பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

யோகா

யோகா செய்முறைகள் பற்றி இங்கு விளக்கியுள்ளனர்.

யோகா என்றால் என்ன?

யோகா என்ற சொல் வடமொழி சொல்லான யுஜ் என்பதிலிருந்து வந்தது. இதன் அர்த்தம் இணைப்பது, சேர்ப்பது, பிணைப்பது, அதாவது ஒருவரின் கவனத்தை ஒருமுகப்படுத்துவது. இதற்கு சங்கமம் என்ற பொருளும் ஒன்று கலத்தல் என்ற பொருளும் உண்டு.

4500 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தான் யோகக் கலை அல்லது யோகாசனம் ஆகும். யோகாசனம் என்பது பழகாலத்தில்  வாழ்ந்த யோகிகள் காட்டில் மிருகங்கள், பறைவகள் இவைகளின் செயல்களை பார்த்து வடிவமைத்தார்கள் என்று பல தகவல்கள் இருந்தாலும் . இந்த அரிய பொக்கிஷத்தை முதன் முதலில் உலகுக்கு எழுத்து வடிவில் அளித்தவர் பதஞ்சலி முனிவர் தான். இவரது நூலில் அத்தனையும் எழுத்து மூலமாகவே இருந்தது ஆனால் அதற்கு பிறகு வந்த நூல்கள் செய்முறைகள் படங்களோடு நமக்கு கொடுத்து உள்ளது.

உடல், மனம், உணர்ச்சிகள், ஆன்மா ஆகியவற்றை ஒன்றிணைப்பது அல்லது ஒருமுகப்படுத்துவதே யோகக் கலை. உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, மன அழுத்தங்களை குறைத்து அமைதி தருவது. இலக்கின்றி அலையும் மானுட வாழ்வில் இலக்கை நிர்ணயித்து சேர வேண்டிய இலக்கில் கொண்டு போய்ச் சேர்க்க யோகா ஒரு சிறந்த கருவியாகும்.

எதற்காக யோகா?

இன்றைய நாகரீக மனிதன் ஆக்ரோசம் மிகுந்தவனாக மாறிவிட்டான். மனிதன் தன் அகச் செயல்களுக்கும் புறச்செயல்களுக்கும் இடையே இருந்த நல்லுறவை இழந்துவிட்டான்.அந்த நல்லுறவு மனிதனின் மகிழ்ச்சிகரமான வாழ்கைக்குத் தேவை என்பதனை மறந்துவிட்டனர்.

மிக அதிகமான ரசாயன மருந்துகளையும்,நச்சுப் பொருள் கலந்த உணவுகளையும் பயன்படுத்தி இயற்கையின் விதிகளுக்கு முரணாகதன் உடலை பாழ்படுத்திக் கொண்டிருக்கிறான். உணர்ச்சிகளையும் – கிளர்ச்சியினையும் தூண்டி விடும் இசையினைரசித்து செயற்கையான, மனிதத்தன்மையில் இருந்து விலகிக் சென்று கொண்டிருக்கின்றான் தவறான இயற்கை முரன்பாடுகளுக்கு எதிராக நடந்து தன் உடல் வளர்ச்சி பாதிக்கபட்டு மனமும் உடலும் பாதிப்பிற்குள்ளாகிறது. இதனை நாம் இன்று கண் கூடாக காண்கின்றோம், உணருகின்றோம்.

மனிதன் சிந்தனையாலும,செயலாலும் மெல்ல செயலாலும ஒரு உயிருள்ள இயந்திரமாக மாறிக் கொண்டு வருகிறான். இரும்பு நுரையீரல்கள், ப்ளாஸ்டிக் இதயங்கள் என்று நவீன விஞ்ஞானத்தின் அடிமையாகிக் கொண்டு வருகிற அவன், அவற்றின் தயவில் தன் வாழ்நாளில் இரண்டு மூன்று வருடங்களை நீட்டித்துக் கொண்டு வாழ்கிறான். ஆனால் எந்த நவீன விஞ்ஞான கருவிகளின் துனையின்றி நோயின்றி மகிழ்vuவுடன்மனிதனுக்கு யோகா தேவைபடுகிறது.

