பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / மருத்துவ முறைகள் / ஆயுஷ் / யோகா மருத்துவம் / இளைஞர்களுக்கான மனஅழுத்தமற்ற வாழ்க்கைக்கான யோகா பயிற்சி
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இளைஞர்களுக்கான மனஅழுத்தமற்ற வாழ்க்கைக்கான யோகா பயிற்சி

இளைஞர்கள் மிகவும் ஆரோக்கியமான, நிலைகுலையாத, மன அழுத்தமற்ற வாழ்க்கை வாழ்வதற்கு உகந்த யோகா பயிற்சி பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

யோகா - முக்கியத்துவம்

பாரம்பரிய ஆரோக்கிய முறைகள், முழுமையான வாழ்க்கை வாழ்வது ஆகியவற்றுடன் தொடர்புடையதாக யோகா இருக்கிறது. யோகா, இந்தியாவின் பாரம்பரியத்திலும், பண்பாட்டிலும் ஆழ வேரூன்றி வளர்ந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் ரிஷிகளாலும், முனிவர்களாலும் போற்றி வளர்க்கப்பட்டது. பெருகிவரும் சவால்கள், உடல்நலம் பேணுவதற்கான தேவைகள் மாற்றம் கண்டுவருவதற்கு காரணமாக இருக்கின்றன. இத்தகைய சவால்களை சந்திப்பதற்கு யோகா பயிற்சிகள் உலகெங்கும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வாழ்க்கை முறைகளில் நிகழும் மாற்றம், மன உணர்வுகளின் காரணமாக ஏற்படும் உடல் கோளாறுகள் ஆகியவற்றை சமாளிப்பதற்கு எளிமை, செலவின்மை, பயனளிக்கும் தன்மை போன்றவற்றைக் கொண்டிருக்கும் யோகா உதவுகிறது. உலகம் முழுவதிலும் உள்ள ஒவ்வொருவரையும் கவரக்கூடியதாக யோகா இருக்கிறது. உடல் தோற்ற நிலைகள், மூச்சுப் பயிற்சிகள், தியானம் ஆகியவற்றின் கலவையாக யோகா இருக்கிறது. ஒருவரின் இயல்பான ஆற்றலை சமநிலையுடன் வளர்த்தெடுப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் யோகா உதவும்.

வெவ்வேறு விதமான வாழ்க்கைப் பாதைகளை தேர்ந்தெடுத்திருக்கும் மக்களும் உடல்நல ஆக்கத்தைப் பாதுகாப்பதிலும், மேம்படுத்துவதிலும் யோகா பயிற்சிகளின் பங்கினைப்பற்றி மிக அதிகமாக விழிப்புணர்வை இப்போது பெற்றுள்ளனர். அதோடுகூட பலவிதமான நோய்கள், நிலைமைகள் போன்றவற்றைத் தவிர்ப்பதிலும், நிர்வகிப்பதிலும் யோகாவின் பங்கு பற்றியும் அறிந்து வைத்துள்ளனர். மன அழுத்தம் பிறவகை, மன உணர்வுகளால் ஏற்படக்கூடிய உடல்நல பாதிப்புகள் ஆகியவற்றைத் தடுப்பதற்கும், நிர்வகிப்பதற்கும் யோகா வாழ்க்கை முறையின் முக்கியத்துவம் பற்றி விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் நன்கு புரிந்து கொண்டு இருக்கின்றனர். யோகா தரும் பயன்கள் பற்றி காலகாலமாக உணரப்பட்டுள்ளன. யோகா எளிமையானது, செலவில்லாதது. இளைஞர்கள் உட்பட அனைவரும் மிக ஆரோக்கியமான, அர்த்தமுள்ள, சமநிலையான, மன அழுத்தமற்ற வாழ்க்கை நடத்துவதற்கு யோகா பயன்படக்கூடியது.

யோகா இந்தியாவைக் கடந்தும் பிரபலமாக இருக்கிறது. பல தேசங்களைச் சேர்ந்த இளைஞர்கள் யோகப் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். யோகாவிற்கு நில எல்லைகள், மதம், சாதி, சமய கோட்பாடுகள், தேசம் ஆகிய கட்டுப்பாடுகள் எதுவுமே கிடையாது. யோகா அனைவருக்குமானது. ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 21ஆம் நாளை சர்வதேச யோகா தினமாக அறிவித்துள்ளது.

