்டுதலை கணக்கிட்டு , நோயின் காரணத்தின் உண்மையை கண்டறிந்து நோயின் வெளிப்பாடுகள் வைத்து கையாளப்படுகிறது. இரண்டாவது அணுகுமுறையில் மருந்து , உணவு மற்றும் செயல்பாடு ஆகிய மூன்று நடவடிக்கைகளை கொண்டு நோய்களுக்கான காரணிகள் மற்றும் வெளிப்பாடுகள் போன்ற விளைவுகளை சரி செய்ய கையாளப்படுகிறது. சிகிச்சை அணுகு முறைகளை இந்த இரண்டு வகையான முறையே “விப்ரீட்டர்”மற்றும் ‘விப்ரீட்டத்தகரி’ சிகிச்சைகள் என்ப்படுகின்றன.

சிகிச்சைகள் வெற்றிகரமாக அமைய நான்கு விசயங்கள் அத்தியாவசியமாக உள்ளன. அவைகள்:

  1. மருத்துவர்
  2. மருந்து எடுத்துக்கொள்ளுதல்
  3. மருத்துவ பணியாளர்கள்
  4. நோயாளி

இதில் முதல் வருபவர் மருத்துவர் ஆவார். அவர் தொழிநுட்ப திறன், விஞ்ஞான அறிவு, தூய்மை மற்றும் மனிதனா புரிந்து கொள்ளும் , அறிவுகூர்மை மற்றும் மனிதன் சேவை செய்பவராக இருக்க வேண்டும். அடுத்ததாக பயன்படுத்தும் மருந்துகள் உயர்ந்த தரத்துடன் போதுமான அளவுடன் , பரவலாகவும் கிடைக்க வேண்டும். மூன்றாவதாக மருத்துவமனை ஊழியர்கள் பங்கு ஆகும். பாசம், அனுதாபம், அறிவார்ந்த , சுத்தமான மற்றும் சமயோசிதம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் . நான்காவதாக நோயாளியின தன்னை கூட்டு ஒத்துழைப்பு ஏற்றுக்கொள்ளும் மனநிலையுடன் மருத்துவரிடம் தன்நிலையை எடுத்துக்கூறுதல் வேண்டும்.

ஆயுர்வேதம் நோய் காரணியின் இறுதியாக உள்ள கடைசி அறிகுறிகள் தெரியும் வரை செயல்படுகிறது. உண்மையான விளைவுகளை கண்டறிந்து. வெளிப்படையான மருத்துவத்தை செய்வதன் மூலம் நோயாளி குணமாக்கப்படுகிறார்.

சிகிச்சை வகைகள்

சோதானா திரபி - (தூய்மையாக்குதல் சிகிச்சை)

சோதானா திரபி சிகிச்சையின் நோக்கம் உடலுக்குரிய மற்றும் உளவழி உடல் நோய்கள் காரனமாயிருக்க கூடிய காரணிகள் அகற்றப்பட முயல்கிறது. வழ்க்கமாக செயல்முறை உட்புற மற்றும் வெளிப்புற செயல்முறைகளால் சுத்திகரிப்பு ஈடுபடுத்துகிறது. இதில் வழக்கமான நடைமுறைகள் பஞ்சகர்மா மருத்துவரீதியாக, தூண்டப்பட்ட வாந்தி, மலம் கழித்தல், எண்ணெய், எணிமா மருந்துகள், வடிநீர், காபி, தண்ணீர், கழுவல் மற்றும் மூக்குசுத்தம் செய்தல், பஞ்சகர்மா நடைமுறைகள் உள்ளன. பஞ்சகர்மா சிகிச்சை, ஊண்மை ஆக்க இதை மாறுபாடு மேலாண்மை செலுத்துகிறது. இது நோய்தாக்குதலை குணப்படுத்தி நலனை கொடுக்கிறது. இந்த சிகிச்சை நரம்பியல் கோளாருகள் எலும்பு நோய் நிலைகள் சில் வாஸ்குலார் அல்லது நரம்பியல் வாஸ்குலார், சுவாச நோய்கள், வளர்சிதை மற்றும் சிதைகின்ற குறைபாடுகள் பயனுள்ளதாக இருக்கும்.