யோகாசனம் செய்யும் போது கடைபிடிக்க வேண்டியவை
 • நல்ல சுத்தமான காற்றோட்டாமான இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.
 • அதிகாலை 4 முதல் 6 மணிகுள் செயதால் பலன் அதிகம் அல்லது 8 மணிக்குள் செய்து முடிக்க வேண்டும்.மாலையில் சூரியன் மறையும் நேரம் செய்ய வேண்டும் அதாவது 5.30 முதல் 7 மணிகுள் செய்ய வேண்டும்.
 • ஆசனம் பயிற்சி தொடங்கும் முன் சிறுநீர்ப்பையும்,மலககுடலையும் காலி செய்ய வேண்டும்.காலி செய்த பிறகே யோகாசனத்தை செய்ய வேன்டும்.
 • யோகாசனத்தை வெறும் வயிற்றில் செய்வது நல்லது இல்லையேல் யோகா முன் 30 நிமிடத்திற்கு முன்னால் ஓரு கப் பால் சாப்பிடலாம்.மாலை வேளையில் செய்யும் போது சாப்பிட்டு நாலு அல்லது ஐந்து மணி நேரம் பிறகு செய்வது நல்லது.
 • இறுக்கம் இல்லாமல் தளர்ச்சியான உடையே அணிய வேண்டும்
 • ஓவ்வொரு ஆசனத்திற்கும் மற்றொரு ஆசனத்திற்கும் இடையிலும் நிதனமாக ஆழமாக மூச்சை இழுத்துவிட்டு அடுத்த ஆசனத்தை தொடர வேண்டும்.
 • உடல் நோய் இருப்பின் அந்த நோய்க்காண யோகப்பயிற்சியை அதிக முனைப்புடன் செய்யவும்.
 • கடினமான் ஆசனங்களை ஆசிரியர் உதவியவுடன் தான் செதிடல் வேண்டும்.
செய்ய கூடாதவை
 • அவசர அவசமாக யோகா செய்யகூடாது. மிகவும் நிதனமாக செய்ய வேண்டும்.
 • மது, புகை, டீ, காபி, அதிக காரம், உப்பு, புளி,அ சைவம் இவற்றை தவிர்க்க வேண்டும்.
 • வியர்வை வரும்படி யோகாசனம் செய்யகூடாது.
 • தனக்கு வராத ஆசனங்களை மிக கஷ்டப்பட்டு செய்யகூடாது
 • மலச்சிக்கல் இருப்பின் மிகவும் எளிமையான ஆசனத்தை செய்ய வேண்டும்.
 • முழு வயிறு உணவு உண்ட பிறகு ஆசனங்கள் செய்யகூடாது.
 • பெண்கள் மாதவிலக்கு நாட்களில் ஆசனம் செய்வதை தவிர்க்கவும்.
 • கருவுற்ற தாய்மார்கள முதல் 4-5 மாதங்கள் வரை யோகா செய்யலாம் இது குழந்தை பேருக்கு உதவும்.குழந்தை பேறுக்கு பின் மூன்று மாதங்களுக்குப் பிறகு யோகா செய்யலாம்.

பத்மாசனம்

பத்மா என்றால் தாமரை என்று பொருள். இந்த ஆசனம் செய்யப்படும்போது தாமரை பூ போல தோற்றம் கிடைக்கும் ஆகவே இந்த பெயர்.

செய்முறை

 • பத்மாசனம் செய்யும் முன் தரையில் நேராக அமர்ந்து  இரண்டு கால்களை நேராக முதலில் நீட்டிகொளவும்
 • வலது காலைமடக்கி இடது தொடையின் மேலும், இடது காலைமடக்கி வலது தொடையின் மேல் வைத்து படத்தில் உள்ளவாறு வைத்துக்கொள்ள வேண்டும்
 • எந்த கால்களை வேண்டுமானாலும் முதலில் மடக்கிவைக்கலாம்.
 • பத்மாசனத்தில் அமர்ந்த பின்பு உடல் நேராகவும் பார்வை நேராகவும் இருக்கவேண்டும்
 • உடலை இறுக்கி பிடித்தவாறு இருத்தல் கூடாது
 • உள்ளங்கை மேல்நோக்கி இருக்க வேன்டும் ஆள்காட்டி விரல் கட்டை விரலை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்(சின்முத்ரா)
 • நேராக அமர்ந்து சுவாசம்( மூச்சு ) மெதுவாக விடவேண்டும்.
நேர அளவு

முதலில் 1-5 நிமிடங்கள் வரை செய்யலாம். பழகின பிறகு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செய்யலாம்.

