பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / முதல் உதவி / மனை அறிவியல் - முதலுதவி
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மனை அறிவியல் - முதலுதவி

முதலுதவியில் துவங்கி, பின் ஆரோக்கியம், உணவு மற்றும் ஊட்டச்சத்துக்கான குறிப்புகள் மட்டுமல்லாது, இவை சம்பந்தப்பட்ட பல முக்கிய பகுதிகளை இங்கு காணலாம்.

மனை அறிவியல் கல்வி இளம் தலைமுறையை, அனைத்து தொழில்களிலும் சிறந்ததாகக் கருதப்படும் "வீடு அமைத்தல்” தொழிலுக்குத் தயார் செய்கிறது.

முதலுதவி

முதலுதவி கற்றல் என்பது ஒரு குடிமகனின் சமூகப் பொறுப்பாகும். ஒரு மனிதன் நோயுறும்போதும் காயம் அடையும் போதும், மற்றொருவர் உதவுவது பழக்கத்தில் இருந்தது. எனினும், 1877 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் புனித ஜான் அப்போஸ்தலர் பெயரில் "புனித ஜான் அவசர ஊர்தி சங்கம்” (St. John Ambulance Association) என்ற அமைப்பு நிறுவப்பட்டபோது தான் முதலுதவியின் அவசியம் உணரப்பட்டது.

முதலுதவி கோட்பாடுகளும், நடைமுறையும்

முதலுதவி என்பது பலத்த காயம் அல்லது திடீர் நோய் போன்றவற்றிற்கு, தகுதியான மருத்துவ நிபுணரால் அளிக்கப்படும் உதவி அல்லது சிகிச்சை ஆகும். அவ்வுதவி அந்த நேரத்தில் கிடைக்கும் வசதிகளையும், பொருட்களையும் பொறுத்து அமையலாம்.

முதலுதவியின் நோக்கங்கள்

  • உயிரைக் காப்பாற்ற
  • நிலைமை மோசமாவதைத் தடுக்க
  • குணமடைவதை மேம்படுத்த

முதலுதவியாளரின் பொறுப்புகள்

விபத்துக்கள் அதிகமாக நிகழ்வதால், முதலுதவி செய்பவரின் பங்கு மிக முக்கியமானதாகும். அவசர சிகிச்சை மேலாண்மையில், முதலுதவியாளரின் பொறுப்புகள் என்பன:

  1. தம்முடைய உயிருக்கு ஆபத்து பங்கம் ஏற்படாதவாறு நிலைமையை ஆராய்தல் மதிப்பீடு செய்தல்
  2. நோயின் நிலைமையை கண்டறிந்து, எதனால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை ஆராய்தல்
  3. அவசர நோயாளிகளின் நிலைமையைப் பொறுத்து உடனடியாக தகுந்த சிகிச்சை அளித்தல். ஒன்றுக்கு மேற்பட்ட காயம் ஏற்பட்டிருப்பின் உடனடி கவனம் அவருக்கு அளிக்கப்படுதல்
  4. அவசர சிகிச்சையில் நோயாளியின் நிலைமையின் தீவிரத்தைப் பொறுத்து, அவர்களை மருத்துவரிடமோ அல்லது மருத்துவமனைக்கோ தாமதமின்றி அனுப்பி வைத்தல்.
  5. முதலுதவியாளரின் பொறுப்பு மருத்துவர், செவிலியர் அல்லது தகுந்த நபரிடம் ஒப்படைத்த உடன் முடிகிறது. எனினும், அவர் நோயாளியை கவனிக்கும் பொறுப்பை மேற்கொள்பவரிடம் நிலைமையை விவரித்த பின், அவரது உதவி தேவையில்லை என்று உறுதிப்படுத்திக் கொள்ளும் வரை அங்கிருந்து செல்லக் கூடாது.

வரையறை

முதலுதவியாளர் என்பது அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனத்திடமிருந்து முதலுதவி அளிக்க தகுதியானவர் என்று சான்றிதழ் பெற்றவரைக் குறிக்கும் சொல் ஆகும். கருத்தியல் மற்றும் செயல் முறை வகுப்புகளைப் படித்து உத்தியோக சம்பந்தமான மேற்பார்வையிடப்பட்ட தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு "புனித ஜான் அவசரஊர்தி சங்கம்” (St. John Ambulance Association) வழங்கும் சான்றிதழ்கள் கொடுக்கப்படுகின்றன.

  • இச்சான்றிதழ் மூன்று வருடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
  • இவர்கள் நன்றாக / செம்மையாக பயிற்சி அளிக்கப்பட்டவர்கள்
  • முறையாக தேர்வு செய்யப்பட்டவர்கள்
  • செயலும், அறிவுத் திறனும் இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு பெற்றிருக்க வேண்டும்.

உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் மூன்று விதமான அவசர சூழ்நிலைகள் என்பன.

  1. மூச்சுத்திணறல்
  2. இதயத்துடிப்பு குறைதல்
  3. அதிகமான இரத்தப் போக்கு
  4. உணர்வு இழத்தல்

திறன்வாய்ந்த முதலுதவியாளர்கள் நோயாளிகளின் உயிரை முக்கிய தேவைகளைக் காப்பதன் மூலம் காப்பாற்ற இயலும் என்பதை ABC முறையின் உதவியுடன் கண்டறியலாம்.

  • A - திறந்த வெளி (An open Airway)
  • B - மூச்சு விடுதல் / சுவாசித்தல் (Breathing)
  • C - காற்றோட்டம் (Circulation) ''விரைந்து, நிதானமாக, கவனமாக செயல்படு” என்பதே முதலுதவி செய்பவருக்கு சிறந்த அறிவுரையாகும்.

மருத்துவ உதவி என்பது தகுதியான மருத்துவரால் மருத்துவமனையிலோ, கிளினிக்கிலோ அல்லது விபத்து நடந்த இடத்திலோ அளிக்கப்படும் சிகிச்சையாகும்.

  • மூழ்கும்போது கடற்பாசிகள் மற்றும் மண் உட்செல்லுதல்
  • அழுத்தம் (Compression)
  • கழுத்தைச் சுற்றி இறுக்கமாக கட்டப்படும் ஸ்கார்ப் (Scarf), கயிறு போன்றவற்றால் கழுத்து நெறிக்கப்படுதல்.
  • தூக்கில் தொங்குதல் அல்லது குரல்வளை நெறிக்கப்படுதல் (Hanging or throttling)
  • மயக்கமுற்ற ஒருவர் தலையணையின் மீது குப்புற படுத்திருந்தாலோ, பிளாஸ்டிக் பையால் முகம் முழுவதும் மூடியிருந்தாலோ, குழந்தையை சாய்த்து படுக்க வைத்தாலோ மூச்சடைப்பு ஏற்படும்.
  • சுவாசத்தை பாதிக்கும் காரணிகள் : வலிப்பு (Epilepsy), ரேபிஸ் (Rabies), டெட்டனஸ் (Tetanus) முதலியவை.

சுவாசித்தலும், மூச்சுத்திணறலும் (Respiration and Asphyxia)

சுவாசித்தல்

காற்றை உள்ளிழுத்தலும், வெளிவிடுதலும் மூச்சு விடுதல் எனப்படும். இது உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜன் அளிக்கும் முக்கியமான பணியாகும். ஆக்ஸிஜன் விநியோகம் நின்றால் அது மரணத்தில் முடியும்.

மூச்சுத்திணறல் (Asphyxia)

மூச்சுத்திணறல் நிலை என்பது நுரையீரலுக்குப் போதுமான ஆக்ஸிஜன் விநியோகம் கிடைக்காத போது ஏற்படுகிறது. இந்நிலை ஒரு நிமிடத்திற்கு மேல் தொடருமாயின் இதயத்துடிப்பு நின்று மரணம் சம்பவிக்கும். (உம்) மலை ஏற்றத்தில், கடலுக்கடியில்.

சுவாசப் பாதையை பாதிக்கும் காரணிகள்

  1. இசிவு/வலிச்சுருக்கம்/திடீர் சுருக்கம் (Spasm)
  2. நீரில் மூழ்கும் போது சுவாசப் பாதையில் தண்ணீர் புகுதல்,
  3. கரிவாயு, வாகனப் புகை, மூடிய தானியக்கிடங்கு மற்றும் பயன்படுத்தப்படாத கிணறு இவற்றிலிருந்து வரும் புகை முதலியவை சுவாசப் பாதையை அடையும் போது,
  4. மூச்சு குழல் இளைப்பு (Bronchial Asthma).
  5. சுவாசப் பாதைக்குள் சென்ற பெரிய உணவுத் துணுக்கு, செயற்கை பல் போன்ற அந்நிய பொருட்கள்.
  6. உணர்விழந்த நோயாளியின் பின்னுக்குத் தள்ளப்பட்ட நாக்கு.
  7. தொண்டையில் வெந்த புண் அல்லது சுடுபுண் மற்றும் அரிப்பு விளைவாக திசுக்கள் வீக்கமடைதல்.
  8. மார்புச்சுவர் (Chestwall) அல்லது உதரவிதானம் (diaphragm) நரம்பு நோய்களால் செயல் இழத்தல்.

சுவாச மையத்தை பாதிக்கும் காரணிகள்

  1. மார்பியா (Morphia), பார்பிச்சுவரேட்ஸ் (Barbituarates) (தூக்கமாத்திரைகள்)
  2. மின் அதிர்ச்சி (Electric shock)
  3. வாதம் (Stroke)
  4. மார்பு அழுத்தம் (Compression of the chest)
  5. சுரங்க குவாரிகளில் ஏற்படும் மண் மற்றும் நிலச்சரிவ பள்ளங்கள், தானியக்கிடங்கில் அமுக்கம், வீடு இடியும்போது விழும் தூண்களும், உத்தரங்களும்.
  6. சுவரில் அல்லது மற்ற தடைகளில் அல்லது கூட்டத்தில் நெருக்கியடித்தல் (Stampede)
  7. அதிகமான உயரத்தில் ஏற்படும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை

மூச்சுத்திணறலின் அறிகுறிகள்

  1. தூக்கமின்மை அல்லது அமைதியின்மை (restlessness)
  2. மூச்சுவிடும் வீதம் அதிகரித்தல்
  3. சுவாசம் குறைதல், கழுத்து நரம்பு புடைத்தல்
  4. முகம், நகங்கள், உதடு, விரல் மற்றும் கால் விரல்கள் நீலமாக மாறுதல்.
  5. நாடித்துடிப்பு அதிகரித்தலும், பலவீனமாதலும்.

சுவாசம் நின்ற பின்பு இதயத்துடிப்பு பத்து முதல் பன்னிரெண்டு நிமிடங்கள் வரை தொடர்ந்து இருக்கும். இச்சமயத்தில் செயற்கை சுவாசம் உடனடியாக கொடுக்கப்பட்டால் இறப்பிலிருந்து தடுக்க முடியும்.

மேலாண்மை (Management)

  1. முடிந்தால் விபத்தை அல்லது அதன் காரணத்தை அப்புறப்படுத்துதல்
  2. மார்பு மற்றும் கழுத்துப் பகுதிகளில் இறுக்கமான உடையை தளர்த்துதல் (உம் கழுத்துப்பட்டை)
  3. இதய இயக்க மீட்பு (Resusciation)
  4. காற்று வர வழியமைத்தல்
  5. சுவாசத்தை சோதித்தல்
  6. காற்று தடைபடா வண்ணம் வழியமைத்தல்.
  7. செயற்கை சுவாசம் - வாயோடு வாய் வைத்து சுவாசம் அளித்தல்.
  8. சுற்றோட்டம் (Circulation) மார்பை அமுக்குதல். மீட்சி நிலை (Recovery position) சுவாசிக்கின்ற அல்லது இதய இயக்க மீட்பு செய்யப்பட்ட விபத்துக்குள்ளானவர், மீட்சி நிலையில் வைக்கப்பட வேண்டும். தாடையும், நாக்கும் பின்னுக்குத் தள்ளப்படாமலும் வாந்தி மற்றும் உமிழ்நீர் தடையின்றி வெளிவருமாறும் வைக்கப்படுவதே இதன் நோக்கமாகும்.

