பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ரோஜா - மருத்துவ பயன்கள்

வயிற்று புண்னை ஆற்றும் ரோஜா பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ரோஜா துவர்ப்பு மற்றும் இனிப்பு சுவையுடையது, இந்த துவர்ப்பு சுவை இரத்தத்தை கட்டக்கூடியது. இரத்தத்துடன் வரும் மலகழிவு அதாவது சீதபேதி என்கிற நோயை இது குணப்படுத்துகிறது. நீண்ட காலம் மாதவிடாய் ஆகிறது என்பவர்களுக்கு இந்த ரோஜாப்பூ ஒரு அருமையான மருந்து.

இது ஒரு சிறந்த மலமிலக்கியாகவும் பயன்படுகிறது. உடம்பு உற்சாகமாக இருப்பதற்கு நம் பல விலை உயர்ந்த வைட்டமின் மாத்திரைகள் அல்லது டானிக்குகளை மருத்துவரை ஆலோசித்து வாங்கிக்கொள்கிறோம். ரோஜா பூ ஒரு இயற்கை அளித்த உற்சாக டானிக் என்பது பலருக்கு தெரியாது. உடலுக்கு சுருசுருப்பை தரக்கூடிய ஒரு அற்புதமான மூலிகை பூ இந்த ரோஜாப்பூ.

ரோஜாப்பூ மிக எளிமையாக கிடைக்கக்கூடிய ஒரு வகை பூ. ஹைப்ரைட் ரோஜாவை பயன்படுத்தாமல் நாட்டு ரோஜா அல்லது பன்னீர் ரோஜாவை பயன்படுத்துவது மிகவும் நல்லது. எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடியது இந்த நாட்டு ரோஜா அல்லது பன்னீர் ரோஜா. நம் வீட்டின் நிலத்திலோ அல்லது தொட்டிகளிலோ வைத்து தினம் ஒரு ரோஜாப்பூவை சாப்பிட்டு வந்தால் நம் வயிற்றில் உள்ள புண்கள் ஆறிவிடும்.

நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்லது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் அடிக்கடி நோய்வாய்ப்படாமல் இருக்க முடியும். உடல் சூடு தனிய ரோஜ நீர் ஊரல் பயன்படுகிறது. ரோஜா நீர் ஊரல் என்பது ரோஜா இதழை 6 லிருந்து 8 மணிவரை நீரில் ஊரவைக்கவேண்டும் அப்படி வைக்க ரோஜாவிலிருக்கும் சாறு நீரில் இறங்கிவிடும் இதுவே ரோஜா நீர் ஊரல் என்று அழைக்கப்படுகிறது.

ஆதாரம் : மாலைமலர் ஆரோக்கியம்

3.08928571429
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top