பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

செலவில்லா சித்த மருத்துவம்

செலவில்லா சித்த மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

1. குழந்தைகள் தலைபொடுகுக்கு

சீயக்காய் 250 கிராம், செம்பருத்தி இலை காய்வு 250 கிராம், வெந்தயம் 100 கிராம், இம்மூன்றையும் பவுடராக்கி வாரம் மூன்று முறை தலைக்கு தேய்த்து வர பொடுகு நீங்கி விடும்.

2. குழந்தைகளின் விதை வீக்கத்திற்கு

நொச்சி இலை 10 கிராம், வெள்ளைப் பூண்டு 5 பல்லு, முட்டை வெண்கரு ½ பாகம், களச்சிகாய் 5 கிராம் சேர்த்து அரைத்து விதை பாகத்தில் போட்டு வர வீக்கம் வத்தும்.

3. குழந்தைகளுக்கு நீர் கடுப்பு, எரிச்சல் இருந்தால்

அதிமதுரத்தையும், இலவங்கப் பட்டையையும் பொடித்து தேனில் குழைத்து கொடுத்து வர குணமாகும்.

4. குழந்தைகளுக்கு பேதியானால்

சிறிது வசம்பை சுட்டுப் பொடியாக்கி தண்ணீர் அல்லது பாலில் கலக்கி கொடுக்க பேதி நிற்கும்.

5. குழந்தைகளுக்கு கட்டி வந்தால்

எருக்கம் பாலில் மஞ்சளை அரைத்து போட்டு வர கட்டிகள் உடைத்து விடும்.

6. காலில் கரப்பான் வந்தால்

செம்பருத்தி இலை சாற்றில், காட்டு சீரகத்தை அரைத்துப் போட குணமாகும்.

7. குழந்தைகளுக்கு அக்கி வந்தால்

எருமை தயிரில் ஊமத்தன் இலை சாற்றை அரைத்துப் பூச குணமாகும்.

8. பால் உண்ணிக்கு

சிகப்பு நாயுரி இலை, வாஷிங் சோடா, சிறிது சுண்ணாம்பு சேர்த்து அரைத்து மேலால் போட பால் உண்ணி போய் விடும்.

9. வயிற்றுப் போக்கு

ஜாதிக்காய் 10 கிராம், கசகசா 100 கிராம், இரண்டையும் நன்கு அரைத்து பனங்கற்கண்டு சேர்த்துக் காய்ச்சி அத்துடன் நெய், தேன் சிறிய அளவு சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்து வர வயிற்றுப் போக்கு மாறி உடல் தேரும்.

10. டான்சில் – தொண்டை புண்ணுக்கு

திருநீற்று பச்சிலையுடன் சிறிது வறுத்த மிளகு சேர்த்து அரைத்து தொண்டையில் தடவி வர டான்சில் குணமாகும்.

11. சொரி சிறங்கு நமச்சல் இருந்தால்

நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் காட்டு கஸ்தூரி விதையை அரைத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தேய்த்து சீயக்காய் போட்டு குளிக்க குணமாகும்.

12. குழந்தைகளுக்கு சளி இருமல் இருந்தால்

கற்பூரவல்லி இலைசாறும் தேனும், சமன் கலந்து காலை மாலை சங்களவு கொடுக்க குணமாகும்.

13. சுண்ணாம்பு வாயில் பட்டால்

தேங்காயை நன்கு அரைத்து வாயில் தடவவும்.

14. வயிற்றுப் வலிக்கு

1 டீஸ்பூன் சீரகம், 1 டீஸ்பூன் வெந்தயம் இரண்டையும் பொடித்து மோருடன் கலந்து கொடுக்கவும்.

15. குழந்தைகளுக்கு ஏற்படும் புண்களுக்கு

இலந்தை தொலியை நன்கு பொடியாக்கி தேங்காய் எண்ணெயில் குழைத்துப் போட்டு வர புண் ஆறும்.

16. குழந்தைகள் மலம் கழிய

பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு மலம் சரியாக கழியாவிட்டால் நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும். மகிழம் விதையை மைபோல் அரைத்து ஒரு சிறு துணி திரியில் அதைத் தடவி மல வாசலில் வைத்தால் உடன் மலம் கழியும்.

17. குழந்தைகளுக்கு மலம் நாற்றமாக போனால்

வயல் வரப்புகளில் கிடைக்கும் பொடுதலையின் காய், இந்துப்பு, 2 பூண்டு, மிளகு சம அளவு எடுத்து வறுத்து இடித்து குடிநீர் செய்து கொடுக்க மாறும்.

18. குழந்தைகளுக்கு சாதாரண காய்ச்சல் இருந்தால்

கிராம்பு, கருவப்பட்டை, ஏலம், நிலவேம்பு கசாயம் செய்து சங்களவு காலை – மாலை கொடுக்க குணமாகும்.

ஆதாரம் : மாற்று மருத்துவம் காலாண்டு இதழ்

3.13793103448
Anonymous Dec 10, 2016 01:23 AM

பால் உண்ணியை எடுப்பது எப்படி

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top