செய்முறை

  • அ. விபத்துக்குள்ளானவரின் மார்பை நோக்கி மண்டியிட்டு சட்டைப்பையில் இருக்கும் கண்ணாடி அல்லது கனமான பொருட்களை நீக்க வேண்டும்.
  • ஆ. முகவாயை நிமிர்த்தியும், கால்களை நீட்டியும் விட்டு சுவாசப்பாதை தடையின்றி இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும்.
  • இ. விபத்துக்குள்ளானவரின் உடலுக்கு செங்குத்து கோணத்தில் இருக்குமாறும் உள்ளங்கை வெளிப்புறம் இருக்கும் படியும் உமது கையை வைக்கவும்.
  • ஈ. அவரின் மற்றொரு கையை மார்புக்கு குறுக்காக கொண்டு வந்து புறங்கையின் மேல் கன்னத்தோடு ஒட்டி இருக்குமாறு பிடித்துக் கொள்ள வேண்டும்.
  • உ. உம்முடைய மற்றொரு கையால் விபத்துக்குள்ளானவரின் காலை பற்றி செங்குத்தாக, முழங்கால் மடிந்தும் பாதம் தரையில் ஊன்றி இருக்குமாறும் பிடித்துக் கொள்ள வேண்டும்.
  • ஊ. கன்னத்தின் அடியில் வைத்துள்ள உமது கையை அப்படியே வைத்துக் கொண்டு, மெதுவாக அடித் தொடையை அழுத்தவும் அல்லது இன்னொரு கையால் இழுத்து விடவும். இப்படியாக விபத்துக்குள்ளானவரை உம்மை நோக்கி உருட்டவும்.
  • எ. சுவாசப் பாதை திறந்திருப்பதை விபத்துக்குள்ளானவரின் தலையை பின்பக்கம் சாய்த்து, மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
  • ஏ. இடுப்பும், முழங்காலும் ஸ்திரமாக அமைய காலை செங்குத்தாக இருக்கும்படி செய்யவும்.
  • ஐ. நாடித்துடிப்பையும், சுவாசத்தையும் சோதிக்கவும்.

மேலாண்மைத் திறன் / நோயைக் கட்டுப்படுத்துதல்

விபத்துக்குள்ளானவரின் வாயில் அடைத்துள்ள பாசி போன்றவற்றை உடனே நீக்கி விட்டு, செயற்கை சுவாசம் கொடுக்கவும். இன்னும் நீரிலேயே இருந்தார் என்றால் அங்கேயே செயற்கை சுவாசத்தை கொடுக்க முடியும்.

  1. ஒரு கையால் விபத்துக்குள்ளானவரை தாங்கி மற்றொரு கையால் தலையைத் தாங்கிக் கொண்டு அவர் மூக்கை மூடிவிட்டு வாயோடு வாய் வைத்து செயற்கை சுவாசம் கொடுக்க முடியுமெனில் கொடுக்கலாம்.
  2. ஆழமான தண்ணீர் எனில், விபத்துக்குள்ளானவரை கரைக்கு கொண்டு வரும் சமயம் அவ்வப்போது மூச்சுக் காற்று கொடுக்கலாம்.
  3. திடமான தரையில் கிடத்தி பின் சுவாசம், நாடித்துடிப்பு இவற்றை சோதித்து தேவையென்றால் இதய இயக்கம் மீட்பைத் தொடரலாம்.
  4. விபத்துக்குள்ளானவர் சுவாசிக்க ஆரம்பித்த பின் அவரை மீட்பு நிலையில் வைக்கவும்.
  5. தண்ணீரில் மூழ்கியவரை மிதமான சூழலில் வைத்திருக்கவும். முடிந்தால் அவருடைய நனைந்த ஆடைகளை அகற்றி, அவர் உடல் ஈரம் உலர விடவும். மாற்று ஆடை அல்லது துண்டால் மூடவும். தேவையெனில் வெப்பக்குறைவிற்கு (Hypothermia) சிகிச்சை அளிக்கவும்.
  6. மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யவும். நீட்டிய நிலையிலேயே சிகிச்சைக்கு ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்லவும்.

கழுத்தை நெறித்தலும் தூக்கில் தொங்குதலும் (Strangulation and hanging)

அ. கைகளால் கழுத்தை நெறிப்பதாலும் கழுத்தைச் சுற்றி கயிறு அல்லது கைக்குட்டையால் கழுத்து கட்டப்படுவதாலும் கழுத்து நெறிப்பு ஏற்படுகிறது.

ஆ. தொங்கும் போது முதுகெலும்பு அமுக்கப்பட்டு உடைகிறது. அதனால் தண்டுவடமும் அறுபடுகிறது.

மேலாண்மைத் திறன்

  • குரல் வளையை நெருக்கிக் கொண்டிருக்கும் பட்டையை அறுக்கவும் அல்லது நீக்கவும்.
  • தொங்கிக் கொண்டிருந்தால் உடலை நிமிர்த்தி, கயிற்றை தளர்த்தவும் அல்லது வெட்டி விடவும்.
  • செயற்கை சுவாசம் கொடுக்கவும்.
  • மேற்கூறியவற்றை செய்வதற்கு காவலர் (Policeman) வரும் வரை காத்திருக்க வேண்டாம்.

மூச்சடைப்பு (Choking) (மூச்சுக்குழாயில் தடை ஏற்படுதல்)

இது குழந்தைகளிடம் பொதுவாக நிகழ்வது. கோலி, பொத்தான் அல்லது விதை போன்றவை சுவாசப்பாதையில் மாட்டிக் கொள்வதால் ஏற்படலாம். பெரியவர்களுக்கும் உணவு தவறான பாதையில் செல்லும் போது மூச்சடைப்பு ஏற்படலாம்.

பெரியவர்களுக்கு மேலாண்மை செய்யும் விதம்

பாதிக்கப்பட்டவர் நின்று கொண்டிருக்கும் போது முதல் உதவியாளர் அவருக்கு பின்னால் நின்று கொண்டு கைகளால் பாதிக்கப்பட்டவர் இடுப்பைச் சுற்றி வளைக்க வேண்டும். உம்முடைய மற்றொரு கையால் அவருடைய முட்டியை கை முட்டி (fist) பிடித்து கட்டை விரலை வயிற்றை அமுக்கும்படி தொப்புளுக்கு சற்று மேலும் விலா எலும்பு கூட்டுக்குக் கீழேயும் வைக்க வேண்டும்.

உம்முடைய முட்டியை பாதிக்கப்பட்டவர் வயிற்றில் வேகமாக மேல் நோக்கி அழுத்தமாக செலுத்தவும். தேவைப்படுமாயின் உள் சுவாசக் குழாய்க்குள் சென்ற பொருள் வெளியேறும் வரை பல முறை திரும்பச் செய்யவும். பாதிக்கப்பட்டவர் உட்கார்ந்திருந்தால் முதலுதவியாளர் அவருடைய நாற்காலிக்குப் பின் நின்று இதையே செய்ய வேண்டும். தலை, மார்பை விட தாழ்ந்திருக்குமாறு முன்னோக்கி குனியச் சொல்ல வேண்டும். அவரால் இரும்ப முடியாதபோது உம்முடைய அடிக்கையால் தோள்பட்டைகளுக்கு இடையில் 5 முறை பலமாகக் குத்தவும். தேவைப்பட்டால் இதையே நான்கு முறை திரும்பச் செய்யவும். பாதிக்கப்பட்டவர் படுத்திருந்தால் அவரை மல்லாக்க படுக்க வைத்து, கால்களை அகற்றி வைக்க வேண்டும். உம்முடைய கைகளை ஒன்றின் மேல் ஒன்று வைத்துக் கொண்டு அடியிலுள்ள கை பாதிக்கப்பட்டவரின் தொப்புளுக்கும், எலும்புக் கூட்டிற்கும் இடையிலான வயிற்றுப்பகுதியில் வைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவரின் வயிற்றை வேகமாக மேல் நோக்கி அழுத்தவும். தேவையெனில் திரும்பச் செய்யவும். அவரை ஒரு பக்கமாக படுக்க வைத்தால் மூச்சுத் திணறலைத் தடுக்கலாம். உணவுத் துணுக்குகளோ மற்ற பொருளோ வெளியேறிய பின் செயற்கை சுவாசம் தேவைப்பட்டால் கொடுக்கலாம்.

குழந்தைகளில் நோயைக் கட்டுப்படுத்தும் முறை

  1. கால்களைப் பிடித்துக் கொண்டு தலைகீழாக இருக்குமாறு செய்தபின் குழந்தையின் முதுகில் மூன்று அல்லது நான்கு முறை ஓங்கி அறையவும்.
  2. சுவாசம் தொடர்ந்து இயல்பான நிலைக்குத் திரும்பியவுடன் ஐஸ் உறிஞ்சக் கொடுக்கலாம் அல்லது குளிர்ந்த நீரைப் பருகக் கொடுக்கலாம்.
  3. வெண்ணெய், ஆலிவ் எண்ணெய் அல்லது மருத்துவ பாரபின் (paraffin) சிறிதளவு கொடுக்கலாம்.
  4. வெந்நீரில் நனைத்துப் பிழிந்த துணியை, கழுத்தின் முன் பகுதியில் போடவும்.
  5. சுவாசம் நின்றுபோனால் செயற்கை சுவாசம் கொடுக்கவும்.

நோயைக் கட்டுப்படுத்தும் முறை

பாதிக்கப்பட்டவரை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தி செயற்கை சுவாசம் அல்லது சுத்தமான ஆக்ஸிஜன் கொடுக்க வேண்டும்.

  1. கதவு மற்றும் சன்னல்களை திறந்து வைத்து சுத்தமான காற்று சுழற்சி இருக்குமாறு உறுதி செய்து கொள்ள வேண்டும்.
  2. மூடப்பட்ட பகுதிக்குள் நுழையுமுன் இரண்டு அல்லது மூன்று முறை ஆழ்ந்த சுவாசம் எடுத்துக் கொள்ளவும். (deep breaths) முடிந்தவரை மூச்சை பிடித்துக் கொள்ள வேண்டும்.
  3. தரையில் தவழ்ந்து செல்லவும் (புகை காற்றை விட அடத்தியாக உள்ளதால்) பாதிக்கப்பட்டவரை விரைந்து சுத்தமான காற்று இருக்குமிடத்திற்கு கொண்டு வரவும்.
  4. அவருடைய கழுத்து, மற்றும் இடுப்பை சுற்றியுள்ள ஆடைகளை தளர்த்தி விட்டு, மூச்சுத்திணறல் ஏற்பட்டிருப்பின் செயற்கை சுவாசம் கொடுக்கவும்.

கார்பன்-டை-ஆக்ஸைடும் (CO,) மற்ற வாயுக்களும்

நிலக்கரிச் சுரங்கங்கள், ஆழமான உபயோகிக்கப்படாத கிணறுகள் மற்றும் கழிவுநீர்க் குட்டைகளில் இவ்வாயு காணப்படும். குளிர்சாதனப் பெட்டி, சமையல் மற்றும் விளக்கு எரிக்க பயன்படுத்தப்படும், அடைக்கப்பட்ட வாயுக்கள் போன்றவைகளும் மூச்சுத்திணறல் ஏற்படுத்தும்.

நோயைக் கட்டுப்படுத்தும் முறை

  1. மேற்கூறப்பட்ட எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கவனிக்கவும்.
  2. நிமிர்ந்த நிலையில் உள்ளே செல்லவும் (காற்றைவிட வாயுக்கள் அடர்த்தியானவை. அதனால் தரையில் பரவியிருக்கும்).
  3. தூய காற்றுள்ள இடத்திற்கு விபத்துக்குள்ளானவரை விரைந்து கொண்டு வரவும்.
  4. காற்றோட்டம் சாத்தியமற்ற போதும், கொடிய நச்சு வாயு என்று சந்தேகம் ஏற்பட்டாலும் காற்று முகமூடியை உபயோகித்து பாதுகாத்துக் கொள்ளவும்.

மின்வழி காயங்கள் / அதிர்ச்சி

உடலின் ஏதாவதொரு பகுதி பாதுகாப்பு (இன்சுலேட்) செய்யப்படாத மின்சாரம் பாய்கின்ற கயிறு மீதோ (wire) கேபிளின் மீதோ (Cable) அல்லது கம்பியின் (rail) மீதோ படும்போது மின்வழி அதிர்ச்சி (electric shock) ஏற்படுகிறது. வீடுகளில் உடைந்து போன ஸ்விட்சுகள் அல்லது இணைப்பு (Switches or Fuses), தவறாகக் கொடுக்கப்பட்ட இணைப்புகள் இவற்றால் காயம் ஏற்படுகிறது. இக்காயம் இலேசானதாகவோ அல்லது மரணம் விளைவிக்கக் கூடியதாகவோ அமையலாம். பூமியுடன் தொடர்புள்ள கம்பியின் மீது மின்சாரம் பாயும் போது மின்வழி மனித உடலில் அதிர்ச்சி ஏற்படுத்துகிறது.

இது ஈரமான பகுதியில் மிக வேகமாக பாய்கிறது. ஈரமான நிலையில் குறைந்த மின்னழுத்தம் (low voltage) கூட அபாயகரமானது. கீழ்ப்பகுதியில் உள்ள அங்கங்களில் பாயும் வலுவான மின்சாரத்தை விட வலுகுறைந்த மின்சாரம் கைகள் வழியாக மார்புப் பகுதியை அடைவது மிகவும் அபாயகரமானது.