பயன்கள்
 • வயிற்றின் இரத்த ஓட்டம் சரிப்படுத்தப்படுகிறது
 • ஞாபகசக்தி அதிகமாகும்
 • முதுகுத்தண்டு வலுப்படும்
 • தொப்பை குறையும்
 • பிராணாயாமம்,ஜபம்,தியானம் செய்வதற்கு மிகவும் உயரந்த ஆசனம்
 • நரம்புகளுக்கு நல்லது
 • மனோசக்தி கூடுகிறது

வஜ்ராசனம்

வஜ்ரம் என்றால் வைரம் என்று பொருள், இந்திரன் வைத்திருக்கும் ஆயுதத்தின் பெயர் வஜ்ராயுதம், பல ஆண்டுகள் நன்கு வளர்ந்து விளைந்து பருத்து பெருத்த மரத்தை வெட்டினால் அதன் நடுவில் கருமையான ரேகைகள் உடன் கூடிய தண்டு பாகம் தெரியும் இதை வஜ்ரம் பாய்ந்த கட்டை என்பார்கள், அப்பகுதியை சாதாரணமாக கோடாரியால் வெட்டுவதும், உளியினால் செதுக்குவதும் மிகவும் கடினம், அவ்வளவு அடர்த்தியாக இரும்பை போன்று அப்பகுதி இருக்கும், நம் உடலை வஜ்ரம் போல் வைத்திருக்க இந்த வஜ்ராசனம் உதவுகிறது.

செய்முறை
 • சாதாரணமாக நாம் அமரும் சுகாசனத்தில் அமரவும்
 • நிமிர்ந்து நேராக உட்காரவும்
 • இரண்டு கால்களையும் நேராக நீட்டவும்
 • இரண்டு கால்களையும் ஒவ்வொன்றாக மடக்கி, கால் முட்டி தரையில்பட அமரவும்
 • இரண்டு பாதங்களும் மேல் நோக்கிய நிலையில், அவைகளுக்கிடையே புட்டங்கள் தரையில் பட அமரவேண்டும்
 • கால்களின் இரண்டு கட்டை விரல்களும் ஒன்றை ஒன்று பார்த்த நிலையில் இருக்க வேண்டும்
 • கால் முட்டிகள் இரண்டும் எந்த அளவிற்கு முடியுமோ அவ்வளவிற்கு அருகருகே இருத்தல் வேண்டும்
 • உள்ளங்கையை தொடையில் வைத்திருக்க வேண்டும் பார்வை நேராக இருத்தல் வேண்டும்
 • இந்த ஆசணத்தை செய்து முடிக்கும் வரை மேலுடல் நேராக இருத்தல் வேண்டும்
பயன்கள்
 • தொடை தொங்கு சதைகள் குறையும்.
 • முதுகுத் தண்டிற்கு நல்ல பயிற்சி கிடைக்கும்.
 • அடி வயிற்று உறுப்புகள் அவைகளுக்குரிய இடத்தில் சரியமைந்திருக்கும்.
 • முதுகுத் தண்டையொட்டியுள்ள தசைகள் உறுதியாகி பலம் பெறும்.
 • வயிற்றிற்குக் கீழ் உள்ள பகுதி பலப்படும்.
 • இறுகியிருக்கும் தசை நாறுகள், பாத எலும்புகள், கணுக் கால்கள், கெண்டைக் கால் தசைகள், தொடை தசைகள், இடுப்பு ஆகியன தள ர்ந்திடும்.
நேர அளவு
 • 1 முதல் 2 நிமிடங்கள் வரை செய்யலாம்.
 • 2-3 முறை செய்யலாம்.
எச்சரிக்கை

உங்களுடைய முழங்கால்கள் காயமுற்று இருந்தாலோ அல்லது வலி இருந்தாலோ இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம்.

அர்த மத்ஸ்யேந்த்ராசனம்

அர்த என்ற வடமொழிச் சொல்லுக்கு”அரை” அல்லது “பாதி” என்று பொருள் இடுப்பை முழுதும் வளைப்பது கடினமான யோக முறையாதலால் அர்த மத்ஸ்யேந்திராசனம் அல்லது இடுப்பை பாதி வளைக்கும் யோக முறை யோகா பயிற்சியாளர்களிடையே பிரபலமடைந்தது