நோயில்லாமல் இருக்கும் நிலையோ, உடல் மன வலிமைக்குறைபாடு இல்லாமல் இருப்பதோ ஆரோக்கியம் என்று ஆகிவிடாது. உடல், மனம், சமூகம் ஆகிய தளங்களில் நிலவக்கூடிய முழுமையான நல உணர்வே ஆரோக்கியமாகும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. இந்த வரையறை ஆன்மீக நலம் என்னும் நான்காவது பரிமாணத்தையும் வெளிப்படுத்துகிறது.

முழுமையான ஆரோக்கியம் என்பது உடல், மனம், உணர்ச்சிவேகம், சமுதாய ஆன்மீக நலம் ஆகியவற்றின் கூட்டினால் விளைவதாகும். யோகாவின் பங்கு இங்குதான் ஆரம்பமாகிறது. யோகா நமது ஆளுமையை முழுமையானதாகவும், சமநிலையானதாகவும் மாற்றி அமைக்கிறது. உடல், மனம், உணர்ச்சி, சமூகம், ஆன்மீகம் ஆகிய தளங்களில் நம்மை ஒரே நேரத்தில் வாழச்செய்கிறது. தொடர் பயிற்சியானது நம்முடைய ஆற்றலை வளர்த்து மேம்படுத்தி தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது. மிகவும் ஆரோக்கியமான, சமநிலையான, மன அழுத்தமற்ற, அர்த்தமுள்ள வாழ்வை நடத்தக்கூடியவர்களாக இளைஞர்களை மாற்றக்கூடிய ஆற்றல் இதற்கு உண்டு. எதையெல்லாம் செய்யலாம்? எதையெல்லாம் செய்யக்கூடாது என்பதை யோகா கற்றுத்தருகிறது (ஐந்து யாமங்களும், ஐந்து நியமங்களும்), யோகப் பயிற்சி பின்பற்ற எளிதானது. நம்முடைய அன்றாட நடை முறைகளில் யோகாவை நமது தேவைக்கேற்ப எளிதாக ஒருங்கினைக்க முடியும். எளிதாகப் பின்பற்றவும் இயலும்.

தொழில்மயம், வேகம் நிறைந்திருக்கும் நகர்ப்புற வாழ்க்கைமுறை போன்றவை நம்முன் இருக்கக்கூடிய சூழல் மாசு, மன அழுத்தம், மனப்பதற்றம் போன்ற சவால்களை அதிகரித்துள்ளன. இவற்றைக் கையாளுவதில் நமது வாழ்க்கை அதிகாலை முதல் பின்னிரவு வரை மிக விரைவானதாகவும், இயந்திர மயமானதாகவும் மாறி இருக்கிறது. நமது உணவுப் பழக்கங்கள் ஆரோக்கியமானதாக இல்லை. பாதுகாக்கப்பட்ட உணவு, விரைவு உணவு, மதிப்பில்லாத தேவையற்ற உணவு, அதிக கலோரிகளைக் கொண்டிருக்கும் உணவு, புகை பிடித்தல், மது, போதைப் பொருள், போதுமான ஒய்வின்மை, உடற்பயிற்சியின்மை போன்றவை நம்மை பொறுமையற்றவர்களாக்கி உடல்மனம் சார்ந்த பலவிதமான நோய்கள், நீரிழிவு, ரத்த அழுத்தம், மூட்டு வீக்கம், முதுகுவலி போன்ற பலவிதமான இடர்கள் நமக்கு ஏற்பட காரணமாகின்றன. பலவிதமான மனநலக் குறைவுகள் ஒவ்வொரு நாளும் இந்தக் காரணங்களால் அதிகரித்து வருகின்றன.

மனச்சோர்வு, எண்ணம் செயல் ஆகியவற்றில் மாறுபாடு, மது, போதை மருந்துகளுடன் தொடர்புடைய உடல் நலக் கேடு போன்றவற்றினால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஊடுருவல் அற்ற வகையைச் சேர்ந்த சிகிச்சை முறை யோகா, ஆசன முறைகள், பிராணாயாமம், ஷத்கர்மா, சூரிய நமஸ்காரம், தியானம் ஆகிய பலவிதப்பட்ட பயிற்சிகளின் மூலம் மனதையும் உடலையும் யோகா சிறப்பாக கையாளுகிறது. மனநலக் கோளாறுகளான பதற்றம், மனச்சோர்வு, நரம்பியல் கோளாறுகள், நடத்தைக் கோளாறுகள், மனநல பிரச்னை காரணமாக ஏற்படும் பசியின்மை போன்றவற்றையும், உடலும் மனமும் சார்ந்து வெளிப்படும் தலைவலி, ஆஸ்த்மா, நுரையீரல் நோய்கள், நீரிழிவு, உடலின் நோய் எதிர்ப்புத்தன்மை ஏற்படும் பாதிப்பினால் வரக்கூடிய நோய்கள் ஆகியவற்றை யோகாப் பயிற்சிகளின் மூலம் சிறப்பாக நிர்வகிக்கப்பட இயலும்.

இளைஞர்களிடம் பொதுவாக காணப்படும் பிரச்னை மன அழுத்தமும் மனப்பதற்றமுமாகும். இவை அகக்காரணங்களாலும் புறக்காரணங்களாலும் ஏற்படுகின்றன. வாழ்வில் ஏற்படக்கூடிய மாறுதல்கள், வேலை, படிப்பு, உறவுகள் ஆகியவற்றில் உருவாகும் சங்கடங்கள், பணப்பிரச்னைகள், நீண்டநேர உழைப்பு, குழந்தைகள், குடும்பம் போன்றவை மன அழுத்தத்திற்கான பொதுவான புறக்காரணங்கள் ஆகும். நாள்பட்ட கவலை, எதிர்மறை எண்ணம், தன்னைப் பற்றிய எதிர்மறையான பேச்சு, பொருத்தமற்ற எதிர்பார்ப்புகள், நிறைவு வேண்டும் என்ற விழைவு, வளைந்து கொடுக்காத சிந்தனை, இணக்கமின்மை, எல்லாமும் வேண்டும் அல்லது எதுவுமே வேண்டாம் என்ற வகையிலான மனப்பான்மை போன்றவை மனஅழுத்தத்திற்கான அகநிலைக் காரணங்கள். மன உணர்வுகளில் சமநிலை இன்மை, நிலையில்லாத தன்மை, பதற்றம் போன்றவை மன அழுத்தத்தின் பொதுவான வெளிப்பாடுகள்.

உடல், மனம் இவை சார்ந்த நோய்கள் இருப்பதைக் காட்டும் நிலைமைகள் இவை. தலைவலி, தூக்கமின்மை, திடீரென ஏற்படும் தசை இழுப்பு, தோலில் சிவந்த புள்ளிகள், செரிமானக் கோளாறுகள், குடற் புண், இதயத்துடிப்பு மிகுதல், உயர் ரத்த அழுத்தம், ரத்தக்குழாயில் ரத்தம் உறைதல், வலியுடன் கூடிய மாத விடாய் போன்ற பிரச்னைகள் இதன் வெளிப்பாடுகள். ஆசனங்கள், பிராணாயாமம், தியானம் போன்றவற்றை தொடர்ச்சியாக செய்து வருவதன் மூலம் இவற்றை எளிதில் சமாளிக்க முடியும். ஆசனங்கள் உடலையும், மனதையும் நிலைப்படுத்தி, தளர்ச்சி தந்து, புதிய சிந்தனைகளை வளர்த்து, நாட்டத்தை ஏற்படுத்தி மனப்பான்மையில் மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. ஆழந்த மூச்சுப் பயிற்சி, யோகா நித்ரா, தியானம் போன்றவை எதிர்மறை மனப்பாங்கினைக் குறைத்து, அமைதியைக் கொணர்ந்து, அக மகிழ்வை ஏற்படுத்தி நேர்மறை சிந்தனைகளைப் போற்றி வளர்க்கின்றன.

மலக்குடல் வீக்கம்

இளைஞர்கள் தங்களது வாழ்க்கை முறையில் ஆரோக்கியமான சில நடைமுறைகளைப் புகுத்தலாம். இதன்மூலம் இவர்களது வாழ்க்கை ஆரோக்கியமானதாக, சமநிலை உடையதாக, அழுத்தமற்றதாக மாறும். இத்தகைய பயிற்சிகள் உடல் நலத்தைப் பேணுவதற்கும், நோய்களைத் தவிர்ப்பதற்கும் பெருமளவு உதவும். இவை மிகவும் எளிமையான பயிற்சிகள். செலவில்லாதவை, பின்பற்றுவதற்கு எளியவை, அன்றாட வாழ்வின் தினசரி நடைமுறைகளுடன் எளிதாக ஒருங்கிணையக் கூடியவை. இயற்கையான வாழ்க்கை முறை அன்பை மிகுவித்து ஒருவருக்கொருவர் பாசத்தைக் கூட்டி, பிணைப்பை வளர்க்கிறது. அமைதி, கலக்கமின்மை, நேர்மறை சிந்தனை ஆகியவற்றை இது மேம்படுத்துகிறது. ஒருசில பயிற்சிகள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

சமநிலையான உணவு

சமநிலையான உணவுப்பழக்கம்தான் மிகமுக்கியமான முதலாவது பயிற்சி. நம்முடைய உணவு இயன்ற வரை இயற்கை உணவாக இருக்கவேண்டும்.

அந்தந்தப் பருவங்களில் கிடைக்கக்கூடிய பழங்கள், புதிய பசுங்காய்கறிகள், முளைகட்டிய பயிர்கள் போன்றவை நமது உணவில் போதுமான அளவிற்கு கட்டாயமாக இடம் பெறவேண்டும். அமிலத்தன்மை இல்லாத இத்தகைய உணவுகள் உடல்நலத்தை மேம்படுத்தி, உடலைத் தூய்மைப்படுத்தி நோய் எதிர்ப்புத் தன்மையைத் தருகிறது.

உண்ணா நோன்பு

உடல்நலத்தைப் பாதுகாப்பதில் மிக முக்கியமான நுட்பமாகும் இது. செரிமான உடலுறுப்புகள் அனைத்திற்கும் இது ஒய்வு தருகிறது. உணவு செரிப்பதற்குத் தேவைப்படும் செரிமான ஆற்றல் முழுவதும் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப் பொருள்களை நீக்குவதற்கு செலவிடப்படுகிறது. இது மிகவும் சிறப்பான ஒரு தீர்வாகும். மனம், உடல் தொடர்புடைய குறைகளை நீக்குவதற்கான சிறந்த வழிமுறை வாரம் ஒருமுறை உண்ணா நோன்பிருப்பது. இந்தச் சமயங்களில் பழச்சாறு அருந்தலாம். பழங்களை உண்ணலாம். உடல் நலத்தை சிறப்பாகப் பேணிக்காக்க உண்ணா நோன்பு அவசியம்.

தொடர்ச்சியான பயிற்சிகள்

ஏதேனுமொரு வடிவத்திலான உடற்பயிற்சியை மேற்கொள்வதும், யோகப் பயிற்சிகள் செய்வதும் சிறந்த உடல்நலத்திற்கு அவசியமானதாகும். இவை ரத்த ஓட்டத்தை அதிகரித்து உடலைத் தளர்ச்சியாக வைக்கின்றன. வயதாகக்கூடிய வழிமுறையின் வேகத்தைக் குறைக்கின்றன. நல்ல உடல்நலத்தைப் பராமரிக்கின்றன. இத்தகைய நோக்கங்களை அடைவதற்காக நாம் காலைநேர நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, ஒரே சீராக ஓடுவது, யோகாசனம், சூரிய நமஸ்காரம், பிராணாயாமம், தோட்ட வேலை போன்ற உடலுழைப்பு போன்றவற்றில் நம்முடைய மன ஊக்கத்திற்கும், விருப்பத்திற்கும் ஏற்ற ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். உடற்பயிற்சி உடலை சுறுசுறுப்பாக வைக்கிறது, சக்தியைப் பெருக்குகிறது, புதிய நேர்மறை சிந்தனையை வளர்க்கிறது. இதுதவிர வேறுசில உடற் செயலியல் ஆதாயங்களும் இருக்கின்றன. டாக்டர் ஹென்றி லின்ட்லஹர் என்பவர் ஒரு பிரபலமான இயற்கை மருத்துவர். உடல் திசுக்களில் சேர்ந்திருக்கும் நோய்கொண்ட பொருள்களின் திரட்சியை உடற்பயிற்சி கலக்கி விடுகிறது. தமனி, சிரை ஆகிய இரத்தக் குழாய்களில் ரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது.

நுரையீரலை அதன் முழு கொள்ளவிற்கு விரியச் செய்கிறது. இதனால் ஆக்சிஜன் உள்ளிழுக்கப்படுவது அதிகரிக்கிறது. தோல், சிறுநீரகம், சுவாசக்குழல்கள், குடல் ஆகியவற்றின் மூலமாக உடல் கழிவுகள் வேகமாக நீக்கப்படுகின்றன.

ஓய்வு

யோகப் பயிற்சிகள் தவிர முறையான ஓய்வும் உறக்கமும் உடல் நலத்திற்கு அவசியமானது. நல்ல உறக்கமானது நமக்கு புத்துணர்ச்சியைத் தருகிறது. நம்மை மகிழ்ச்சியாக வைக்கிறது. மனதை லேசாக்குகிறது. அரைகுறை தூக்கம் மன அழுத்தமும் பதற்றமும் உருவாகக் காரணமாகின்றன. இதனால் உடல்நலம் கெடுகிறது. எனவே, சரியான அளவு உறக்கம் வேண்டும்.

போதுமான அளவு தண்ணிர் குடித்தல்: உடல்குறைபாடுகள் நீங்குவதற்கும், நல்ல ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் போதுமான அளவுக்கு தண்ணிர் குடித்துவர வேண்டும். உடலில் சேர்ந்துள்ள நஞ்சை தண்ணீர் கரைத்து விடுகிறது. உடல் உள்ளுறுப்புக்களை நீர் சுத்தம் செய்கிறது.

வாழ்க்கை முறைக்கான அற்புதமான சில குறிப்புகள்

  1. இரவில் சீக்கிரமாக உறங்கச் செல்ல வேண்டும். சூரியன் உதிப்பதற்கு முன்பு பிரம்ம முகூர்த்தத்தில் துயில் எழ வேண்டும். ஏழு மணி நேர ஆழ்ந்த உறக்கம் வேண்டும்.
  2. அனைத்து சத்துக்களும் கிடைக்கும் விதத்திலான எளிய காய்கறி உணவுகளை உண்ணவேண்டும்.
  3. சர்க்கரை, உப்பு, கன உலோகங்கள், சிவப்பு மிளகாய், மசாலா பொருட்கள், ஊறுகாய் போன்றவற்றை குறைவாக சேர்த்துக் கொள்ளுங்கள். டீ, காபி, அருந்துவதை குறைத்து விடுங்கள். போதை தரும் பொருள்களைப் பயன்படுத்துவதை நிறுத்தி விடுங்கள். நெய், எண்ணெய் ஆகியவற்றின் பாட்டைக் குறைத்து விடுங்கள். சைவ உணவுதான் யோகப் பயிற்சி செய்வோருக்கு சிறந்தது.
  4. நேரத்துக்கு உணவு உண்ணுங்கள். பழங்கள், முளைக்கட்டிய பருப்பு ஆகியவற்றை காலையில் யோகா செய்வதற்கு அரை மணி நேரத்திற்குப் பிறகு காலை உணவாக சாப்பிடுங்கள். பயர்கள், உணவுடன் சேர்த்து தண்ணிர் குடிப்பது நல்லதல்ல. உணவு உண்ணுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்போ அல்லது உணவு உண்ட அரைமணி நேரத்திற்குப் பிறகோ தண்ணிர் குடிப்பதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
  5. தினமும் காலை அல்லது மாலையில் தியானம் செய்யுங்கள். இது பதற்றத்தைத் தணிக்கும். மன அழுத்தத்தைக் குறைக்கும். உடலையும், மனதையும் ஆற்றலுடன் வைத்திருக்கும். நேர்மறை சிந்தனைகளை கொண்டு வரும்.
  6. கட்டாயமாக யோகப் பயிற்சி, சத்கர்மா இவைகளின் மூலம் உடலின் அகத்தூய்மையையும் புறத்தூய்மையையும் பேணுவது முக்கியம். இயற்கையின்மீது நம்பிக்கை வைத்திடுங்கள். உங்களை அது நல்ல எண்ணத்துடனும், தன்னம்பிக்கையுடனும் இருக்கச் செய்யும்.
  7. அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். பசித்த பிறகுதான் உண்பது என்ற கொள்கையைப் பின்பற்றுங்கள். உணவு மீதம் இருக்கும் போதே சாப் பிடுவதை நிறுத்திவிடுங்கள். வாராவாரம் உபவாசத்தை மேற்கொள்ளுங்கள். உபவாசம் இருக்கும் சமயங்களில் அந்தந்தப் பருவத்தில் விளையும் பழங்களை சாப்பிடுங்கள்.  அதிக தூரம் நடப்பது நல்லது. உடலுக்கும் மனதுக்கும் இது பயனளிக்கும்

ஆதாரம் : (திட்டம் நாளிதழ்) டாக்டர் ஈஸ்வர் என்.ஆச்சார்யா, இயக்குநர், டாக்டர் ராஜிவ் ரஸ்தோகி, உதவி இயக்குநர் இயற்கை மருத்துவம்) யோகா, இயற்கை மருத்துவ ஆராய்ச்சிக்கான நடுவண் குழுமம், புதுதில்லி,

3.26666666667
lakshmanan Feb 18, 2017 02:10 PM

நான் லக்ஷ்மன் மேற்கண்ட கருத்துகளை படித்தேன் உபயோகமாக உள்ளது மேலும் உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top