அதிக மின்னழுத்தம் கொண்ட இயந்திர மின்சாரம் 16-18 மீட்டர் வரை தூக்கிப் போடும், காப்பாற்றுபவரையும் கொல்லும். ஆகையால் விபத்துக்குள்ளானவரை ஸ்விட்சு நிறுத்திய பின்பே தொட வேண்டும். இம்மின்சாரம் உடலின் வெளிப்புறத்தில் மட்டுமன்றி ஆழமான தீப்புண்களையும் ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாது இது சுவாசம் மற்றும் இதயத் துடிப்பையும் நிறுத்தவல்லது.

மின்வழி அதிர்ச்சியின் விளைவுகள்

  1. இதயம் செயலிழந்து மரணம் ஏற்படலாம்.
  2. சுவாசிக்கும் போது செயல்படும் தசைகள் செயலிழப்பதால் திடீரென மூச்சு நிற்கலாம்.
  3. மூச்சு நின்ற போதும் இதயம் தொடர்ந்து இயங்கினால் அப்போது முகம் நீலமாக தோன்றும்.
  4. மேலோட்டமான அல்லது ஆழ்ந்த தீப்புண் ஏற்படுவது பாயும் மின்சாரத்தின் திறனைப் பொறுத்து மாறுபடும்.

நோய் கட்டுப்படுத்தும் முறை

  1. முதலுதவியாளர் விழிப்புடன் இல்லையெனில் புத்திசாலித் தனமாக, உடனடி செயல்பாடு தேவைப்படுகிறது.
  2. அவருக்கும் தீவிர மின்வழி அதிர்ச்சி ஏற்படலாம் அல்லது விபத்துக்குள்ளானவரோடே இறக்கவும் நேரிடலாம்.
  3. இன்னும் பாதிக்கப்பட்டவர் மின் ஆதாரத்துடன் தொடர்பு (contact) கொண்டிருந்தால், மின்சாரத்தை துண்டிக்க வேண்டும்.
  4. ஸ்விட்ச் தென்படவில்லை எனில் பிளக் (plug) நீக்குதல், மின்கம்பியை துண்டித்தல் மூலம் மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டும்.
  5. மின் துண்டிக்கும் முன்பு உலர்ந்த மரப்பலகையில்) நிற்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
  6. ரப்பர் மிதியடி உபயோகித்தல் நல்லது. கத்தரியையோ, கத்தியையோ உபயோகிக்க கூடாது.

காயமும் இரத்தப் போக்கும் (Wounds & Bleeding)

உடலில் உள்ள தசை நார்கள் ஒரே தொடர்பாக இருக்கும். அவற்றில் பிளவு ஏற்படுவதுதான் காயம். இப்பிளவிலிருந்து இரத்தம் வெளியாகும். இதன் மூலம் வெளிப்புற தூசி மற்றும் கிருமிகளும் உடலின் உள்ளே செல்லும். காயத்தின் பரப்பை விட அதன் ஆழம் மிக முக்கியமானது. கத்தி மற்றும் துப்பாக்கிக் குண்டுகளால் ஏற்படும் சிறிய ஆழமான காயங்கள் மிகவும் ஆபத்தானவை.

காயங்களின் வகைகள் (Types of wounds)

  • தோற்காயம் (Abrasions) : தோலின் மேல் பாகத்தில் மட்டும் சிதைவு ஏற்படும். சாய்வாக விழுவது அல்லது உராய்வு மூலம் ஏற்படலாம்.
  • வெட்டுக்காயம் (Incised wound) : கத்தி, பிளேடு போன்ற கூர்மையான கருவிகளால் வெட்டுக்காயம் ஏற்படுகிறது. இதில் இரத்தக்குழாய்கள் அடியோடு வெட்டப்படுவதால் இரத்தம் அதிகமாக வெளியாகும்.
  • கசிவு அல்லது நொறுக்கு காயம் (contused wound) : அதிக கனமான மழுங்கிய கருவிகளால் தாக்கப்படுவதாலும், நசுக்கப்படுவதாலும் ஏற்படுகின்றது. இதில் திசுக்கள் சிராய்ப்பு அடைகின்றன.
  • கிழிப்பு / பிளப்பு காயம் (Lacerated wound) : இக்காயங்கள் இயந்திரம், சொர சொரப்பான தரையில் விழுவது சங்குத் துகள்கள், விலங்குகளின் நகங்கள் போன்றவற்றால் ஏற்படுகிறது. இரத்தக் குழாய்கள் ஒழுங்கற்ற முறையில் கிழிக்கப்படுவதால் இரத்தக் கசிவு குறைவாக இருக்கும்.
  • குத்து காயம் (Punctured wound) : கூர்மையான ஊசி, கத்தி, ஈட்டி போன்றவற்றால் ஏற்படுகின்றன. இதனால் ஏற்படும் துவாரம் சிறியதாகவும், ஆழம் அதிகமாகவும் இருக்கும்.
  • துப்பாக்கிக் குண்டு காயம் (Gun Shot wound) : மிகச் சிறிய வழியாக உள்ளே செல்லும் குண்டால் நீண்ட உள் காயங்கள் ஏற்படும்.

காயங்களால் ஏற்படும் சிக்கல்கள்

  • இரத்தப் போக்கு (Bleeding)
  • தொற்று நோய் (Infection) இவ்விரண்டும் காயங்களால் ஏற்படும் பெரிய ஆபத்துக்களாகும்.

இரத்தப் போக்கு / கசிவு (Bleeding)

  • இரத்த நாளத்திலிருந்து இரத்தம் வெளியாவது இரத்தப் போக்கு என்று அழைக்கப்படும்.
  • இரத்தப் போக்கு உடனடியாக சிகிச்சையளிக்கப்பட வேண்டிய சிக்கலான நிகழ்வு ஆகும்.

தொற்று நோய் (Infection)

  • தொற்று நோயானது பிளவுப்பட்ட தோலின் மூலம் கிருமிகள் உடலினுள் செல்வதால் ஏற்படுகிறது.
  • காயத்தில் கிருமிகள் பன்மடங்காகி சீழ்பிடிக்கும்.
  • இவை இரத்தத்துடன் கலக்கும் போது இரத்தம் நச்சுத் தன்மையடைகிறது.

நோய் கட்டுப்படுத்தும் முறை

  • இரத்தப் பெருக்கை நிறுத்தவும். கிருமி நீக்கப்பட்ட துணியையோ அல்லது தூய்மையான துணியையோ காயத்தின் மேல் நேரடியாக வைத்து அழுத்தவும். தேவையெனில் பொருத்தமான தமனி அழுத்த புள்ளியில் அழுத்தவும். காயமடைந்த பகுதியை மெதுவாக கையாளவும்.
  • நோயாளியை உட்காரவோ படுக்கவோ வைக்கவும்.
  • காயம் கையில் இருந்தால் எலும்பு முறிவு இல்லாத பட்சத்தில் கையை உயர்த்தி வைக்கலாம்.
  • இதனால் இரத்தக் கசிவு குறையும்.
  • கிருமி நாசினி கொண்டோ அல்லது சுத்தமாக கழுவியோ உமது கைகளை தூய்மை செய்யவும். கண்ணாடி, கல் போன்ற வேறு பொருட்கள் காயத்தில் தெரியும் படி இருந்தால் அவற்றை எடுத்துவிடவும். எடுக்கும் போது காயம் மேலும் திறந்து, இரத்தம் கசியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முன்பே இரத்தம் உறைந்திருந்தால் அதை அப்படியே விட்டுவிடவும்.
  • சுத்தமான ஒரு துணியை காயத்தின் மீது வைத்து இறுக்கமாகக் கட்டவும். மருத்துவருக்கு ஆள் அனுப்பவும். மருத்துவர் அல்லது செவிலியர் கிடைக்கவில்லை எனில் விரைந்து மருத்துவ மனைக்கு கொண்டுச் செல்ல வேண்டும்.

இரத்த ஒழுக்கு (Haemorrhage)

விபத்துகளில் இரத்த ஒழுக்கினாலேயே பெரும்பாலான மரணங்கள் ஏற்படுகிறது. இரத்த குழாய்கள் கிழிக்கப்படுவதால் இது ஏற்படுகிறது. வெளிப்புற மற்றும் உட்புற இரத்த ஒழுக்கு (External & Internal bleeding) இரத்த ஒழுக்கு உடலின் மேற்புறத்திலிருந்து ஏற்பட்டால் வெளிப்புற இரத்த ஒழுக்கு என்று அழைக்கப்படும்.

மார்பு, மண்டையோடு அல்லது வயிறு போன்றவற்றில் ஏற்பட்டால் உட்புற இரத்த ஒழுக்கு எனப்படும். இது உடனடியாக புலப்படாது. மூக்கு, காது வழியே இரத்தம் கசிவது மூலமாகவோ, அல்லது இருமல் மூலமாகவோ அல்லது வாந்தி மூலமாகவோ வெளிப்படும்.

இரத்த ஒழுக்கின் வகைகள் (Types of Bleeding)

அ. இரத்தக் குழாய்களிலிருந்து உண்டாகும் இரத்த ஒழுக்கு (Bleeding from Arteries): இதயம் துடித்துக் கொண்டிருப்பதால் இரத்தம் பீரிட்டு பாயும். பிரகாசமான சிவப்பாய் இருக்கும். இவ்வகை ஒழுக்கு மிக விரைவில் மரணம் விளைவிக்கும்.

ஆ. சிரைகளிலிருந்து உண்டாகும் இரத்த ஒழுக்கு (Bleeding from veins) இரத்தம் தொடர்ந்து பிரவகிக்கும்.

இ. தந்துகியிலிருந்து உண்டாகும் இரத்த ஒழுக்கு (Bleeding from capillaries) உடலின் மேற்பரப்பு எனில் மெதுவாக இரத்தம் ஒழுகி வெளிவரும். இது அபாயமானது அன்று.

இரத்த ஒழுக்கு ஏற்படுவதற்கான அறிகுறிகள்

  1. நோயாளி மயக்கமாக உணரலாம். நினைவிழந்து போகலாம் (Collapse).
  2. தோல் வெளிறி, குளிர்ச்சி அடையும்.
  3. நாடித்துடிப்பு அதிகரிக்கும். ஆனால் பலவீனமாக இருக்கும்.
  4. சுவாசம் மேலோட்டமாக இருக்கும். (Shallow) நோயாளி மூச்சுவிட கஷ்டப்படுவார். ஆழ்ந்த பெருமூச்சு விடுவார்.
  5. அபரிமிதமாக வியர்க்கும்.
  6. நோயாளி தாகமாக உணர்வார்.

நோய்க் கட்டுப்படுத்தும் முறை

அ. குறைந்த / இலேசான இரத்த ஒழுக்கு (Minor bleeding) சிறு இரத்த ஒழுக்கு வேலையிலும், விளையாட்டிலும் ஏற்படும். திசுக்கள் காயமடைவதால் ஏற்படுகிறது. இதில் பயப்பட வேண்டிய அவசியமில்லை. இரத்த ஒழுக்கு தானாகவே நின்று விடும் இல்லையெனில் அழுத்தி பிடித்தல், கட்டுதல், கை, கால்களை நீட்டி வைத்தல் போன்றவற்றால் நின்றுவிடும்.

ஆ. அதிக இரத்த ஒழுக்கு (Major bleeding) இரத்த நாளத்தில் ஏற்படும் அதிக காயமோ அல்லது நோயாளி இரத்த நோயால் (blood disease) அவதியுறுவதும் அதிக இரத்த ஒழுக்கு ஏற்பட காரணமாகிறது

முதலுதவி அளிப்பதன் நோக்கங்கள்

  1. இரத்த ஒழுக்கை விரைவாக நிறுத்துவதற்கு உடனடி மருத்துவ உதவி அளிக்கவும். தேவைப்பட்டால் நோயாளிக்கு மருத்துவமனையில் இரத்தம் ஏற்ற முயலவும்.
  2. வெளிப்புற தீவிர இரத்த ஒழுக்கு ஏற்படுகின்ற போது காயத்தின் பக்கங்களை ஒன்றிணைத்து அழுத்தி அமுக்கவும்.
  3. நோயாளியை வசதியாக படுக்க வைத்து காயமுற்ற பகுதியை உயர்த்த வைக்கவும். எலும்பு முறிவு ஏற்படவில்லை என்று உறுதி செய்தபின்பு இரத்தம் வரும் இடத்தை அழுத்தமாக 10 முதல் 15 நிமிடம் வரை இறுக்கமாக பிடிக்கவும்.
  4. காயத்தை விட பெரிதான பஞ்சை காயத்தின் மேல் வைத்து இறுக்கமாக உள்ளங்கையால் அமுக்கி பிடிக்கவும்.
  5. கொஞ்சம் கொஞ்சமாக இரத்த ஒழுக்கு குறைந்து கடைசியில் நின்றுவிடும்.
  6. இரத்த ஒழுக்கு நிற்கவில்லை எனில் முன்பு வைத்த பஞ்சின் மீது மேலும் பஞ்சை வைக்கவும். இறுதியாக அதிக இறுக்கமாக இல்லாமல் தளர்ச்சியாக போடவும்.
  7. காயம்பட்ட பகுதியை அசையாமல் நீட்டி வைக்கவும்.
  8. அதிர்ச்சிக்கு சிகிச்சை அளிக்கவும்.
  9. கூடிய விரைவில் நோயாளியை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவும்.

உட்புற இரத்த ஒழுக்கு ஏற்பட்டிருக்கும் போது நோயாளியின் நிலைமை மோசமாகாமல் தடுப்பதே முதல் உதவியின் நோக்கமாகும்.

  1. நோயாளியின் தலை கீழே இருக்குமாறு, கால்களை தலையணையின் மேல் உயர்த்தி வைத்து படுக்க வைக்கவும்.
  2. அமைதியாகவும், ஓய்வாகவும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும், அசைய அனுமதிக்கக் கூடாது.
  3. உடல் வெப்பத்தை இழக்காமல் கம்பளி, மெல்லிய துணி அல்லது மேலுறையால் (coat) மூடவும். குடிக்கவோ, உண்ணவோ எதுவும் தர வேண்டாம்.
  4. ஏனெனில் மயக்க மருந்து பின்பு அளிக்கப்படலாம். வெந்நீர் ஒத்தடமோ ஐஸ் ஒத்தடமோ மார்பு, வயிற்றின் மேல் கொடுத்தால் நிலைமை மோசமாகிவிடும்.
  5. மருத்துவமனைக்கு கூடிய விரைவில் கொண்டு செல்ல வேண்டும். வண்டியில் மெதுவாக செல்லவும்.
  6. அழுத்தப் புள்ளியை உபயோகித்து வெளிபுற இரத்த ஒழுக்கை நிறுத்துதல் (pressure point to stop external bleeding) இரத்த ஒழுக்கை மறைமுகமாகத் தடுக்கும் இரண்டாவது முறையே அழுத்தப் புள்ளியை உபயோகித்து நிறுத்துவதாகும்.
  7. இது நேர்முகமாக அழுத்தப்படுவது பலனளிக்காதபோது செய்யப் படுவதாகும். இந்த எண்ணற்ற அழுத்தப் புள்ளிகளை மனதில் கொண்டு முதல் உதவியாளர் அவசர காலத்தில் பயன்படுத்த வேண்டும். காயத்திற்கு முன்பு உள்ள இரத்தக் குழாயை அழுத்திப் பிடிக்கும் போது இரத்தம் காயம்பட்ட இடத்தில் பாயாமல் தடுக்கலாம்.
  8. அழுத்தப் புள்ளி என்பது இரத்தக் குழாயை அதன் கீழ் உள்ள எலும்புடன் சேர்த்து இறுக்கி பிடிக்கும் பகுதி தான். இப்படி பிடிப்பதால் அந்த புள்ளியைத் தாண்டி இரத்தம் ஓடாமல் தடுக்க முடியும். பொதுவாக அவ்விடங்களில் நாடித்துடிப்பை நம்மால் உணர முடியும்.
  9. தலைக்கு உரிய அழுத்தப்புள்ளி (Carotid pressure point) பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு குழாய்கள் பெருந்தமனியிலிருந்து தொடங்கி, கழுத்து வழியே சுவாசக் குழாய்க்கு பக்கவாட்டில் சென்று தலை பகுதிக்கு இரத்தத்தை அனுப்புகிறது.
  10. கட்டைவிரலால் பேச்சுப் பெட்டிக்கும் முக்கிய ஸ்டெர்னே மாஸ்டாய்டு தசைக்கும் இடையில் உள்ள வெற்றிடத்தில் அழுத்தவும். இதனால் இதன் பின்னால் உள்ள முதுகெலும்புத் தூணில் அழுத்தம் ஏற்படுகிறது. குரல்வளை நெறிபட்டிருப்பின் (digital pressure) விரல் அழுத்தம் கொடுப்பதுடன் மேலே குறிப்பிட்டபடி, குரல்வளை நரம்பில், அதாவது காயத்திற்கு மேல் இரத்தம் கசியும் இடத்தை அழுத்திப் பிடிக்கவும். அப்போதும் இரத்த ஒழுக்கு நிற்கவில்லை எனில் காயத்திற்குக் கீழும் விரல் அழுத்தம் கொடுக்க வேண்டும். காயத்தை மூடுவதோடு மட்டுமின்றி அதிர்ச்சிக்கு சிகிச்சை அளிக்கவும் வேண்டும். மருத்துவரிடம் உடனே எடுத்துச் செல்லுதல் வேண்டும்.

சப்கிளேவியன் அழுத்தப்புள்ளி (Subclavian pressure point)

  • அ. பெயருக்கு ஏற்றாற் போல் இந்த குழாய்கள் தோள்பட்டை கிளேவிக்கலின் பின்புறமாக இரண்டு பக்கத்திலும் செல்கிறது.
  • ஆ. இந்த குழாய்கள் பெருந்தமனியின் (aorta) கிளைகளே. கிளேவிக்கலின் உள் முனையிலிருந்து ஆரம்பித்து மார்பு எலும்பின் மேலாகச் சென்று அக்குளில் முடியும்.
  • இ. ஒரு கட்டை விரல் மேல் மற்றொரு கட்டை விரலை வைத்து அமுக்குவதன் மூலம் அழுத்தம் கொடுக்கவும். இவ்வழுத்தம் கழுத்துப்பட்டை எலும்பிற்கு பின் உள்ள வெற்றிடத்திற்கு மேலாக அழுத்தம் தருவதின் மூலம் மார்புக் கூட்டின் முதல் எலும்புக்கு மேல் செல்லும் குழாயை அழுத்துகிறது.
  • ஈ. அழுத்தம் கொடுக்கும் முன்பு கழுத்து, மார்பின் மேல் பகுதியில் உள்ள ஆடையை அகற்ற வேண்டும். தோள்பட்டையை அழுத்தி கழுத்தை காயம்பட்ட பக்கமாக சாய்த்து வைக்கவும். அங்குள்ள தசைகளும் தளர்வுற்று வேலையை சுலபமாக்கும்.

திசுத்தகடு அழுத்தப்புள்ளி (Facial pressure point)

  • அ. கட்டைவிரல் கீழ் தாடையின் அடிப்பகுதியின் மேல் இருக்குமாறு உள்ளங்கையை கழுத்தின் மேல் பகுதியில் குறுக்காக வைக்கவும், கைவிரல்கள் தலை மற்றும் கழுத்தின் பின் பகுதியை பிடித்திருக்க வேண்டும்.
  • ஆ. கீழ்த்தாடையின் கோட்டின் கீழ் முதல் மூன்றாம் மற்றும் மத்திய மூன்றாம் பகுதிகளை சந்திக்கும் இடத்தில் தமனியின் மீது அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

பொட்டு அழுத்தப் புள்ளி (Temporal pressure point)

  • அ. கட்டைவிரல் காதின் மேல் பகுதியோடு இணைந்திருக்குமாறும் உள்ளங்கை கழுத்தின் பின்புறம் பொருந்துமாறும் வைக்க வேண்டும்.
  • ஆ. காதின் மேற்பகுதியிலிருந்து ஒரு அங்குலம் முன்பாக அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். இது பின்புறமான அழுத்தமாகவும் பொட்டெலும்புக்கு எதிராகவும் இருக்க வேண்டும். ஏனெனில் கிளைகளாக பிரியும் இரத்தக் குழாய் இந்த இடத்தில் தான் ஓடுகிறது.

மேற்கை அழுத்தப் புள்ளி (Brachial pressure point)

  • அ. மேற்கை இரத்தக் குழாய்கள் ஈரிதழ் தசையின் உள்வரம்பு வழியே சென்று பிரிகிறது. இதனால் மேல் கைக்கு இரத்த ஓட்டம் கிடைக்கிறது.
  • ஆ. கையின் மூன்றாம் நடு விரலைக் கொண்டு அழுத்தம் கொடுக்கவும்.
  • இ. கை எலும்போடு (humerus) அழுத்தப்படுகிறது.

முன்கை அழுத்தப் புள்ளி (Radial/ulnar pressure point)

  • அ. பெயருக்கு ஏற்றாற்போல் இந்த இரத்தக் குழாய்கள் மணிக்கட்டின் மேற்புறமாக கடந்து சென்று உள்ளங்கைக்குள் ஓடி உள்ளங்கையில் வளைவை ஏற்படுத்துகிறது.
  • ஆ. மணிக்கட்டிற்கு சற்று மேலாக உள்ள ஒவ்வொரு குழாயையும் ஒரே நேரத்தில் கட்டைவிரலால் அமுக்கவும்.

உள்ளங்கை வளைவு அழுத்தப் புள்ளி (Palmararch pressure point)

  • அ. உள்ளங்கை வளைவானது அசைகின்ற (anastomosis) முன்கை இரத்தக் குழாய்களின் முடிவுப் புள்ளிகளில் உள்ளங்கையின் நடுப்பகுதிக்கு அப்பால் உள்ளது.
  • ஆ. ஒற்றை கட்டைவிரலை கிடைமட்டமாக வைத்து அழுத்தம் கொடுக்க வேண்டும். உள்ளங்கையின் மற்ற பகுதியும் விரல்களும் காயம்பட்ட உள்ளங்கையின் மேல் இருக்க வேண்டும்.

தொடை அழுத்தப் புள்ளி (Femoral pressure point)

  • இந்த இரத்த குழாய்கள் தொடையிலிருப்பவை. மகாதமனியின் தொடர்குழாய்களான இவை காலின் கீழ்ப்பகுதிக்கு இரத்தம் அனுப்புகின்றன.
  • இந்த இரத்தக் குழாய்கள் தொடையும் இடுப்பும் சேருமிடத்திற்கு நடுவில் நுழைந்து உட்புறமாக தொடை வரை செல்கிறது. பின்பு முழங்காலின் பின்புறமாக செல்கிறது.
  • அழுத்தம் கொடுப்பதற்கு முன்பு நோயாளியை படுக்க வைத்து, லேசாக முழங்கால்களை மடித்து இரண்டு கைகளாலும் தொடையை பற்றிக் கொள்ளும் போது இரண்டு கட்டை விரல்களும் கவுட்டியின் (groin) நடுவில் இருக்க வேண்டும்.
  • இடது கட்டை விரலின் மேல் வலது கட்டை விரலை வைத்து நேரடியாக அழுத்தும்போது, அது இடுப்பெலும்பின் பின்பக்கமாக இருக்க வேண்டும்.

தீப்புண்களும் வெந்த புண்களும் (Burns and scalds)

  • தீப்புண்கள் நெருப்பு, சுவாலை, சூடான உலோகம், சூரிய ஒளி, அதிக அழுத்தம் உள்ள மின்சார கம்பி அல்லது மின்னல் அல்லது உராய்வு இவை போன்ற உலர் வெப்பத்தால் ஏற்படுகின்ற காயங்களாகும். வெந்த புண் என்பவை கொதிக்கின்ற தண்ணீர், நீராவி, எண்ணெய், கொதிக்கின்ற தார் போன்ற ஈர வெப்பத்தால் ஏற்படுகிறது.
  • இரசாயன புண்கள் அடர்ந்த அமிலங்களாலும் அடர்காரங்களாலும் ஏற்படும். (கந்தக அமிலம், நைட்ரிக் அமிலம், சோடியம் ஹைடிராக்ஸைடு காஸ்டிக் சோடா பொட்டாசியம் ஹைடிராக்ஸைடு காஸ்டிக் பொட்டாஷ்).
  • நியூக்ளியர் புண் என்பது நியூக்ளியர் வெடிப்பினால் உடனடியாக வெளிவரும் தீவிர வெப்பத்தால் ஏற்படுகிறது. இவ்வகை வெடிப்பு பல மைல்களுக்கு அப்பால் உள்ள மனிதனின் தோலின் மேற்பரப்பில் புண்களை ஏற்படுத்தும்.
  • கதிரியக்க சிகிச்சை போது அளவுக்கதிகமாக கதிர்கள் (x-ray) பாய்வதால் கதிரியக்க புண்கள் ஏற்படுகின்றன.
  • இவ்வகை நோயாளி உடனே மருத்துவமனைக்கு அனுப்பப்பட வேண்டும்.

தீப்புண்களின் தரம் (Degrees of burns)

தீப்புண்களின் தரம் என்பது எந்த அளவுக்கு திசுக்களில் சேதம் ஏற்பட்டிருக்கிறது என்பதை குறிப்பதாகும். அவற்றை மூன்று தரங்களாகப் பிரிக்கலாம்.

  • முதல் தரம் (First degree) : தோல் மட்டும் சிவந்திருக்கும்.
  • இரண்டாம் தரம் : தோலில் கொப்பளங்கள் ஆழமாக உள்ள திசுக்களை அழிக்கவோ, கரியாக்கவோ கூடியது.
  • மூன்றாம் தரம் : தீப்புண்களின் அபாயம் அப்புண்ணின் பரப்பை (area) விட அதனுடைய தரத்தை பொறுத்தே அமைகிறது.

அதிகமான இடத்தில் ஏற்படும் மேல் தீப்புண்கள் (superficial burns) கை, கால்களின், ஒரு பகுதியை கரியாக்கியதை விட மிகவும் ஆபத்தானது. அதே மனிதரில் உடலின் வெவ்வேறு பாகங்களில் ஏற்படும் புண்கள் வெவ்வேறு தரமான புண்களாக இருக்கும். வெந்த புண்களில் கூட முதல் இரண்டு தரங்கள் காணப்படுகின்றன. ஒருவர் தோல் மீதோ, அணிந்திருக்கும் ஆடை மீதோ, இரசாயனம் விழுந்தால் மூன்று தர தீப்புண்களில் ஏதாவது ஒரு வகை உண்டாகும். அடர்த்தி அதிகமான இரசாயனம் விழுங்கப்பட்டால், இரசாயனம் படும் இடங்களான உதடுகள், நாக்கு, உணவுக்குழல் போன்ற இடங்களில் உள்ள திசுக்கள் சேதமடையும். வாயைச் சுற்றிய பகுதிகளில் உள்ள தோலும் சேதமடையலாம்.

குறிப்பு : தீப்புண்களின் தீவிரம் அது பரவும் இடத்தையும், ஆழத்தையும் பொறுத்து இருக்கும்.

தீப்பிடித்தவருக்கு உதவுதல்

  • முதலுதவியாளர், ஆடையில் தீப்பிடித்த மனிதரை எப்படி கையாள்வது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். கிடைக்கின்ற பொருள்களை / வழிகளை வைத்து தீயை அணைக்கவும். மிக அதிக அளவில் தீப்புண்கள் வீட்டில் தான் ஏற்படுகின்றன. வீட்டில் தண்ணீர் தயாராக, எளிதில் கிடைப்பதால் தண்ணீரால் தீயை அணைக்கலாம்.
  • தண்ணீர் தீப்பிடித்த இடத்தைக் குளிரச் செய்வதால் சேதம் குறைகிறது. தீப்பிடித்தவரை ஓட அனுமதிக்கக் கூடாது.
  • இதனால் தீ விசிறி விடப்பட்டு வேகமாக பரவும். ஆடையில் தீப்பிடித்த மனிதரை அணுகும் போது கையில் ஒரு துண்டு துணியோ, கம்பளியோ கடினமான துணி (coat) அல்லது மேசை விரிப்போ அவரை மூடியிருக்குமாறு செய்யவும். அவரை கெட்டியான துணி அல்லது கோட் இவற்றால் இறுக்கமாக சுற்றி தரையில் தள்ளிவிடவும். ஆடைமேல் மெதுவாக தட்டி நெருப்பை அணைக்கவும். நோயாளியை உருட்ட வேண்டாம். உடலின் முன்புறம் உள்ள துணிகள் தீப்பற்றி இருந்தால் பொருத்தமான தீயணைப்பான் கொண்டு வரும்வரை அவரை பின்புறமாகவும், உடலின் பின்னால் எனில் முன்புறமாக படுக்க வைக்க வேண்டும்.

தீப்புண்களால் ஏற்படும் விளைவுகள்

  1. தீவிர வலி (intense pain)
  2. சேதமடைந்த பகுதி நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்டிருக்கும்.
  3. அதிர்ச்சி (Shock)
  4. குணமடைந்த பின் வடுக்களால் விகாரமடையலாம் அல்லது நடமாட தடை ஏற்படலாம்.

தீவிர தீப்புண் மற்றும் வெந்த புண்களைக் கட்டுப்படுத்துதல் (Management of serious burns and scalds)

  • தீவிர தீப்புண்களுக்கு உடனடி கவனம் தேவைப்படுகிறது.
  • நோயாளியை அமைதியாகவும் பயமின்றியும் (reassure) வைத்திருக்கவும்.
  • தூய்மையான துணியால் சுற்றவும் / மூடவும். எரிந்த துணியையோ ஒட்டிக் கொண்டிருக்கும் பொருள்களையோ எடுக்க வேண்டாம்.
  • எரிந்த பாகத்தை கிருமி நீக்கப்பட்ட அல்லது சுத்தமான துணி அல்லது பஞ்சால் மூடவும். அதிகமான அளவில் உடலில் தீக்காயம் இருந்தால் சுத்தமான போர்வையால் மூடுவது போதுமானது.
  • உடலில் சூடு இருக்கும்படி வைக்கவும், மிக அதிகமான சூடு இருக்கக் கூடாது.
  • கைகள் சம்பந்தப்பட்டிருந்தால் அவற்றை நோயாளியின் மார்புக்கு மேல் வைக்கவும்.
  • எரிந்த பாதத்தை அல்லது காலை நீட்டி வைக்கவும்.
  • நோயாளியின் முகம் எரிந்திருந்தால், உட்கார வைத்து மூச்சுத் தடை ஏற்படுகிறதா என்று தொடர்ந்து கவனித்துக் கொள்ள வேண்டும்.
  • சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட்டால் திறந்த வெளியில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
  • வெளிப்புற தீப்புண்ணை குளிர்ந்த நீரில் நனைக்கவோ அல்லது பனிக்கட்டி வைக்கவோ கூடாது. ஏனெனில் குளிர்ச்சி அதிர்ச்சியை அதிகப்படுத்தலாம்.
  • இருப்பினும் குளிர்ந்த பையை முகம், கை அல்லது கால்களுக்கு அளிக்கப்படலாம்.
  • கொண்டு செல்ல முடிந்தால் அருகிலுள்ள மருத்துவமனைக்கு நோயாளியை கொண்டு செல்லவும்.
  • மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முடியவில்லை எனில் மருத்துவர் வரும் வரை காத்திருக்கவும்.
  • கொப்புளங்களை திறக்க வேண்டாம்.
  • சுத்தமான துணியால் சுற்றி வைக்கவும்
  • அதிர்ச்சிக்கான சிகிச்சை அளிக்கவும்.
  • உறுத்தும்படி மோதிரம், வளையல், இடுப்புப் பட்டை மற்றும் காலணி போன்றவற்றை உடனடியாக அகற்றவும். இதை முதலிலேயே செய்யவில்லை எனில் கை வீங்கிய பின் அகற்றுவது கடினம்.
  • மருத்துவ உதவி அல்லது பயிற்சி அளிக்கப்பட்ட அவசரகால உதவியாளரால் ஒரு மணி நேரத்திற்குள் வர இயலாவிட்டாலும், விபத்துக்குள்ளானவர் வாந்தி எடுக்காமல் சுயநினைவு இழக்காமல் இருந்தாலும் அவருக்கு உப்பும் சோடா (weak solution) -வும் கலந்த ஒரு குவளை நீரைக் கொடுத்து அழைத்துச் செல்லவும். பாதிக்கப்பட்டவரை மெதுவாக பருக விடவும். வாந்தி ஏற்பட்டால் திரவம் கொடுப்பதை நிறுத்தி எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாக இரசாயனப் பொருளை தாராளமாக நீரைத் தூவியோ குழாயின் மூலமாகவோ கழுவவும்.
  • எரிச்சலை இப்படி தண்ணீர் கொண்டு கழுவுவதன் மூலம் குறைக்கலாம்.
  • சேதமடைந்த ஆடையை (contaminated clothing) வெட்டி எடுக்கவும்.
  • வெறும் விரல்களால் எரிந்த இடத்தை தொட வேண்டாம்.
  • தீப்புண்களுக்காக தரும் சிகிச்சையை தரவும்.

பள்ளிகளில் அவசர உதவி (Emergency Aid in Schools)

குழந்தைகள் மிகவும் அதிகமாக காயப்படத்தக்கவர்கள் (vulnerable to injuries). விபத்துக்குள்ளாகக் கூடியவர்கள். வழக்கமாக சிறிய ஊமைக்காயம் (bruises), சிராய்ப்பு (grazes) காயம், சில சமயம் மோசமான விபத்துகளும், அதனால் எலும்பு முறிவு, இரத்த ஒழுக்கு, மூச்சு அடைதல், மயக்கமுறுதல், அமிலத்தினால் தீப்புண்கள் அல்லது நீரில் மூழ்குதல், மின்சாரம் பாய்ந்து அதிர்ச்சி போன்றவையும் ஏற்படும்.

ஆசிரியர்களில் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுக் கூட துன்பப்படலாம், அல்லது சுவாசப் பிறழ்வு ஏற்படலாம். (respiratory disorder) இச்சமயத்தில் முதலுதவியாளர் பதட்டப்படாமல் சமயோகிதமாக சில வழிமுறைகளை பின்பற்றினால் உயிருக்கும், மரணத்திற்கும் இடைப்பட்ட அந்த போராட்டத்தை தவிர்க்கலாம்.

அவசர காலத்தில் பின்பற்ற வேண்டியவை

  1. மதிப்பீடு செய்தல் (Assess)
  2. பாதுகாத்தல் (make safe)
  3. முதலுதவி அளித்தல் (Give first aid)
  4. தெரியப்படுத்தி உதவி பெறுதல் (Inform - get help)

மேலாண்மை

  1. முறையான கருவிகளடங்கிய முதலுதவி அறை / இடம், பயிற்சி பெற்ற முதலுதவியாளர், குறைந்த பட்சம் ஒரு வகுப்பிற்கு ஒரு குழந்தையாவது முதலுதவி பயிற்சி பெற்றிருத்தல் முதலியவை ஒழுங்கான முறையில் பராமரிக்கப்படுகின்றன என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
  2. பயிற்சி பெற்ற முதலுதவியாளர் பள்ளிக்கும், மற்ற குழந்தைகளுக்கும் மிகப் பெரிய பொக்கிஷம்/சொத்து. முறையான பயிற்சிக்கு மாற்று வேறு எதுவும் இல்லை என அழுத்திச் சொல்லலாம். ஆகையால் மாணவிகள் முதலுதவி பயிற்சி எடுத்துக் கொள்ளுதல் அவசியம்.
  3. முதல் உதவி பெட்டியிலுள்ள - சிறிய பொருட்கள் (First Aid Box - small contents) : கிருமிநீக்கப்பட்ட சல்லாத்துணி (sterilized dressing), பாராசிட்டமால் / டிஸ்பிரின் மாத்திரைகள் 10 x 1, பட்டை Mouth to mouth resuscitator (plastic), ஒருவர் வாயிலிருந்து மற்றொருவர் வாய்க்கு ஊதும் கருவி.

உடல் நலம்

மிக விரிவான முறையில் முதல் உதவியை படித்த நாம் இப்போது உடல் நலம், உணவுப் பற்றிய குறிப்புகள் மற்றும் நுகர்வோரின் விழிப்புணர்வு பற்றி பார்க்கலாம்.

நம் உடலின் செயல்பாட்டை புரிந்து கொண்டாலே பெரும்பாலான நோய்களை புத்திசாலித்தனமாக தவிர்க்கலாம். இதற்கு ஒரு சில சாதாரணமான சட்டதிட்டங்கள், முறைகளை (rules) கடைபிடித்தாலே போதும். இதன் மூலம் நம் உடலை நோய் மற்றும் தொற்றுநோய் அணுகாவண்ணம், எதிர்த்து தாங்கும் நிலையை அடைகிறோம். உணவு, உடற்பயிற்சி, உடல் சீர்கேடு, மன அழுத்தக் காரணிகள் மற்றும் நோய் பாதுகாப்பு முறைகள் என்ற ஐந்தும், நோயை எதிர்த்துத் தாங்குபவைகள் ஆகும்.

உணவு (Diet) :

மாமிசக் கொழுப்பையும் சர்க்கரையையும் தவிர்க்கவும். காய்கறிகள், தானியம் மற்றும் பருப்பு வகைகள், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் போன்றவை அடங்கிய சமச்சீரான உணவை சாப்பிட வேண்டும். எரிக்கப்படாத உணவுப் பொருட்கள் கொழுப்பாக உடலில் சேமிக்கப்படுகின்றன. ஒரு சில உணவுகளின் பற்றாக்குறை, குறைபாட்டு அறிகுறிகளை ஏற்படுத்தும். ஆரோக்கியமான உடல் நலத்திற்கு நாம் நம் உடலின் கலோரித் தேவைகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்றாற் போல சத்துணவுத் தேவைகளை திட்டமிட வேண்டும். ஒவ்வொருவருக்கும் நல்ல உணவு பழக்கம் இன்றியமையாதது.

மனஅழுத்தம் (stress)

நெரிசல் மிகுந்த, தேவை அதிகரித்துள்ள நம் வாழ்க்கை முறை மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் மனரீதியான, உடல் ரீதியான பிரச்சினைகள் விளைகின்றன.