செய்முறை
 • கால்களை முதலில் நேராக நீட்டி விரிப்பின் மீது விறைப்பாக நேரே நிமிர்ந்து உட்காரவும்.
 • வலது காலை மடக்கிக் கொள்ளவும்.
 • வலது கணுக்காலின் மேல் உட்கார்ந்து கொள்ளவும்.
 • இடது காலைத் தூக்கி, கீழே வைக்கப்பட்டிருக்கும் வலது காலுக்குக் குறுக்கே அப்புறம் (வலப்புறம்) கொண்டு சென்று வைக்கவும்இடது காலை இன்னமும் தரைப்பக்கம் அமர்த்தி பாதத்தைப் பிறப்பு உறுப்புக்குக் கீழே அமைத்துக் கொள்ளவும். இடது முழங்கால் செங்குத்தாய் நிற்பதுபோல் இருக்கவும்.
 • வலது கையின் கை இடுக்கிற்குள் இடது முழங்காலானது போகும் வண்ணம் செய்யவும்.
 • பின்னர் வலது உள்ளங்களையினால் வலது கால் மணிக்கட்டைப் பிடித்துக் கொள்ளவும்.
 • இடது கையை முதுகுப்பக்கம் கொண்டு வரவும்.
 • இடது கையினால் இடது கணுக்காலைப் பிடித்துக் கொள்ளவும்.
 • மூச்சை விட்டுக்கொண்டே இடது பக்கமாக இடுப்பை நன்றாகத் திருப்புங்கள். மார்பை நேராக நிறுத்தி வைக்கவும்.
 • தலையை நன்றாகத் திருப்புங்கள்.
 • அப்போது உங்களின் கண்பார்வை இடது பக்கமாக அமையக் கூடாது. வலது பக்கம் உள்ள பொருட்கள் மீது நிலைபெற வேண்டும்.
 • இவ்வாறு இரண்டு மூன்று முறை செய்தபின் சிறிது சிறிதாகப் பிடிகளைத் தளர்த்தி கை, கால்களை விடுவித்து யதார்த்த நிலைமைக்குத் திருப்பவும்.
பலன்கள்
 • நரம்புத்தளர்ச்சி அடைந்தவர்களை நல்ல நிலைக்குக் கொண்டு வருகிறது.
 • முதுகெலும்பினை வளைத்து நெகிழுந்தன்மையானதாக்கி, வளமுடன் செயல்படச் செய்கிறது.
 • வயிற்றுத் தசைகளை வளமாக்குகிறது. முதுகெலும்புப் பகுதி முழுவதும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
 • பிடரியில் ஓடக்கூடிய நரம்புகளுக்கு வலுவூட்டுகிறது. நோய்களை உருண்டு திரளச் செய்கிறது.
 • இடுப்புவலி, முதுகு வலிகளைப் பறந்தோடச் செய்யும்
 • வயிற்றுக் கோளாறுகளை நீக்குகிறது. மலச்சிக்கல், பசி மந்தத்தையும் இது நீக்கும்.
 • சிறுநீரக நோய்கள் நீங்கும்.
 • இளமையுடன் இருக்கச் செய்யும் ஆசனம் இது.
நேர அளவு
 • 10 -15 வினாடிகள்.
 • 2 முறை செய்யலாம்.

தனுராசனம்

தனு என்றால் வில்.இது செய்யப்படும்போது வில் தோற்றம் தருவதால் இப்பெயர்.

செய்முறை

 • முகம் தரைநோக்கி இருக்குமாறு கவிழ்ந்து படுக்க வேண்டும்
 • கைகளை உடலின் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும்
 • கால்களை பின்புறமாக வளைத்துப் பிடிக்கவும்.
 • மெல்ல கைகளை உயர்த்தி கணுக்கால்களைப் பிடிக்கவும்
 • மார்பு பகுதியை உயர்த்தவும்
 • உடல் எடை முழுவதையும் வயிறு மட்டுமே தாங்க வேண்டும்.பின் முன்னும் பின்னும் ஆட வேண்டும்.
 • இந்நிலையில் சில நொடிகள் இருந்துவிட்டு மெல்ல மெல்ல முதல் நிலைக்கு வரவும்.
பலன்கள்
 • முதுகெலும்பின் வழியாக ஓடும் அனைத்து நாடி நரம்புகளுக்கும் புது ரத்தம் செலுத்தப்பட்டு உறுதி அடைகிறது.
 • இரைப்பை, குடல்களிலுள்ள அழுக்குகள் வெளியேறும்.
 • ஜீரண சக்தி அதிகப்படும்.
 • சோம்பல் ஒழியும்.
 • கபம் வெளிப்படும்.
 • தொந்தி கரையும்.
 • மார்பகம் விரியும்.
 • இளமைத் துடிப்பு உண்டாகும்.
 • அஜீரணம், வயிற்று வலி, வாய் துர்நாற்றம், தொந்தி, வயிற்றுக் கொழுப்பு, ஊளைச் சதை நீங்கும்.
 • மூலபவுந்திரம், நீர்ரோகம், நீரிழிவு நோய் நீங்கும்
 • பாங்கிரியாஸ் சிறுநீர்க் கருவிகள், ஆண்களின் டெஸ்டீஸ், பெண்களின் ஓவரி. கர்ப்பப்பை நல்ல இரத்த ஓட்டம் ஏற்பட்டு பலம் பெறும்.
 • இளமைப் பொலிவு உண்டாகும்
 • பெண்களின் மாதவிடாய் சம்பந்தமான நோய்கள் நீங்கும்.
நேர அளவு
 • 10 -15 வினாடிகள்.
 • 2-3 முறை செய்யலாம்.

