பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / மருத்துவ முறைகள் / இயன்முறை மருத்துவம் / சவ்வு தேய்மானம், விலகல் என்றால் என்ன?
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சவ்வு தேய்மானம், விலகல் என்றால் என்ன?

சவ்வு தேய்மானம், விலகல் பற்றிய தகவல்.

  • சவ்வு மிட்டாய் அறிந்த நமக்கு சவ்வுக்கு விளக்கம் அதிகம் தேவையில்லை. உங்களில் சிலர் இந்த வார்த்தைகளை கடந்து அல்லது நண்பர்களுக்கோ உறவினர்களுக்கோ ஏற்பட்டதாக அறிந்து இருப்பீர்கள். இந்த சவ்வு போன்ற பகுதியை ஆங்கிலத்தில் Ligament என்று அழைப்பர். இது போன்ற வார்த்தைகளை சொல்லி வலியின் உச்சத்தில் இருக்கும் ஒருவரை மீண்டும் புரியாத ஒரு வார்த்தையைச் சொல்லி துன்பப்படுத்த வேண்டாம் என்ற எண்ணத்தில் மருத்துவர் பொதுவாகக் கூறும் ஒரு விளக்கம் சவ்வு விலகல் அல்லது தேய்மானம்.
  • மருத்துவர் உங்களுக்கு எல்லாவற்றையும் விளக்க ஆரம்பித்தால் சிலர் இவர் ரொம்ப பயமுறுத்துகிறார் என்று ஆளை மாற்றி விடுவார்கள். இதனால் அனைத்து மருத்துவர்களும் தரும் பொதுவான விளக்கம் சவ்வு விலகல், சவ்வு தேய்மானம். உண்மையில் இந்த சவ்வுத் தேய்மானம் போன்றவற்றிற்கு நிறைய மாறுபாடுகள் உள்ளன.
  • உடம்பில் நமக்குப் பொதுவாக தெரிந்த உள் உறுப்புக்கள் சில, தெரியாதவை பல, இந்தத் தெரியாத பலவற்றில் ஒன்று தான் இந்த சவ்வு. சவ்வு என்பதற்கு உங்கள் அனைவருக்கும் விளக்கம் தெரிந்து இருக்கும். இழுத்து விடும்போது மீண்டும் தன்னிலைக்கு அதாவது ஆரம்ப நிலைக்கு மீண்டும் வந்தடையும் எதையும் சவ்வு எனலாம். இதை ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என்றால் Rubber Band மாதிரியான ஒரு பகுதி.
  • இது உடம்பில் உள்ள அனைத்து மூட்டு பகுதிகளிலும் அமைந்துள்ளது. இது மூட்டுகள் வலுவாக எந்த தடையும் இல்லாமல் இயங்குவதற்கு உதவுகிறது. அதேபோல், இதன் முக்கிய வேலைகள் மூட்டுகளின் உள் கட்டமைப்பைத் தாங்கி பிடித்துக் கொள்கிறது. இதை ஆங்கிலத்தில் intra articular stability என்பார்கள். முன் கூறியது போல இது ரப்பர் போன்றது என்பதால் இரண்டு எலும்புகள் அதாவது மூட்டு இயங்கும் போது முன் பின் செல்லும் எலும்புகளை வழி நடத்துகிறது. இதை ஆங்கிலத்தில் Dynamic Stability என்பார்கள்.
  • பொதுவாக இந்த சவ்வு நார்க்கற்றைகளால் ஆன பகுதி. இதன் இயக்கம் மிக முக்கியமான் ஒன்றாகும். குறிப்பாக, மூட்டுகள் சரியாக இயங்குவதற்கு இன்றியமையாதது. ஒருவர் தன் மூட்டுகளை அதிகமாக இயக்கும் போது இந்த சவ்வு போன்ற பகுதிகள் தனது பழைய நிலைக்கு திரும்பும் பண்பை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து விடுகின்றன. ஒரு சவ்வு இந்தப் பண்பை இழக்கும் போது வலிகளைத் தர ஆரம்பிக்கிறது. இது பொதுவாக விளையாட்டு வீரர்களுக்கும், வயதானவர்களுக்கும் மற்றும் போதிய உடற்பயற்சி இல்லாமல் விளையாடும் யாருக்கு வேண்டுமாலும் சவ்வு விலகுதல் அல்லது கிழிந்து போகுதல் ஏற்படலாம்.
  • மிக அதிக நேரம் இயங்கும் போதோ அல்லது விளையாடும் போதோ ரப்பர் போன்ற இந்த சவ்வு கடுமையான இயக்கங்களை சந்திக்கும் போது, சில நேரங்களில், உள்ளே உள்ள சில நார்கற்றைகள் கிழிந்தோ அல்லது காயம் ஏற்பட்டோ வலிகளை ஏற்படுத்தும். இதனை ஆங்கிலத்தில் Sprain என்பார்கள். மருத்துவர்கள் நமக்கு விளக்கும் போது இதனை சவ்வு விலகல் என்று பொதுவான வார்த்தையை கூறி புரியவைக்கலாம்.

ஆதாரம் : முத்துக்கமலம் இணைய இதழ் (டாக்டர். தி. செந்தில்குமார்)

3.07575757576
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
vignesh Jan 19, 2018 01:59 PM

இதை எவ்வாறு சரி செய்ய முடியும்

பாலாஜி Oct 10, 2017 11:06 PM

முதுகின் அடிப்பகுதி சவ்வு விலகல் மருந்துகள் என்ன

Anonymous Jun 30, 2017 10:33 AM

வலி அதிகம் சரியாக என்ன வழிமுறை

பாக்யா Jun 14, 2017 12:20 AM

சவ்வு தேய்மானம் சரி செய்ய என்ன வழி?

பிரேம் Apr 28, 2017 10:01 PM

எப்படி சரி செய்வது

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
Back to top