தோலிலுள்ள வியர்வைச் சுரப்பிகள் (Sudoriferous Glands) வியர்வை திரவத்தை கசிந்து வெளியேற்றுகின்றன. உடலின் உஷ்ண நிலையை சீராக வைத்துக் கொள்ள வியர்த்தல் செயல்பாடு உதவுகிறது. தோல் மென்மையாகவும், ஈரப்பதமாகவும் அமைவதற்கும் இதுவே காரணம். வெயில் காலங்களிலோ, அல்லது உடலின் உஷ்ணம் மேலோங்கிய நிலையிலோ, வியர்வைச் சுரப்பிகளால் சுரக்கப்படும் வியர்வை காரணமாகவே உடல் இதமாகப் பாதுகாக்கப்படுகிறது. தோலிலிருந்து வியர்வை ஆவியாகி மறையும் போது உடலில் குளிர்ச்சியை உணர முடிகிறது.
வியர்வை அதிகரிப்புக்கு உடல் வெப்ப அதிகரிப்பும் ஓர் காரணம். எனினும், உடலின் சில பாகங்களில் குறிப்பாக அக்குள்களிலும், அடிப்பாதங்களிலும், உள்ளங்கைகளிலும், நெற்றியிலும், வியர்வை சுரப்பிகள் அதிகம் உள்ள காரணத்தாலும் இவ்விடங்களில் அதிக வியர்வை சுரக்கக்கூடும். மத்திய நரம்புத் தொகுதியின் அதீதச் செயல்பாடு காரணமாக நரம்பு முடிவுகள் தூண்டப்பட்டு கை, கால் வியர்வைச் சுரப்பிகள் அதிகளவு வியர்வையை சுரக்கக்கூடும். பெண்களை விட ஆண்களுக்கே அதிக வியர்வை சுரப்பதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
சில பல தூண்டல்களால் உடலில் அதிவியர்வை ஏற்படலாம். வெப்பம், வலி, பயம், பதற்றம், உடல் உழைப்பு, குமட்டல், வாந்தி போன்ற காரணங்களால் வியர்வை அதிகரிக்கலாம். சிலவகை ஆங்கில மருந்துகள் (diabhoetic drugs) வியர்வையை அதிகரிக்கச் செய்யலாம். தாளம்மை, ஆஸ்துமா, காசம், டைபாய்டு சுரம், இதய நோய் போன்ற கடுமையான நோய் தாக்குதல்களுக்குப் பின்னர் வியர்வை அதிகரிக்கலாம். தினமும் மாலை அல்லது இரவு லேசான சுரத்துடன் உடலில் வியர்க்கவும் செய்தால் காசநோய்க்கான (Tuberculosis) அறிகுறியாகக் கொள்ளலாம்.
உழைப்பே இல்லாதவர்களைவிட உழைப்பவர்க்கும், நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவர்க்கும் இரண்டு மடங்கு வியர்வை வெளியேறுகிறது. விளையாட்டு வீரர்களுக்கு ஒவ்வொரு நாளும் 5 லிட்டர் அளவுக்கு வியர்வை வெளியேற்றப்படுகிறது.
இயல்பாக வியர்வை வெளியேறினால் உடல் உஷ்ணம் சீராகப் பராமரிக்கப்படுதல், ரத்த சுத்திகரிப்பு, மென்மையான தோல் அமைப்பு போன்ற நன்மைகள் கிடைக்கின்றன. மாறாக, அதிகளவு வியர்த்தல் காரணமாக உடலிலும் மனத்திலும் அசவுரியங்கள் ஏற்படுகின்றன. உலகின் மில்லியன் கணக்கானோர் அதிவியர்வைப் பிரச்னையால் அவதிப்படுகின்றனர். உலக மக்கள் தொகையில் மூன்று சதவிகிதம் பேருக்கு அதிவியர்வை (Hyper hydrosis) பிரச்னை உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
Hyperhydrosis எனப்படும் அதிவியர்வைப் பிரச்னையைத் தீர்க்க உதவும் சில முக்கிய ஹோமியோ மருந்துகளையும் அவற்றின் அறிகுறிகளையும் பார்ப்போம்.
ஆதாரம் : தினமணி நாளிதழ்
ஆக்கம் : Dr.S.வெங்கடாசலம், மாற்றுமருத்துவ நிபுணர், சாத்தூர் 94431 45700
கடைசியாக மாற்றப்பட்டது : 5/15/2020
பாட்டி வைத்தியக் குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள...
ரத்த அழுத்தத்திற்கான ஹோமியோபதி சிகிச்சை பற்றி இங்க...
24 மணிநேரத்தில் உயிரை பறிக்கக் கூடிய கொடிய நோய்கள்...
3 வகை உடல் 6 வகை பருமன் பற்றி இங்கு கொடுக்கப்பட்டு...