அதிக இரத்த அழுத்தம் (Hypertension), குடற்புண் (peptic ulcer) போன்றவை மன அழுத்தத்துடன் தொடர்புடையவை. உளவியல் ரீதியாக உளச்சோர்வு (depression), கவலை (anxiety) ஏற்படுவதோடு உளக்கோளாறில் முடிகிறது. ஆகையால் மன அழுத்தம் ஏற்படுத்தும் காரணிகளை தவிர்த்து மன அழுத்தத்தை குறைக்க முயற்சி செய்தல் நலமாகும்.

நோய்த் தடுப்பு முறைகள் (Safeguards against diseases)

உடற்பயிற்சி (Exercise)

உடல் நன்றாக வேலை செய்ய முறையான உடற்பயிற்சி தேவை. உடற்பயிற்சி குறையும் போது மார்புத் தசைகளின் திறன் குறைகிறது. இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வர ஏதுவாகிறது. உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜனின் அளவு குறைகிறது. ஆகையால் முறையான உடற்பயிற்சி இவ்விரண்டையும் சீர்திருத்தும்.

உடற்பயிற்சி என்பது முறையாக சாலையில் நடத்தல், உடற்பயிற்சி செய்தல் (gym), குதித்தல் (Skip) அல்லது முறையாக ஒரு விளையாட்டை (game) விளையாடுதல். நாம் எந்த முறை உடற்பயிற்சியை எடுத்துக் கொண்டாலும் முறையாக செய்தல் நோய் வருவதை தடுக்கும் ஒரு பாதுகாப்பாக அமையும்.

உடல் சீர்கேடு (Abuses of Body)

  • முறையான, சமச்சீரான உணவு எடுத்துக் கொண்டு சரியான உடல் எடையை முறையான உடற்பயிற்சி மூலம் பாதுகாத்த போதிலும், உடல் புறக்கணிக்கப்படும் போது ஒரு பயனும் இல்லை. மிக அதிக அளவில் காணப்படும் சீர்கேடு புகையிலை மற்றும் மது (ஆல்கஹால்) பழக்கமாகும். சிகரெட் புகைப்பதால் நுரையீரல் புற்றுநோய், (lungs cancer) மூச்சுக்குழாய் அழற்சி, (bronchitis) மற்றும் இதய நோய்கள் ஏற்படும். மிதமான மதுப்பழக்கம் கேடில்லை. ஆனால் அதிகமாகவும், அடிக்கடியும் எடுத்துக் கொள்ளப்பட்டால் மரணத்தில் முடியும்.
  • ஹெராயின் (heroin), ஓபியம் (opium) மற்றும் கொகேய்ன் (cocaine) போன்றவை மகிழ்ச்சிக்காக சிலரால் எடுத்துக் கொள்ளப்படும் போதைப் பொருட்கள். ஆனால் அதற்கு அடிமையாகும் போது உடல் நலத்திற்கு கேடு விளைகிறது.
  • தனிப்பட்ட நபர் மற்றும் குடும்பங்களில் இதை போன்ற போதை பழக்கத்திற்கு அடிமையான வாழ்க்கைமுறை அமையா வண்ணம் பாதுகாத்துக்கொள்வது அவசியம்.
  • எவ்வளவுதான் கவனமாக நம்மை பார்த்துக் கொண்டாலும் நோய் நம்மை எப்போது வேண்டுமாயினும் தாக்கலாம். நோயை தடுக்க நம்முடைய சாதாரண அறிவைப் பயன்படுத்தினாலே, முடிந்தவரை நோய் தடுப்பு முறைகளால் நோய் நம்மை அடையாது நோயைக் குறைக்க முடியும்.

தடுப்பு ஊசிக்குத்தல் (vaccination) அல்லது நோய்த் தடுப்பாற்றல் (immunization) போன்றவை குறிப்பிட்ட நோய் தடுப்புக்கு உறுதி அளிப்பவை.

  • இத்தோடு மட்டுமன்றி சில குறிப்பிட்ட நோய்களான தொழில் சார்ந்த நோய்களும், அதாவது செய்யும் தொழிலோடு தொடர்புடைய நோய்கள் (Occupational Disorders) சில நோய்கள் உணவு, கழிவு, ஈக்கள், பூச்சிகள், கொறிக்கும் பிராணிகள் (rodent) இவற்றினாலும் வரக்கூடியது. செல்லுமிடங்களில் தூய்மையை (hygienic) கடைபிடித்தால் நாம் இவற்றை தடுக்கலாம்.
  • உணவு, உடற்பயிற்சி, உடல் நல சீர்கேடு, மன அழுத்தம், நோய் தடுப்பு முறைகள் போன்ற எளிய வழிகளைப் பின்பற்றினாலே சிறந்த ஆரோக்கியமான வாழ்க்கை நடத்தலாம்.

எளிய உடல்நலப் பிரச்சனைகள் (Simple Health problems)

புண்கள் (வயிற்றுப்புண்) (Ulcers)

  • உணவு எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும் முறையற்ற உணவுப் பழக்கத்தினாலும், அதிகமான புகை பிடித்தல் மற்றும் குடிப்பழக்கத்தினாலும், தூக்கமின்மை, மன அழுத்தம் இவற்றால் அதிகமான அமிலம் வயிற்றில் உற்பத்தியாகிறது.
  • இதன் விளைவாக புண் ஏற்படுகிறது. முக்கிய அறிகுறிகளாவன விலா எலும்புகளுக்கு சற்று கீழே காலையில் தோன்றும் வலி மாலைக்குள் அதிகமடைந்துவிடும். உமிழ்நீர் அதிகம் சுரக்கும்.
  • இவற்றை எதிர் அமிலம் கொடுத்து சரிபடுத்தலாம்.
  • அமிலம் சுரப்பதை தடுக்கும் (antacid) மாத்திரைகள், மருந்துகள் (drugs) கொடுக்கலாம். ஓய்வு முக்கியம்.
  • குறைந்த நார்ச்சத்து மற்றும் மசாலா குறைவான உணவை முறையாக உட்கொள்ள வேண்டியது மிக முக்கியமானது.

பால்வினை நோய் (Veneral diseases)

  • பால்வினை என்பது சமூகத்தில் எப்பொழுதும் உள்ள ஒரு நோய் (endemic) தொற்று. நோயுள்ளவருடன் பாலுறவு கொள்ளும் போது இந்த நோய் பீடிக்கிறது. இதில் வெட்டைநோய் (gonorrhoea) மற்றும் குறிப்பிட இயலாத (non-specific) சிறுநீர்க் குழாய் அழற்சியும் மிகவும் அதிகமாக காணப்படுகிறது இவை எளிதில் சிகிச்சை அளிக்கக் கூடிய நோய்கள். கிரந்தி (syphilis) என்ற மிகவும் கொடூர நோய் மேல் குறிப்பிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படாத போது தோன்றும்.
  • ஒன்பது முதல் தொண்ணூறு நாட்களுக்கு பின் தான் முதல் அறிகுறிகள் சிபிலிட்டிக் வெளிப்பாட்டில் தோன்றும். அவ்வெளிப்பாடு கவட்டியிலுள்ள (groin) நிணநீர் சுரப்பிகள் கெட்டியாக, பெரிதாக, வலியற்ற புண் போன்ற கட்டியாக தோன்றும்.
  • இதனால் தோலில் தடிப்பு, கட்டிகள், காய்ச்சல் போன்றவை தோன்றும். இறுதியாக உடலின் ஏதாவது ஒரு உறுப்போ இயக்கமோ சேதமடையும் இந்நிலையில் உள்ளவரை மருத்துவ ரீதியாக சிகிச்சை அளிப்பதோடு குணமாகும் வரை அவர் பாலுறவில் ஈடுபடக்கூடாது.

காது கோளாறுகள் (Ear disorders)

காதில் உண்டாகும் அதிகமான மெழுகு அல்லது செவிப்பறையில் (ear drum) ஏற்படும் துளை (perforation) ஆகிய இரண்டும் காதை பாதிக்கின்ற பொதுவான மருத்துவ பிரச்சனைகள். செவிப்பறையில் மெழுகு அதிகமாக ஒட்டியிருக்கும்பொழுது அல்லது காது வழி அடைபடும் போது (கண்டக்டிவ்) (Conductive deafness) செவிடு ஏற்படுகிறது. ஒன்று அல்லது இரண்டு காதுகளும் பாதிக்கப்படலாம்.

தொற்றுநோய் (Infection) எனில் எரிச்சலிருப்பது மட்டுமல்லாது தண்ணீரும் வெளிப்படும் (discharge).

கடினமான மெழுகுக் கட்டிகள் சிறப்பு கருவிகளாலோ அல்லது பீய்ச்சுக் குழாய் மூலம் வெதுவெதுப்பான நீரை பாய்ச்சுவதன் மூலமாகவோ அகற்றப்படலாம். தொற்றுநோய் எனில் நுண்ணுயிர்க் கொல்லியுடன், (antibiotics) சொட்டு மருந்தும் (drops) பரிந்துரைக்கப்படும்.

கண் கோளாறுகள் (Eye disorders)

பெரும்பான்மையான ஒளிக்கதிர் குவிவுகள் விழிப்படலத்தால் தான் நடைபெறுகிறது. ஆனால் அது நிலையானது. மற்றும் தன்மையுள்ள விழி ஆடி (lens) யினால் துல்லியமாக ஒளிக்குவிப்பு செய்கிறது.

மையோபியா (Myopia) அல்லது கிட்ட பார்வை விழி ஆடி மிகவும் தடித்து விடுவதால் தூரத்திலுள்ள பொருட்களின் ஒளிக்கதிர் குவிவானது விழித்திரைக்கு முன்பாகவே குவிக்கப்படுகிறது. தூரப்பார்வை அல்லது ஹைப்பர் மெட்ரோப்பியா (hypermetropia) வில் பொருட்கள் விழித்திரைக்கு பின்பாக குவிக்கப்படுகின்றன.

கேட்ராக்ட் (Cataract) எனப்படும் கண்புரை

இது ஒரு கண் கோளாறாகும். இக்கோளாறு ஏற்பட்டவர்களின் விழி ஆடி வேகமாக ஒளி ஊடுருவ இயலாத, ஒளிப்பாதையை மறைத்துக் கொண்டிருப்பதால் பார்க்க கடினமாக இருக்கும். அறுவை சிகிச்சை மூலம் விழி ஆடி மாற்றப்படுகிறது.

விழிவெண்படல அழற்சி (conjunctivitis) : விழிவெண்படலம் வீங்குவது விழிவெண்படல அழற்சியாகும். குழந்தைகளிலும் அதிகம் காணப்படுகிறது. அவர்கள் கண்களை தேய்ப்பதால் காயம் வரை கொண்டு போகிறது. சாதாரணமாக கண்கழுவுவதாலும், கண்ணில் சொட்டு மருந்து போடுவதாலும் சரி செய்யலாம்.

விழி அழுத்தமிகைப்பு (Glaucoma) என்பது விழிக்கோளத்தின் முன் பகுதியில் திரவம் சேர்ந்து கொள்வது ஆகும். அழுத்தம் அதிகரிக்கும் போது குருடாக வாய்ப்புண்டு. சிறப்பு மருத்துவர்களால் சுலபமாக குணப்படுத்தப்படுகிறது.

பசியற்ற உளநோய் (Anorexia Nervosa)

  • பசியற்ற உளநோய் என்பது ஒரு நரம்புக் கோளாறாகும். இதில் வழக்கமாக பாதிக்கப்படுபவர் பெண்கள். (1/20க்கு என்கிற வீதத்தில் ஆண்கள் பாதிக்கப்படுகின்றனர்) வேண்டுமென்றே எடையைக் குறைத்து மெலிகிறார்கள். (Emaciation) தொடக்கத்தில் பசியற்ற உளநோய் நாகரிகத்திற்காக உடலை மெலிய வைப்பதில் ஆரம்பிக்கிறது. இரண்டாவது நிலை உளநோய் மிக அதிகமாக உடல் எடை குறைகிறது. பின் வாந்தி ஏற்படுகிறது.
  • இதிலிருந்து விடுபட நன்றாக சாப்பிட்டு இழந்த உடல் எடையை மீண்டும் பெற வேண்டும். இந்நோயைப் பொறுத்தவரை உளநோய் சிகிச்சை (Psychotherapy) மிகவும் வெற்றிகரமாக செயல்படுகிறது.