சாமானா திரபி - (நோய்க்குறி நீக்கல் சிகிச்சை)

உடலின் மூலக்கூறுகளில் (தோசாய்) முறையில் நோய் தடுப்பு முறை கையாளப்படுகிறது. சாமானா சிகிச்சை உடலில் உள்ள தோசங்களான வாதம், பித்தம் மற்றும் கபத்தினை சீர்படுத்துகிறது. இந்த சிகிச்சை முழுமை அடைந்த பிறகு பசிஎடுக்கக்கூடிய உனவுகளையும், உடற்பயிற்சி மற்றும் சிகிச்சை தனிப்பான தூக்கமருந்துகளும், சூரிய குழியல் மற்றும் சுத்தமான காற்றை பெருதல் மூலமும் தணிப்பான்கள் மற்றும் தூக்க மருந்துகளும் உபயோகிக்கப்படுகிறது.

பாதியா வய வாஸ்தா - (உணவு மற்றும் செயல்பாடு பரிந்துரை)

பாதியா வய வாஸ்தா உணவு, செயல்பாடு, பழக்கம், உணர்ச்சி நிலை, தொடர்பான அறிகுறிகள் மற்றும் எதிர் அடையாளங்கள் கொண்டிருக்கிறது. இந்த சிகிச்சை நோய் காரணிகளை நடவடிக்கைகளை, விளைவுகளை அதிகரிக்க மற்றும் செயல் முறைகளை தாமதபடுத்துவதற்கும் உதவுகிறது. செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாதவை முக்கியத்துவம் ஆகும் மற்றும் உணவு போன்றவை திசுக்களின் வலிமை உறுதிபடுத்துவதற்காக செரிமானம் மற்றும் உணவு ஜீரணம், உடல் மூலக்கூறுக்களுக்கு உகந்தாக உள்ளது.

நிதான் பரிவர்ஜன் - (நோய் தவிர்த்தல், காரணிகள் காரணமாக அதிகரிக்க கூடியவைகளாகும்)

உணவு மற்றும் நோயாளியின் வாழ்க்கை முறை காரணமாக அறியப்பட்டு தரும் சிகிச்சை நோய்களை தவிர்க்க வள்ளவை. இது நோய் காரணிகளை அதிகரிக்கக்கூடியவைகளை தவிர்த்தல் ஆகும்.

சத்வ வாஜாய - (உளவியல்)

இது மன தொந்தரவுகளாக கருதப்படுகிறது. ’கவலைகள்’ இந்த வியாதிக்குண்டாக்கின்ற கூறுகள் மற்றும் தைரியம் நினைவாற்றல் மற்றும் மனதின் ஆசைகள் இருந்து மனதை கட்டுப்படுத்தி உள்ளடக்கிறது. உளவியல் மற்றும் உளவியல் ஆய்வு, ஆயுர் வேதம் விரிவாக வளர் சிதை மற்றும் மன நோய்களுக்கான சிகிச்சை அணுகு முறைகள் கொண்டுள்ளது.

இரசாயான சிகிச்சை

இரசாயான சிகிச்சையானது வலிமை மற்றும் உற்சாகத்தை அளிக்கிறது. மேலும் இச்சிகிச்சை மூலம் நினைவு திறன், அறிவு கூர்மை, நோய் எதிர்ப்பு, சக்தி அதிகரித்தல், இளமையை பாதுக்காத்தல் உடலிற்கு பலன் தரும் சக்தினை அளித்தல், சாதகமாக உணர்தல் முதலியன இச்சிகிச்சையின் சிறப்புகளாகும். உடல் தசை கழிதலை தடுத்தல் போன்ற கூடுதலான பலன்களை இந்த சிகிச்சையில் அடையாளம் படு விரைவாக, உடலில் திசு வளர்ச்சியை உருவாக்கி உடல் முழுவதும் நலத்தோடு இருக்க இரசாயன தெரபி பங்கு கொள்கிறது.

உணவு மற்றும் ஆயுர் வேத சிகிச்சை

ஆயுர்வேதம் சிகிச்சையில் உணவுக்கட்டுபாடு பெரும் பங்கினை வகிக்கின்றது. ஏனெனில் மனித உடலானது உணவை பொறுத்தே உள்ளது. அத்துடன் அவரது குணமும் தனி நபர்கள் மனம் மற்றும் ஆன்மீக வளர்ச்சி போன்றவற்றை பொறுத்து அமையும். உண்ணும் உணவு உடலில் பல மாறுதல்களை அடைகிறது. முதலில் உடலில் சாராகவும், இரத்தமாகவும், பின் தசை, கொழுப்பு, எழும்பு, எழும்பு மஜ்ஜை, இனப்பெருக்க உறுப்புகளில் பங்கு கொள்கிறது. இதனால் உணவு அனைத்து வளர் சிதை மாற்றம் மற்றும் வாழ்க்கை நடவடிக்கைகள் அடிப்படையில் உள்ளது. சத்துக்குறைவான உணவு, முறையற்ற உணவு, நோய் நிலைமைகளுக்கு வழிவகுக்கும்.

