Accessibility options
Accessibility options
Government of India
Contributor : Bagya lakshmi19/05/2020
Skip the lengthy reading. Click on 'Summarize Content' for a brief summary powered by Vikas AI.
மூலிகை செடிகளில் ஒன்று பலரும் அறிந்த ஒன்று கீழாநெல்லி. மஞ்சள் காமாலையைக் குணப்படுத்துவதோடு, முடி நரைத்தல் உட்பட பலவிதமான தலையாய பிரச்னைகளுக்கும் இது சிறந்த தீர்வாக உள்ளது. நம்முடைய பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிற மூலிகைகளில் கீழாநெல்லி மிகவும் முக்கியமானது. பலருக்கும் இதை மருந்தாக எவ்வாறு உபயோகிப்பது என்பது தெரியாது. இளந்தளிராக உள்ள கீழாநெல்லியைச் சாப்பிடுவதை பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதனால், நமக்கு எந்தவிதமான மருத்துவப் பயனும் கிடைக்காது. எனவே, நன்றாக வளராத கீழாநெல்லி இலைகளை மருந்தாகப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. பொதுவாக, இம்மூலிகை குறைந்தபட்சம் இரண்டு அடி உயரமாவது வளர்ந்து இருக்க வேண்டும். இலைகளுக்குக் கீழே காய்கள் காணப்பட வேண்டும். அவ்வாறு வளர்ந்த கீழாநெல்லி இலைகளில்தான் Phyllanphin, Hypo Phyllanpin என்ற இரண்டு வேதிப்பொருள் உருவாகும். இதுதவிர, ஆல்கலாய்ட்(Alkaloid) என்கிற வேதிப்பொருளும் இந்த செடியில் இருக்கும்.
சித்த மருத்துவத்தில் கீழாநெல்லி இலைகளை எந்தக் காரணத்துக்காகவும் தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயமாக குடிக்கக் கூடாது. அவ்வாறு செய்தால், இந்த மூலிகையில் உள்ள வேதிப்பொருட்களின் செயலாற்றும் தன்மை மெல்லமெல்ல குறையும். இந்த இலைகளுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து 10 கிராம் அளவு வெள்ளாட்டுப்பால் அல்லது மோரில் கலந்து 3 முதல் 5 நாட்கள் வரை சாப்பிட்டு வரலாம். இந்தக் கலவையைச் சித்த மருத்துவத்தில் ‘கற்கம்’ எனக் குறிப்பிடுவார்கள்.
ஆதாரம் : மாலைமலர் ஆரோக்கியம்
முட்டைகோஸின் மருத்துவ குணங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
மாதுளையின் மருத்துவ குணங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
தேங்காயின் மருத்துவ குணங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
கேழ்வரகின் சத்துக்களும், மருத்துவ மகத்துவங்கள் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
உடல் நலத்தை பாதுக்காக்கும் செவ்வாழை பழத்தின் மருத்துவ குணங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
உடல் உஷ்ணத்தை தணிக்கும் புளி பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
சி.பாரதி
11/20/2023, 12:40:20 PM
கீழாநெல்லியில் எத்தனை வகை உள்ளது?
Sajitha Haneef
6/13/2023, 3:16:04 PM
உண்மையானத் தகவல் நன்றிகள் கோடி
ரத்னகுமார்
12/9/2022, 8:10:47 AM
மிக மிக அருமை நல்ல பயனுள்ள தகவல்
ஷிவா
2/12/2022, 4:37:16 AM
உங்களின் இச்செயல் எல்லா மூலிகைக்கும் தொடரட்டும்
Mohideen
11/23/2021, 12:06:19 PM
பயனுள்ள தகவல் நன்றி
Contributor : Bagya lakshmi19/05/2020
Skip the lengthy reading. Click on 'Summarize Content' for a brief summary powered by Vikas AI.
121