உளச்சோர்வு (Depression)

  • உளச்சோர்வு உள்ளம் சம்பந்தப்பட்ட நோய். இதனால் உற்சாகம் குறைந்து உள் எழுச்சி நிலையும் குறைந்துவிடும். மிக மேலோங்கிய எண்ணமாக, வாழ்வே பயனற்றது என்ற உணர்வு ஏற்படும். இது எந்த வயதிலும் ஏற்படலாம்.
  • ஆண்களை விட பெண்கள் மூன்று மடங்கு அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
  • நரம்பு மண்டலச் செயல்பாட்டிற்குத் தேவையான இரசாயனப் பொருள்கள் உடலில் குறையும் போது உளச் சோர்வு ஏற்படுகிறது.
  • மறுசெயல் உளச் சோர்வு (Reactive depression) ஏற்படும் போது மகிழ்வற்ற தன்மையும் வேலை செய்ய முடியாமலும் போகவும் சக்தி முழுவதும் இழந்தது போலவும் உணருவார்கள். அகவழி உளச்சோர்வு (Endogenous depression) ஏற்படும் போது உடல் மற்றும் உள்ள ரீதியாக மந்த நிலை ஏற்படும். எந்த தீர்மானமும் எடுக்க முடியாமல், எதையும் திறமையாக செய்ய முடியாமல் போகும்.
  • உளச்சோர்வு என்பது ஒரு அறைக்குள் சாவியில்லாத பூட்டு போட்டது போன்ற ஒரு நிலை. மருத்துவ உதவியால் மாற்று உளச்சோர்வு மருந்துகள் கொடுத்து குணப்படுத்தலாம்.

முகப்பரு (Acne)

கொழுப்புச் சுரப்பி அல்லது சுரப்பி நாளங்கள், சீபம் (Sebum) என்ற பொருளை சுரந்து தோலையும், முடியையும் வழவழப்பாக வைத்துக் கொள்கிறது. அதில் கோளாறு ஏற்படுவதால் முகப்பரு தோன்றுகிறது.

அதிகமான கொழுப்பு சுரப்பதன் விளைவாக அதை வெளிக்கொண்டு வரும் நாளங்களில் அடைப்பு ஏற்படுகிறது. இந்த கொழுப்பு சீபம் (மயிரடி சுரப்பி) மேலும் மேலும் சேர்ந்து கரும்புள்ளிகள் (Black heads) தோன்ற காரணமாகின்றது.

ஏறக்குறைய எல்லா குமரப்பருவத்தினரும் இதனால் அவதியுறுகிறார்கள். ஒரு நாளைக்கு நான்கு முறை டெட்ரா சைக்கிளின் (Tetra cycline) எடுத்துக்கொள்வதன் மூலம் முகப்பரு நீள் நுண்ணுயிரி (acne bacillus) யைக் கட்டுப்படுத்தலாம். தூய்மை மிக முக்கியமானது.

இரத்த சோகை (Anaemia)

இரத்த சோகை என்பது இரத்தம் சம்பந்தப்பட்ட கோளாறாகும். இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் (haemoglobin) அடர்த்தி அசாதாரணமாகக் குறையும் போது இரத்த சோகை ஏற்படுகிறது. எந்த வயதிலும் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அதன் சாத்திய கூறுகள் எண்ணற்றவை உணவில் இரும்புச் சத்து, ஃபோலேட், (folate) விட்டமின் B, புரதம் மற்றும் இரத்த இழப்பு போன்ற காரணிகள் இரத்த சோகை ஏற்படுத்தும்.

இரத்த சோகை உள்ளவர்களுக்கு வெளிர்தல், மனச்சோர்வடைதல், எரிச்சலுறுதல், தலைவலி, தலை சுற்றல், மயக்கம் போன்றவை ஏற்படலாம். சிகிச்சை அதன் தன்மையையும் காரணத்தையும் பொறுத்து அமையும். உணவு திருத்தம், மாத்திரைகள் மற்றும் சத்துக் குறைபாட்டு ஊசிகள் போன்றவை தேவை.

சில உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் (Medicinal value of certain food items)

ஆப்பிள் (apple) - அதி நுண் உயிர் எதிர்ப்பி (antibacterial, antiviral) அழற்சி எதிர்ப்பு (estrogenic activity) மற்றும் கொழுப்பை குறைக்கிறது. புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது. அஸ்பராகஸ் (Asparagus) - ஒரு சிறந்த உயர்வளியேற்றும். குளுட்டாத்தியோன் (glutathione) இது புற்று நோய் அபாயத்தை குறைக்கிறது. புரோகோலி (Broccoli) - ஒரு தனித்தன்மை வாய்ந்த பன்முக நோய் எதிர்ப்பாளி. லவங்கப்பட்டை (cinnamon) - இன்சுலின் சுரப்பியின் வேலையை தூண்டிவிடும் ஒரு சிறந்த ஊக்கி. கிராம்புலவங்கம் (clove) - அழற்சி எதிர்ப்பி, திரள்வு எதிர்ப்பி, வெள்ளரிக்காய் (Cucumber) அபரிமிதமாக குளிர்ச்சி தரும் உணவு. பேரீச்சை (Date) இயற்கையான ஆஸ்பிரின், மலமிளக்கி மற்றும் இரும்புச்சத்தின் உறைவிடம். வெந்தயம் (Fenugreek seeds) - சர்க்கரை எதிர்ப்பி (anti diabetic) வயிற்றுபோக்கு எதிர்ப்பி (anti diarrhoeal) அழற்சி எதிர்ப்பி (anti ulcer) புற்று நோய் எதிர்ப்பி (anti cancer) இரத்த அழுத்தத்தை குறைக்கும். குடல் வாயுவை தடுக்கும். மீன் எண்ணெய் (Fish oil) - மீனில் உள்ள ஓமேகா எண்ணெய் எல்லா நோய்களையும் குணப்படுத்தும். இது எல்லாவற்றிற்கும் எதிர் உயிர் ஆகும்.

பூண்டு (Garlic) - பன்முக எதிர் உயிரி, பூண்டை பச்சையாகவும் சமைத்தும் சாப்பிடுவதால் முழு பாதுகாப்பு கிடைக்கும். இஞ்சி (Ginger) - தலைவலி, காலரா, வயிற்றுப் போக்கு (diarrhea) மூட்டுவலி, நரம்பு சம்பந்தப்பட்ட நோய் போன்ற எல்லாவற்றிற்கும் பயன்படும் பழமையான எதிர் உயிரி. தேன் (Honey) - சிறந்த உயிர்க்கொல்லி குணங்கள் அடங்கியது. தூக்கத்தை தூண்டும். எலுமிச்சை சாறு (lemon juice) - இயற்கையான சீழ் எதிர்ப்பி காளான் (mushroom) வாழ்நாள் நீடிக்கும் (longevity tonic). வலுவான மருந்து இதயத்திற்கு மருந்து, புற்று நோய் நிவாரணி ஆண்டிலிப்பிட் (anti lipid) கட்டி எதிர்ப்பி (anti tumor) நுண்ணுயிரி எதிர்ப்பி (antiviral) அதிக புரதம் கொண்ட பொருள். கடுகு (mustard) - கடுகு ஒரு தேக்கம் வீக்கம் நீக்கி, (decongestant) சளி நீக்கி (expectorant) நுண்ணுயிரி எதிர்ப்பி (anti bacterial) வளர்சிதை மாற்ற வினையை துரிதப்படுத்தும் அதிகரிக்கும்). வெங்காயம் (onion) - மிகச் சிறந்த வெளியேற்றி எதிர்ப்பி (antioxidant) மஞ்சள் பூசணி (Pumpkin) - இதில் மிக அதிக அளவு பீட்டா கரோட்டின் (beta carotene) அடங்கியுள்ளது. தேநீர் (Tea) திரள்வு எதிர்ப்பியாகவும் தமனி பாதுகாவலராகவும் உள்ளது. மஞ்சள் (Turmeric) - உலகிலேயே மிக அற்புதமான மருந்து.

மாதவிடாய் சுழற்சி (Menstrual cycle)

  • பூப்படையும் வயது என்பது உடலில் உள்ள இனப்பெருக்க உறுப்புகள் வேலை செய்ய ஆரம்பிப்பதைக் குறிக்கிறது. அண்டப்பைகளில் (Ovaries) இந்நேரத்தில் ஹார்மோன் (hormone) சுரக்க தூண்டுகிறது. இத்தூண்டல் பிட்யூட்டரி சுரப்பியின் அடிப்பாகத்திலிருந்து எழுகிறது. இதில் இரண்டு வகையான ஹார்மோன் உள்ளன. அவை இரண்டும் ஒரே பெயரால் கோனாடோ ட்ராபின்ஸ் (gonado trophins) என்று அழைக்கப்படுகின்றன.
  • பூப்படையும் காலம் ஏற்படும் உடலில் வெளிப்புற மாற்றங்கள் நிகழும். மாதவிடாய் நிற்பது (Menopause) இனப்பெருக்க உறுப்புகள் செயல்பாடு நிற்கும்போதும், குழந்தை பெறும் காலம் முடியும் நேரமும் 'மாதவிடாய் வற்றல்' என்று அழைக்கப்படும். குழந்தை பெறும் வயது என்பது சற்றேறக் குறைய முப்பது வருடங்கள் ஆகும். இந்த காலகட்டத்தில் அண்டப்பைகள் முறையாக 28 நாட்களில் முட்டைகளை உற்பத்தி செய்யும். இந்தப் பருவம் மாதவிடாய் சுழற்சி என்று அழைக்கப்படுகிறது.
  • அதிக சுரப்பிகள், மற்றும் லைனிங் செல் (lining cells), உடைந்த தந்துகியிலிருந்து வரும் இரத்தம், கருவுறா முட்டைகள் இவை அனைத்தும் சேர்ந்துதான் மாதவிடாய் போக்கு (flow)க்கு காரணமாகின்றன.
  • இந்த நேரத்தில் சில பெண் குழந்தைகளுக்கு வயிற்றுவலியோ அல்லது அதிகமான இரத்த போக்கோ ஏற்படும். இதை அவர்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ள அறிவுரைகள் வழங்க வேண்டும். தேவையெனில் மருத்துவர் ஆலோசனைப்படி வலி நிவாரணம் எடுத்துக் கொள்ளலாம். உடற்பயிற்சி செய்யலாம். முறையான உடற்பயிற்சியால் தசைப்பிடிப்பால் ஏற்படும் வலியிலிருந்து நிவாரணம் பெறலாம். தூய்மை மிகவும் முக்கியம்.
  • மென்மையான காய்கறி புரதம் (Textured vegetable proteins) TVP கட்லெட், கபாப், ஸ்டூ, நக்கட் கறி, சோயா குருணை (Soya granules) மின்ஸ் பை போன்றவை TVP கொண்டு செய்யப்படும் சிறந்த தயாரிப்புகள் முளை கட்டுதல் (Geomination) கட்டுப்படுத்தப்பட்ட சில சூழ்நிலைகளில் சத்துக்கள் மேம்படுத் தப்படுவதற்காக, பயறுகள், தானியங்களை செயல்பாட்டிற்கு உட்படுத்தி சிறு முளைகள் வெளிவரச் செய்வதே முளை கட்டுதல் ஆகும்.
  • தானியம் மற்றும் பருப்பு வகைகளை கட்டுப்படுத்தப்பட்ட நிலைகளில் வளர்ப்பதன் மூலம் அதிலிருந்து சிறு முளைகள் தோன்றி அவற்றின் சத்தை அதிகப்படுத்துகின்றன. இதுவே முளைகட்டுதல் ஆகும்.
  • முளைக்கட்டப்படும் பருப்பு வகை சுத்தம் செய்யப்பட்டு, கழுவப்பட்டு அதே அளவு நீரில் இரவு முழுதும் ஊற வைக்கப்படுகிறது. காலையில் பார்க்கும்போது நீர் உறிஞ்சப்பட்டு விதைகள் அளவில் பெரிதாகி, மென்மையாக இருக்கும். இவ்விதைகள் மெல்லிய துணியில் கட்டப்பட்டு காற்றோட்டமான சூரிய ஒளி வரும் இடத்தில் எட்டு மணி நேரம் தொங்கவிடப் படுகிறது. இந்த நேரத்தில் புதிய முளைகள் தோன்றும்.
  • சில வேளைகளில் முளைகள் 1 செ.மீ நீளம் கூட வளரும். வளிமண்டல அழுத்தம் குறைவாக இருந்தால் முளைவிட அதிக நேரம் பிடிக்கும். புதிய சக்தி பெற்ற இத்தானியங்களை பலவகையான உணவுப் பொருள்களோடு கலந்து உண்ணலாம்.
  • புதிதாக முளைவிட்ட முளைகளில் வைட்டமின் C, செறிந்து இருக்கும். இது உலர்ந்த தானியம் மற்றும் பருப்பு வகைகளில் அறவே இருக்காது. நயாசின் (Niacin) 60 லிருந்து 100% வரை 48 முதல் 72 மணி நேரத்தில் அதிகரிக்கிறது. ஆனால் தயாமின் (thiamine) சத்து உலர்தானியத்தில் இருக்கும் அதே அளவு தான் இருக்கும். இரும்புச் சத்து இலகுவாக உடலுக்குக் கிடைக்கும் வண்ணம் தளர்ந்து காணப்படுகிறது. பொதுவாக இரும்புச்சத்து பிணைக்கப்பட்டு இருக்கும்).
  • சோயாபீன்ஸ் சிறப்பான முறையில் பதனிடப்பட்டு மாமிசம் போலவே செய்யப்படுகிறது. அவை மென்மையாக்கப்படுகிறது. உருவம் கொடுக்கப்படுகிறது. இந்த TVP வகை உணவு மாமிச உணவுக்கு மலிவான ஒரு மாற்று உணவாகும். மாமிசத்துடனும் இது சிறப்பாக கலக்கிறது. சாதாரண குடும்பத்திற்கு TVP ஒரு வரம். ஏனெனில் இது குறைந்த செலவில் நிறைந்த தரம் கொடுக்கும்.