இந்திய அளவிலான ஆயுற்வேத நிறுவனங்கள்

ராஸ்டிரிய ஆயுர்வேத வித்யதீபம், டெல்லி
  • ராஸ்டிரிய ஆயிர்வத வித்யதீபம் ஆயுஸ் துறை, உடல்நலம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்க்கும் 1860 சொசைட்டி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஓர் அமைப்பாகும்.
  • இது பாரம்பரிய கல்வி முறையான குரு, சிஷ்ய முறையில் 28 வயதுக்குள்ளும், ஆயுற்வேதத்தில் பட்டப்படிப்பு முடித்தவரும், 33 வயதுக்குள்ளும் ஆயுற்வேதத்தில் முழுகலை பட்டப்படிப்பு முடித்தவருக்கும் மேம்படுத்தப்பட்ட நடைமுறையிலான பயிர்ச்சிகள் அளிக்கின்றனர்.
  • ஆயுற்வேத விளக்கவுரையாளர்கள், ஆசிரியர்கள் , ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சாம்கித இலக்கிய அராய்ச்சி முதலியவற்றில் இரண்டு வருட படிப்பினை வழங்குகின்றனர், முதுநிலை பட்டயம் முடித்தவர்களே இதில் சேரமுடியும், அவர்கள் விருப்பப்பட்ட தலைப்புகளில் ஆராய்ச்சியை மேற்கொள்ளலாம், அவர்களுக்கு தேவையான நேரமும் ஒதுக்கப்படுகிறது.
  • இங்கு வழங்கப்படும் ஒருவருட சான்றிதல் படிப்பில் BAMS அல்லது அதற்கு இனையான படிப்பினை முடித்தவர்களுக்கு கைதேர்ந்த ஆயிர்வேத வைத்தியர்கள், பரம்பரை பயிற்சியாளர்கள் மூலம் சிறந்த பயிற்ச்சி அளிக்கப்படுகிறது.
  • இங்கு பயிற்றுவிக்கப்படும் இரு படிப்புகளும் அறிவிப்பிற்கு பின் இந்திய அளவிலான எலுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் மாணவர்கள் தேர்வுசெய்யப்படுகிறார்கள். இங்கு இருபடிப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ. 15820 உதவித்ஹ்தொகையாக DA வுடன் அளிக்கப்படுகின்றது. ராஷ்டிரிய ஆயுர்வேதத வித்யதீப உறுப்பினர்களாக உள்ள மாணவர்களுக்கு கூடுதலாக மாதம் 2500ரூ அளிக்கப்படுகின்றது.

தேசிய அளவிலான அயுற்வேத நிறுவனம் ஜெய்பூர்

  • தேசிய அளவிலான ஆயுர்வேத நிறுவனம். 1976ல் பயிற்றுவித்தல் உயர்ந்ததரத்தை உருவாக்குவதாகும், பயிற்ச்சியை பெறுவதர்க்கும், ஆயுற்வேதத்தில் உள்ள அனைத்து நிலைகளிலும் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கும் நிறுவப்பட்டது.
  • இந்நிறுவனம் இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் பட்டத்தை இராஜஸ்தான் ஆயுற்வேத பழ்கலைகளகத்தின் கீழ் அளிக்கிறது.
  • ஆயுற்வேதத்தில் இளநிலை படிப்பான BAMS ற்கு இந்திய அளவிலான நுலைவுத்தேர்வு பழ்களைகழகத்தினால் நடத்தப்படுகின்றது. முதுநிலை படிப்பிற்கு இந்திய அளவிலான முதுநிலை படிப்பிற்கு இந்திய அளவிலான இனைந்து முதிநிலை எழுத்துத்தேர்வு AIA மற்றும் IPGTRA மூலம் நடைபெறுகிறது.
முதுநிலை கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிநிறுவனம், ஜாம்நகர், குஜராத்

குஜராத் ஆயுற்வேத பழ்களைக்கழகம் முதுநிலை பயிற்ச்சி மற்றும் ஆராய்ச்சிநிறுவனமாகும்.

  • முதுநிலை பயிற்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் மிகவும் பழமையான நிறுவனமான குஜராத் ஆயுற்வேத பல்களைகழகத்தின் உறுப்புநிறுவனமாகும்.
  • இந்த நிறுவனத்தின் மருத்துவமனைகள் உட்புற மற்றும் வெளிப்புற வசதிகளுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறது. பஞ்சகர்மா, கரசுற்றம், கிரியாகல்பா முதலிய விஷேச மருத்துவசிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன.

கடைசியாக மாற்றப்பட்டது : 7/6/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate