பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

சூரிய நமஸ்காரம்

சூரிய நமஸ்காரம் - விளக்கம் மற்றும் அதன் செய்முறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

சூர்ய நமஸ்காரம் – விளக்கம்

சூரிய நமஸ்காரம் என்பது சூரியனை வணங்குதல் என்று பொருள்.இது பண்டைய காலம் முதலே, சூரியனை வழிபடுதல் முறைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆசனம், பிராணயாமம், மந்திரம் மற்றும் சக்கர தியானம் ஆகியவற்றை ஒன்றிணைத்து பல்வேறு விதங்களில உடல் பயிற்சிகளின் எல்லைகளைக் கொண்ட ஒரு முழுமையான உடற்பயிற்சியாக சூர்ய நமஸ்காரம் உள்ளது.சூர்ய நமஸ்காரம் பன்ணிரென்டு ஆசனங்கள் ஒருங்கிணைந்த ஆசன மூறை ஆகும்.

சூரிய நமஸ்காரம் சுவாசம், உடல் மற்றும் மனம் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து செய்யும் பயிற்சிமுறை. சில காரணங்களால் உடல் பயிற்சியோ அல்லது யோகாவோ செய்ய முடியாதவர்கள் சூர்ய நமஸ்காரம் செய்வதன் மூலம் சிறந்த பலனை பெறுவர். சூர்ய நமஸ்காரத்தில் உள்ள ஆசனங்கள் உடலில் உள்ள பெரும்பாலான உறுப்புகளின் சீரான செயல்பாட்டுக்கு உதவுகிறது. சூர்ய நமஸ்காரம்.

நம் முன்னோர்கள் நமக்கு தந்த ஒரு அற்புத பயிற்சி. நாம் இயற்கையை
விட்டு விலகி இருக்கும் இந்த நவீன காலத்தில் சூரிய நமஸ்காரம் நமது உடல்,மனம் போன்றவற்றினை நன்கு செலுமைப்படுத்த சூரியநமஸ்காரம் உதவுகிறது.

சூரிய நமஸ்காரம் செய்யும் முறை

மேலே குறிப்பிட்ட பனிரெண்டு நிலைகள் செய்த பின்னர் சாதாரன நிலைக்கு வர வேண்டும்.

1. பிராணமாசனம் செய்முறை: கால்களை ஒன்றாக வைத்தபடி நிற்கவும். கைகளை தலைக்கு மேல் தூக்கவும். கைகளை ஒன்றாக இணைத்து உங்களது மார்புக்கு நேராகக் கொண்டு வரவும். கைகளை வணங்குவது போல் கொண்டு வரவும். மீண்டும் கைகளை மேலாகத் தூக்கியபடி கீழே இறக்கவும். மூச்சை வெளியிடுதல்

2. அஸ்ட உட்டனாசனம் செய்முறை: மூச்சை உள் இழுத்தபடி, கைகளை மேலேத் தூக்கவும். கைகள் உங்கள் காதுகளை உராய்ந்தபடி இருக்க வேண்டும். மெதுவாக கைகளை பின்புறமாக வளைக்கவும். கைகளுக்கு இணையாக தலையும் கவிழ வேண்டும். மூச்சை உள்ளிழுத்தல் suryanamsakara2_img
3. அஸ்டபாதாசனம் செய்முறை: மூச்சை வெளியே விட்டபடி மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பவும். கைகளை கால்களுக்கு இணையாக தரையைத் தொடவும். தலை கால்களின் முட்டியைத் தொட்டபடி இருக்க வேண்டும். இதே நிலையில் ஒரு சில விநாடிகள் இருக்க வேண்டும். இது அஸ்டபாதாசனம் மூச்சை வெளியிடுதல் suryanamsakara10_img
4. ஏகபாதபிரஸர்நாசனம் செய்முறை: மூச்சை உள் இழுத்தபடி உங்களது வலது காலை பின்னோக்கி வைக்கவும். அதே சமயம் இரண்டு கைகளையும் இடது காலுக்கு இணையாக ஊன்றவும். தலையை மேல் நோக்கியவாறு பார்க்கவும். இதே நிலையில் ஒரு சில விநாடிகள் இருக்கவும். மூச்சை உள்ளிழுத்தல் suryanamsakara4_img
5. தந்தாசனம் செய்முறை: மூச்சை வெளியே விட்டபடி பின்னோக்கி செலுத்திய வலது காலுக்கு இணையாக இடது காலையும் எடுத்துச் செல்லவும். கைகளை நன்கு நீட்டி ஊன்றவும். இடுப்புப் பகுதி நன்கு உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும். அதாவது வளைவு தூண் போன்று உங்கள் உடல் அமைப்பு இருக்க வேண்டும். மூச்சை வெளியிடுதல் suryanamsakara5_img
6. அஷ்டாங்க நமஸ்காரம் செய்முறை: மீண்டும் மூச்சை உள்ளிழுத்தபடி உடல் தரையில் படுமாறு வைக்கவும். கால்கள், முட்டி, கைகள், மார்பு மற்றும் நெற்றி ஆகியவை தரையை தொட வேண்டும். இடுப்புப் பகுதி மட்டும் சற்று உயர்ந்து இருக்க வேண்டும். இப்போது மூச்சை தற்காலிகமாக நிறுத்திவைக்கவேன்டும் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் suryanamsakara6_img
7. புஜங்காசனம் செய்முறை: மூச்சை உள்ளிழுத்தபடி தலையை பின்புறமாக நீட்டவும். உங்கள் முதுகை எவ்வளவு முடியுமோ அவ்வளவிற்கு பின் பக்கமாக வளைக்கவும். இதைத்தான் புஜங்காசனம் என்று அழைப்பர் மூச்சை உள்ளிழுத்தல் suryanamsakara8_img
8. அதோ முக்கா ஸ்வானாசனம் செய்முறை: மூச்சை வெளியே விட்டபடி, மெதுவாக கைகளை உயர்த்தவும். அதற்கேற்ப இடுப்பு மற்றும் தலையையும் உயர்த்தி மீண்டும் வளைவுத் தூண் அமைப்பை ஏற்படுத்தவும் மூச்சை வெளியிடுதல் suryanamsakara8_img
9. ஆஷ்வா சஞ்சலனாசனம் செய்முறை: மெதுவாக மூச்சை உள்ளே இழுத்தபடி, வலது காலை ஒரு அடிக்கு முன்னாடி முட்டியை மடக்கியபடி கொண்டு வந்து வைக்கவும். தலையை மேலாகத் தூக்கி கைகளை நேராக வைக்கவும் மூச்சை உள்ளிழுத்தல் suryanamsakara9_img
10. உட்டனாசனம் செய்முறை: வெளியே மூச்சை விட்டபடி, வலது காலுக்கு இணையாக இடது காலையும் மடக்கியபடி கொண்டு வரவும். தலை முட்டியைத் தொட்டபடி இருக்க வேண்டும் மூச்சை வெளியிடுதல் suryanamsakara10_img
11. அஸ்ட உட்டனாசனம் செய்முறை: மூச்சை உள்ளே இழுத்தபடி மெதுவாக கைகளை உயர்த்தவும். பின்புறமாக வளைந்து கைகளைப் பார்த்தபடி தலை இருக்க வேண்டும் மூச்சை உள்ளிழுத்தல் suryanamsakara11_img
12. பிராணமாசனம் செய்முறை: அட்டவணையில் முதலில் கூறிய பிராணமாசனம் நிலையில் மீண்டும் வணக்கம் செய்யும் நிலைக்கு வர வேண்டும். மூச்சை வெளியிடுதல் suryanamsakara12_img

யார் செய்யலாம்?

சூரிய நமஸ்காரம் ஆண், பெண், சிறுவர், சிறுமியர் அனைவரும் செய்யலாம். தனியாகவும் கூட்டாகவும் செய்யலாம். ஆண்டு முழுவதும் செய்யலாம்.

சூரிய நமஸ்காரம் செய்வதற்கு ஒரு நாளில் மூன்று முதல் பத்து நிமிடங்களே போதும். இது உடம்பு முழுமைக்கும் பயிற்சி அளிக்கின்றது.

சூரிய நமஸ்கரத்திற்குச் செலவொன்றுமில்லை. பளுவான கருவிகள் எதுவும் தேவையில்லை. வேண்டியதெல்லாம் நான்கு சதுர மீட்டர் இடம் தான்.

எவ்வளவு நேரம் செய்யலாம்?

சூரிய நமஸ்காரத்தைப் பழகப் பழக இன்பம் அதிகரிக்கும். முதலில் சுலபமான உடல் நிலைகளைப் பழக வேண்டும். ஆரம்பத்தில் பூர்ண வெற்றியை எதிர்பார்க்கக் கூடாது. போகப் போக இலகுவாக இயக்கங்கள் முழுமையாக வரும்.ஆரம்பத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை செய்யலாம்.பின் உங்களால் இயன்ற முறை செய்யலாம்.ஆனால் அதிக வலிவுடனோ அல்லது மிகவும் சிரமப்பட்டு செய்வது மிகவும் தவறு.

கர்ப்பிணிகள் 3 மாதங்கள் வரை செய்யலாம். பிறகு நிறுத்தி விட வேண்டும். குழந்தை பிறந்த பின் தக்க ஆலோசனையுடன் சிறிது சிறிதாகப் பயிற்சியை அதிகரிக்க வேண்டும்.

எப்பொழுது செய்யவேண்டும்?

காலை நேரம் சிறந்தது. முடியாதவர்கள் மாலையிலும் செய்யலாம். சாப்பிட்ட பின் குறைந்தது இரண்டு மணி நேரமாவது கழித்து தான் செய்ய வேண்டும். அலுவலக வேலையால் களைத்துப் போனவர்களுக்குக் கூட பத்து பன்னிரெண்டு நமஸ்காரங்கள் டானிக் போல உயிரூட்டும். தனி அறையில் அமைதியில் செய்வது புத்துணர்வை வளர்க்கும். வேண்டியதெல்லாம் ஒரு சிறு ஜமுக்காளமும் துண்டும் தான்.

எச்சரிக்கை

முதுகுப் புறத்தில் பிரச்சினை இருந்தாலோ, இடுப்பு எலும்புப் பிரச்சினை இருப்பவர்களும் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம். சூரிய நமஸ்காரம் செய்வதற்கு முன்பு தெளிவான அறிவுரையைப் பெற வேண்டும்.