நொதித்தல் (Fermentation)

இம்முறையில் இயற்கையான நுண் உயிரிகளை கொண்டு உணவுப் பொருட்களில் விரும்புகின்ற பௌதிக ரசாயன மாற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இதனால் இவை எளிய சிறந்த சத்துக்கள் நிறைந்தவையாக மாற்றப்படுகின்றன.

வெது வெதுப்பான பாலில் சிறிதளவு தயிர் சேர்க்கப்பட்டதும் தயிராக மாறுகிறது. பாலில் உள்ள லேக்டோஸை (lactose) லேக்டிக் அமிலமாக நுண்ணுயிர்கள் மாற்றுவதால் லேசான புளிப்பு சுவை கூடுகிறது.

அரிசியும், பருப்பும் அரைத்து புளிக்க வைத்து இட்லி, தோசை, அடை போன்றவை செய்யப்படுகின்றன. சுத்தம் செய்யப்பட்ட மாவுடன் ஈஸ்ட் அல்லது தயிர் சேர்க்கப்பட்டு புளிக்கவைக்கப்பட்ட பின் பட்டூரா, நான் (Naans) மற்றும் ரொட்டி (bread) செய்யப்படுகிறது. கடலைப்பருப்பை புளிக்க வைத்து டோக்ளா (Dhokla) செய்யப்படுகிறது.

தொடர்ந்து புளிக்க வைக்கும் போது கலவை நுண் துளைகளுள்ள, கொப்புளமிடும் புளிப்பாக மாறுகிறது. தேவையான அளவு வரை மட்டுமே புளிக்க வைக்க வேண்டும். கார்பன்டை ஆக்ஸைடு உண்டாவதால் கலவை மென்மையாகவும், இலேசாகவும் ஆகிறது. (spongy & light) புளிக்க வைத்த உணவு மிகவும் சுலபமாக செரிக்கும். மேலும் உணவிற்கு மென்மையும், மணமும் சேர்க்கும்.

புளிக்க வைத்தல் அஸ்கார்பிக் அமிலத் தன்மையை அதிகரிக்கிறது. தயாமின், ரிபோபிளோவின் மற்றும் நயாசின் இரட்டிப்பாகின்றன. போலிக் (follic) அமிலம் மற்றும் மெத்யோனைன் போன்றவையும் அதிகரிக்கின்றன. இரும்புச் சத்து பிணைப்பிலிருந்து விடுபட்டு எளிதாக கிடைக்க வழி செய்கிறது.

வாய்வழி நீர் ஏற்றும் சிகிச்சையின் சூத்திரம் (Oral rehydration formula) - வீட்டுத்தயாரிப்பு

1 லிட்டர் கொதிக்க வைக்கப்பட்டு, குளிர்விக்கப்பட்ட தண்ணீரில் 20 கிராம் குளுக்கோஸ் அல்லது 40 கிராம் சர்க்கரையுடன் 7 - 8 சிட்டிகை உப்பு சேர்க்க வேண்டும் அல்லது ஒரு லிட்டர் தண்ணீரில் 30 கிராம் (2 மேஜை கரண்டி கோபுரமாக) அரிசி மாவு சேர்த்து 4 முதல் 5 நிமிடம் கொதிக்க வைக்கவும். இதுவே ORS எனப்படும்.

அரிசிக் கஞ்சியை சாதாரண வெப்பநிலையில் 5 முதல் 6 மணி நேரமும், குளிர்பதனப் பெட்டியில் 24 மணி நேரமும் வைத்திருக்கலாம். செயற்கை முறை தயாரிப்பு (ADD) NaCI - சாதாரண உப்பு 3.5 கிராம் (1/2 தேக்கரண்டி NaHCO, - சோடா உப்பு 2.5 கிராம் (1/2 தேக்கரண்டி KCI - பொட்டாசியம் குளோரைடு 1.5 கிராம் அல்லது சிறிதளவு எலுமிச்சை சாறு) H, 0 - 1 லிட்டர் இக்கரைசலை ஒரு நாளைக்கு 4 முதல் 6 குவளைகள் கொடுக்கவும்.

மது மற்றும் மது அல்லாத பானங்கள் (Alcoholic and NonAlcoholic beverages)

  • பானங்கள் என்பவை குடிக்கத் தகுந்த (potable) தாகம் தணிக்கும், புத்துணர்வு ஊட்டக் கூடிய மற்றும் சத்தான பானங்களாகும். பெரும்பான்மையான பானங்களில் உள்ள சர்க்கரை மற்றும் மது போன்றவை சக்தி அளிக்கின்றன.
  • தாது உப்பு, வைட்டமின் போன்ற சத்துக்களையும் அவை அளிக்கின்றன. மது பானங்கள் மத்திய நரம்பு மண்டலத்தை பாதித்து நினைவிழக்க செய்கிறது (tranqualises) பானங்களை சாராயமுள்ளவை சாராயமற்றவை என இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
  • மதுபானங்களில் 76%க்கு குறைவாக சாராயம் இருக்கும். ஒயின், பீர், பிராண்டி, லிக்கர் (liquor) ஜின் போன்றவை இதில் அடங்கும். சாராயமற்ற பானங்கள் சூடான மற்றும் குளிர்ந்த பானங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. தேநீர் (Tea), குழம்பி (coffee), சாக்லேட் (hot chocolate) போன்றவை சுடுபானங்கள். குளிர்பானங்களில் இயற்கையான ஆற்று/சுனை நீர் (Spring Water) அல்லது மினரல் வாட்டர், கோலா (Colas), ஜின்ஜர் ஏல் (ginger ale) குளிர் குழம்பி (Cold coffee) பழச்சாறு மற்றும் சிரப்புகள் (Syrup) அடங்கும்.
  • மதுபானமுள்ள பானங்கள் - அதிக சக்தி ஒருமுகப் படுத்தப்பட்டுள்ளது. உடனடி சக்தி அளிக்கிறது. குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறுகள் புத்துணர்வூட்டுகிறது. வியர்வையால் ஏற்படும் நீர் பற்றாக்குறையை ஈடு செய்கிறது. மேலும் தாது உப்புக்களும், வைட்டமின்களையும் அளிக்கின்றன. பழம் சார்ந்த குளிர்பானங்கள் (fruit beverage) வைட்டமின் C, செறிந்தவை. சூடான பானங்களான குழம்பி, தேநீர் போன்றவை ஊக்கிகளாக உள்ளன. (stimulants).

உணவுப்பாதுகாப்பு (Food safety)

மக்களில் பலருக்கு கிடைக்கும், பரிமாறப்படும் உணவின் பாதுகாப்பு பற்றி உறுதியாக எதுவும் தெரிவதில்லை . பாதுகாப்பு என்பது உயிருக்கு பங்கம் விளைவிக்கும் காயம், மாற்றம் அல்லது இழப்பு போன்றவற்றிலிருந்து விடுபடுதல். பயன் என்பது ஒரு மனிதன் அல்லது பொருள் நலனுக்கு பயன்தரக் கூடியது. அபாயம் என்பது காயம் மற்றும் இழப்புக்கான வாய்ப்பு ஏற்படக் காரணமாக அமைவது.

உணவு பாதுகாப்பு என்பவை கீழ்க்கண்ட காரணிகளை கருத்தில் கொள்வது. உணவினால் ஏற்படும் தொற்றுநோய் (Food borne infection) இவையே உணவுப் பாதுகாப்பு தொடர்பான முக்கியமான பிரச்சினைகளாகும். சந்தையில் புதுவிதமான உணவுப்பொருட்கள் கிடைக்கின்றன. இவை உணவில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை அதிகரிக்க கூடியவைகளாக இருக்கின்றனவா? சுற்றுச்சூழல் தூய்மைக்கேடு (Environmental contamination) நீர் மற்றும் மண் மாசுபாடு எப்படி உணவுப் பொருளை பாதிக்கின்றன. உணவோடு தொடர்புடைய நீர் மற்றும் மண் மாசுபாடு அதன் பிரச்சினைகள் என்ன? இயற்கை நச்சுக்கள் (Natural toxicants) உணவில் உள்ள இயற்கை நச்சுக்கள் மற்றும் அவற்றை தாங்கும் அளவு.

பூச்சிக் கொல்லிகள் (Pesticide) உபயோகித்தலும், அவைகள் உணவில் இருக்கும் அளவும் மற்றும் அகற்றும் வகைகள். வேண்டுமென்றே சேர்க்கப்படும் வண்ணங்கள் மற்றும் பதப்பொருள்கள். இதன் சேர்ப்பு உடலில் எந்த அளவு தாக்குப் பிடிக்கும் மற்றும் அதிகமானால் எவ்வாறு மனித உறுப்புகளின் செயல்பாட்டை பாதிக்கும்.

உணவு சேர்க்கைகள் (Food additives)

உணவு சேர்க்கை என்பது உணவு தயாரிப்புகளில் நேர்முகமாகவோ மறைமுகமாகவோ சேர்க்கப்படும் ஒரு பொருள். இதை தொழில்நுட்ப தேவைக்காக பயன்படுத்துகிறார்கள்.

  1. தாது உப்புக்கள் மற்றும் வைட்டமின்கள் போன்றவை ஊட்டச்சத்து அதிகரிப்பதற்காகவும், தரத்திற்காகவும் சேர்க்கப்படுகின்றன.
  2. உணவுப்பொருளின் தரத்தை மேம்படுத்துதல் அல்லது பாதுகாத்தல் - Moulding & Rancidity. (ஊசிப்போன அல்லது கெட்டுப் போன உணவு).
  3. மென்மையாக்குதல் - ரொட்டி தயாரித்தலில் ஈஸ்ட்
  4. நிறச்சேர்க்கை உணவில் சேர்க்கப்படும் வண்ணங்கள் (Food colours) - உணவின் தோற்றமே வாடிக்கையாளர் அதனை வாங்குவதற்கு முக்கிய காரணியாக அமைகிறது. உணவுத் தயாரிப்பாளர்கள் வண்ணங்கள் தங்கள் உணவு பொருட்களில் சேர்க்கப்படுவதை விரும்புகிறார்கள். உணவு வண்ணங்கள் என்பவை பரவலாக பயன்படுத்தப்படுகின்ற உணவு சேர்மானங்களில் ஒன்று. வண்ணங்கள், செயற்கை கனிம சாயங்கள் மற்றும் உணவிலிருந்து எடுக்கப்பட்ட இயற்கை வர்ணங்கள்/பசை என்பவற்றை உள்ளடக்கியது. ஏறக்குறைய 30 நிறங்கள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த செயற்கை நிறங்கள் பொதுவாக உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பது, அதனால் பாதுகாப்பிற்காக இவைகளை மதிப்பீடு செய்ய வேண்டும்.

நம் உணவில் ஈஸ்ட் (Yeast in our diet)

  • ஈஸ்ட் என்பது உணவுத் துறையில் பயன்படுத்தப்படும் எளிய வகை ஒரு செல் காளான் ஆகும். காய்கறி மற்றும் விலங்கிலிருந்து கிடைக்கும் கச்சா (raw) பொருட்களை (material) நுண்ணுயிரிகள் கொண்டு சில மாற்றங்களை ஏற்படுத்தி அமைப்பதே புளித்த உணவுகள் எனப்படும். ஈஸ்ட் சுவையிலும், மென்மையிலும், ஸ்திரத்திலும் பல்வேறுபட்ட பொருட்களை தயாரிக்க பயன்படுகிறது.
  • கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் எத்தனால் உண்டாக்கக் கூடிய திறன் ஈஸ்ட்டில் உள்ளதால் உணவை புளிக்க வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • கார்பன்டை ஆக்ஸைடு ரொட்டி தயாரிப்பிலும், எத்தனால் பீர், ஒயின் மற்றும் சாராய தயாரிப்பிலும் பயன்படுகின்றன.
  • ஈஸ்ட் அடுமனை (Bakery) தொழிலில் வாசனைக்கும் சுவைக்கும் துணை புரிகிறது. நொதித்தல் அல்லது மாவை உப்பச் செய்தல் என்பது காற்று மற்றும் ஈஸ்ட் இரண்டையும் ஒன்றாகக் கலப்பதன் மூலம் செய்ய முடிகிறது. நான் (naan) செய்ய உதவும் மாவு அல்லது கலவை இதற்கு உதாரணம்.

ஆதாரம் ; தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

Filed under:
2.66666666667
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top