மச்சாசனம்

மச்சம் என்ற சொல்லுக்கு மீன் என்ற பொருள் உண்டு. இந்த ஆசனம் தண்ணிரில் மீன் போல் மிதக்க உதவுகிறது அதனால்தான் இது மச்சாசனம் என்று பெயர் பெற்றுள்ளது

செய்முறை
 • பத்மாசனத்தில் அமரவும்.
 • முழங்கைகளைக் கொண்டு மெதுவாக பின்னால் சாயவேண்டும் பிறகு அப்படியே முதுகு கீழே பட படுக்கவேண்டும்.
 • இந்த நிலையை மேற்கொள்ளும்போது உங்கள் கைகள் மற்றும் முழங்கைகளை ஆதரவிற்கு பயன்படுத்திக் கொள்ளவும்.
 • கைகளை பின் பக்கமாக தலையை நோக்கி கொண்டு வரவேண்டும்.
  இப்போது உள்ளங்கைகளை அப்படியே தரையில் படுமாறு வைக்கவும்.
  உங்களின் அந்தந்தந்த தோள்களுக்கு இணையாக கைகள் எதிர் முகமாக இருக்கவேண்டும்.
 • உச்சதலையை தரையில் பதிய வைக்க வேண்டும்
 • இடுப்பு, முதுகு, தோள்களை தரையிலிருந்து உயர்த்தவும்.
  உங்கள் உடலை கைகள் தாங்கவேண்டும். முதுகுத் தண்டை வளைக்கவும்
  இதே நேரத்தில் உங்கள் கழுத்து, தலையை பின்புறமாக நன்றாக வளைக்கவும்.
பயன்
 • மார்பு பகுதி முழுமையாக விரிவடைந்து, சுவாசம் முழுமையானதாகிறது.ஆஸ்துமா நீங்கும்.
 • கழுத்து நீட்டப்படுவதால் தைராய்ட் சுரப்பிகள் பயனடைகின்றன
 • இடுப்பு மூட்டுகளின் இறுக்கம் குறைந்து வளையும் தன்மை ஏற்படும்
 • மூல நோய் சரியாகின்றது
 • நாளமில்லா சுரப்பிகளுக்கு இரத்த ஓட்டம் அதிகமாகி செயல்பாடு அதிகரிக்கிறது
நேர அளவு்
 • ஒரு முறை செய்தால் போதுமானாது்.

யோக முத்ரா

செய்முறை
 • பத்மாசனத்தில் அமரவும்.
 • இடது கையால் வலது கை மணிகட்டை முதுகுப் பக்கமாக பிடித்துக் கொள்ள வேண்டும்.இது லேசான பிடிப்பாக இருக்க வேண்டும்
 • பின்பு மெதுவாக குனிந்து முன்னால் இருக்கும் தரையை நெற்றியால் தொடவேண்டும்.தாடை நெஞ்சை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
பலன்கள்
 • ஜீரண உறுப்புகள் பலமடைகின்றன. அதனால் அவற்றின் இயக்கங்கள் அனைத்தும் வேகமாக நடை பெறுகின்றன.
 • குடலின் இயக்கம் சீராகிறது.
 • இந்த ஆசனம் நீடித்த மலச்சிக்கல் நோய் உள்ளவர்களை விரைவில் குணப்படுத்தி விடும்.
 • மூக்கடைப்பை சரிசெய்யும்.
 • முக்கியமாக ஆண்மைக் குறைவு உள்ளவர்களுக்கு இது வரப்பிரசாதம்.
நேர அளவு
 • 0 முதல் 20 வினாடிகள் செய்ய வேண்டும்.இரண்டு அல்லது மூன்று முறை செய்யலாம்.