சூரிய நமஸ்காரத்தின் பயன்கள்

 • இதயத்தை முடுக்கிவிட்டு இரத்த ஒட்டத்தை வேகப்படுத்தி உடலின் ஆரோக்கியத்தை நிலைநாட்டுவதில் சூரிய நமஸ்காரம் சிறந்த இடம் பெறுகின்றது. இது இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும். இதயத் துடிப்பைச் சமன் செய்யும். கை, கால் போன்ற தூரவெளி உறுப்புகளுக்குச் சூடு கொடுத்துக் காக்கும்.
 • சூரிய நமஸ்காரம் ஜீரண மண்டலத்திற்கு உயிரூட்டி ஆற்றலை அளிக்கின்றது. கல்லீரல், வயிறு, மண்ணீரல், குடல்கள் எல்லாம் கசக்கி கசக்கிப் பிடித்து விடுவது போன்று மசாஜ் செய்யப்படுகின்றன.
 • மலச்சிக்கல் பிரச்சனை சரியாகிவிடுகிறது.
 • பசியின்மை பறந்தோடுகின்றன.
 • சூரிய நமஸ்காரத்தில் உடல் அசைவுகளும் மூச்சு ஒட்டமும் இணக்கமாக நடைபெறுகின்றன. நுரையீரல்களில் காற்றோட்டம் தாராளமாகின்றது. இரத்தம் உயிர்க்காற்றால் நலம் பெறுகின்றது. ஏராளமான கரிசக்காற்றையும் பிற நச்சுப் பொருள்களையும் மூச்சு மண்டலத்திலிருந்து வெளியேற்றுவதன் மூலம் சூரிய நமஸ்காரம் உடலுக்குப் பெரும் நன்மை விளைவிக்கின்றது.
 • சிம்பதட்டிக், பாராசிம்பதட்டிக் நரம்புகளின் செயல்களை நெறிப்படுத்துவதன் மூலம் நல்ல ஒய்வுக்கும் உறக்கத்திற்கும் உதவுகின்றது. இதனால் நினைவாற்றல் அதிகரிக்கின்றது.
 • பிற உயிரணுக்களைக் காட்டிலும் நரம்பு உயிரணுக்கள் மிக மிக தாமதமாகவே விழிப்புற்று உயிராற்றல் பெறுகின்றன. இருப்பினும் இடையறாத முறையான பயிற்சியாலும் சலிக்காத முயற்சியாலும் சிறுகச் சிறுக நரம்பு உயிரணுக்கள் தத்தம் சாதாரணக் காரியங்களைச் செய்யத்தக்க அளவில் வலுவடைகின்றன.
 • சூரிய நமஸ்காரத்தில் கழுத்து முன் பின் வளைகின்றது. இதனால் தைராயிட், பாராதைராயிட் சுரப்பிகளுக்கு இரத்தம் கிடைக்கின்றது. அவை செயல்படுவதனால் எல்லா எண்டோக்கிரைன் சுரப்பிகளும் தமக்குரிய இயல்பான காரியங்களைச் செய்கின்றன.
 • தோல் புத்துணர்வு பெற்றுப் பொலிவடைகின்றது. சூரிய நமஸ்காரத்தை முறைப்படி செய்யும் போது வியர்வை உண்டாகும். ஏராளமாக உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் தோலின் வழியே வெளியேறும். நன்றாக வியர்க்கும் வரை இப்பயிற்சி செய்வது நல்லதென சூரிய நமஸ்காரத்தைப் பிரபலப்படுத்திய அவுண்ட் அரசர் கூறுகின்றார். வியர்வை பத்துப் பதினைந்து நிமிடங்களிலேயே வெளிவருவதை அனுபவத்தில் அறியலாம். தோலின் மூலம் வியர்வை வெளிவரும் அளவுக்கு உடல்நலம் ஓங்கும்.
 • சூரிய நமஸ்காரத்தில் உடலில் உள்ள தசைகள் அனைத்தும் வலுவடைகின்றன. குறிப்பாக கழுத்து, தோள், கை, மணிக்கட்டு, வயிற்றுச்சுவர், தொடை, கெண்டைக்கால், கணுக்கால் முதலிய பகுதிகளில் தசைகள் பயிற்சியால் உரம் பெறுகின்றன.
 • கொழுப்பால் வயிறு, தொடை, இடுப்பு, கழுத்து, நாடி முதலிய இடங்களில் உண்டாகும் மடிப்புகள் மறையும்.
 • தோல், நுரையீரல், குடல், சிறுநீரகம் முதலிய பகுதிகள் வழியே சரியாக மலம் (கழிவுப் பொருட்கள்) வெளியேறுவதால் உடலில் விரும்பத் தகாத துர்நாற்றம் ஏற்படுவதில்லை.
 • சூரிய நமஸ்காரத்தில் உடல் சரியான அளவில் அமையப் பெறுவதால் அது எந்த விளையாட்டுப் பயிற்சி வேலைகளுக்கும் எப்போதும் தயார் நிலையில் இருக்கும். இளமை, நலம், அழகு மூன்றும் ஒருங்கே அமைந்து உடலுக்கும் உயிருக்கும் அழியா இன்பத்தைக் கொடுக்க வல்லது.

கட்டுரை: மேக்னம், தமிழ்நாடு

Filed under:
3.2
வாசுதேவன் Dec 04, 2018 11:04 AM

இரத்த கொதிப்பு உள்ளவர்கள் செய்யலாமா

Anonymous Jul 19, 2018 01:16 PM

arumai

இராம்குமார் Dec 16, 2014 01:17 PM

ரத்தக்கொதிப்பு (ப்ளட் பிரஷர்) உள்ளவர்கள் சூர்ய நமச்காரத்தை செய்யக்கூடாது என்று சொல்கின்றனரே?

தயவு செய்து விளக்கவும்.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top