ஹலாசனம்

ஹலா என்றால் ஏர். இந்த ஆசன, ஏரு போன்று இருப்பதால் இப்பெயர்.

செய்முறை

 • மல்லார்ந்து படுக்க வேண்டும்.
 • கைகள் பக்கவாட்டில் இருக்க உள்ளங்கை தரை நோக்கி இருக்க வேண்டும்.
 • கால்களை விறைப்பாக்கி, முழங்கால்கள் மடியாமல் மெதுவாக உயர்த்திப் பின்புறமாகத் கொண்டுவரவும்
 • மெல்ல வருகிற கால்கள் விரல்களால் தரையை தொட வேண்டும்
 • முட்டி மடங்காமல் இருக்க வேண்டும்
 • கால்கள்,தொடைகள் ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும்
 • முகவாய்கட்டை மார்பில் அழுததும் விதத்தில் இருக்க வேண்டும்
 • சிறிது நேரம் இந்நிலையில் இருந்து பின்னர் படிப்படியாக முதல் நிலைக்கு திரும்ப வேண்டும்.
நேர அளவு
 • 10 முதல் 20 வினாடிகள் செய்ய வேண்டும்.
 • இரண்டு அல்லது மூன்று முறை செய்யலாம்.

சவாசனம்

சவம் போன்ற நிலை எனவே சவாசனம்.

செய்முறை
 • மல்லாந்து படுக்கவும்,கைகள் உடலை விட்டுச் சிறிது தள்ளியிருக்க ,உள்ளங்கை மேலே பார்த்தவாறு இருக்க வேண்டும்
 • பாதங்களை வேண்டுமளவு பிரித்து வைத்து கொள்ளவும்
 • தலை எந்தப்பக்கமும் சாயாமல் நேராக வைத்து சாதாரணமாக சுவாசத்தை கண்களை மூடிக்கொண்டு செய்ய வேண்டும்.
 • தூங்கிவிடாமல் மனதிற்குள் காற்றில் மிதப்பது போல் கற்பனை செய்து கொண்டிருக்கவேண்டும்
நேர அளவு
 • 10 முதல் 20 வினாடிகள் செய்யலாம்
பலன்கள்
 • மனத்தையும் உடலையும் புத்துணர்வூட்டும். எந்த வகையான மன அழுத்தத்திலிருந்தும் உடனடி நிவாரணம். வேலைக்கும் ஓய்வுக்குமான சமச்சீர் நிலையை உருவாக்குவதில் உதவும்.
 • ஓய்வின்மை, பாதுகாப்பின்மையால் வெறுப்பு, கவலை உளைச்சல் மற்றும் பயத்திலிருந்து காக்கும். மன உறுதியை. வளர்த்துகொள்ள உதவும்.
 • வயோதிகம் கட்டுப்படுத்தப்படும்.
 • சக்தி அதிகரிக்கும்
 • தூக்கமின்மை விலகும். தூக்க மாத்திரைகளின் தேவைகள் குறையும்.
 • பலவிதமான தொந்தரவுகள் உள்ள பல மணி நேர இடைஞ்சலான உறக்கத்தை விட ஒரு சில நிமிடங்களே என்றாலும் மனோ-உடல் தணிவு நிலை அதிக பலனளிக்கு. முதிர்ந்தோருக்கு வயது சவாசனம் ஒரு சிறந்த பயிற்சி.
 • நடுத்தர வயதினோர் வேலைப்பளுவால் அடையும் மன, உடல் சோர்வுகளை போக்க இந்த ஆசனம் பெரிதும் உதவும். சவாசனத்தை
 • பகல் நேரத்தில் குறைந்த இடைவெளி நேரத்தில் அதிகமாக செய்யவும். இதனால் பகலில் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியும், மேலும் இரவில் தேவைப்பட்டால் கண் விழிக்கவும் உதவிடும்.
 • மற்ற ஆசனங்களின் மூலம் விறைப்படையும் தசைகள் சவாசனத்தின் மூலம் தளர்வுறுகின்றன. எந்த யோக பயிற்சியின் போதும் இறுதியாக சவாசனம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுரை: மேக்னம், தமிழ்நாடு

3.16666666667
s.tamilvanan Mar 07, 2016 07:11 PM

சூப்பர் பட் ப்ளீஸ் இந்த மாத்ரி nariya sollukana

செல்வ குமார் Feb 26, 2015 06:32 PM

மிகவும் அருமை

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top