பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / உடல் வீக்கத்தைக் கட்டுபடுத்த உதவும் முள்ளங்கி
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

உடல் வீக்கத்தைக் கட்டுபடுத்த உதவும் முள்ளங்கி

உடல் வீக்கத்தைக் கட்டுபடுத்த உதவும் முள்ளங்கி பற்றிய குறிப்புக்கள்

  • முள்ளங்கியானது தொண்டை சம்பந்தமான நோயை குணமாக்குவதோடு, குரலை இனிமையாக்குகிறது. பசியை தூண்டக்கூடியது, சிறுநீர் அடைப்பை போக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. மேலும் வெட்டை நோய், முடி உதிர்தல் ஆகியவற்றை குணப்படுத்த வல்லது.
  • முள்ளங்கி சூப் குடித்தால் நரம்பு சுருள்கள் நீங்கும். அதிக நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ள முள்ளங்கியில் உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துகளும் தாது உப்புகளும் நிறைந்துள்ளது.
  • முள்ளங்கி, முள்ளங்கி இலை, விதை முதலியவை மருத்துவத்தன்மை நிறைந்தவை. இவற்றை உட்கொண்டால் உடல் முழுவதும் சுத்தமான இரத்தம் எப்போதும் பாய்ந்தோடிக் கொண்டிருக்கும்.
  • இலை பசியைத் தூண்டிச் சிறுநீர் பெருக்கித் தாது பலங்கொடுக்கும். சமைத்துண்ண அதிமூத்திரம், நீர்தடை, வயிற்று எரிச்சல், ஊதின உடம்பு, குடைச்சல், வாதம், வீக்கம், சுவாசக் காசம், கபநோய், இருமல் ஆகியவை தீரும்.
  • முள்ளங்கிச்சாறு 30 மி.லி. காலை, மாலை கொடுக்கச் சிறுநீரகக் கோளாறு, நீர்தாரைக் குற்றங்கள் நீங்கும். முள்ளங்கி சிறுநீர் பெருக்கும், குளிர்ச்சியுண்டாக்கும்.
  • இலைச்சாற்றை 5 மி.லி. ஆக நாள்தோறும் 3 வேளை சாப்பிட்டு வர மலக்கட்டு, சிறுநீர்க் கட்டு, சூதகக்கட்டு எளிய வாத நோய்கள் தீரும்.
  • இந்த முள்ளங்கியால் வாத நோய், வயிற்றெரிச்சல், உடல் நரம்பு வலி, காசநோய், தலைவலி, மயக்கம், ஆஸ்துமா என்ற இரைப்பு, கடுப்பு என்ற சீதபேதி ஆகியன குணமாகும்.
  • சிறுநீரகத்தை நன்கு இயக்கும் குணமுடையது. அதனால் சிறுநீரைப் பெருக்கி நீர்கோர்வை என்ற உடல் வீக்கத்தைக் குறைக்கும். வாரம் இருமுறை இதனை உணவில் சேர்க்க வேண்டும். பொரியல், சாம்பார் எதுவும் செய்து சாப்பிடலாம். வெள்ளை முள்ளங்கி மிக்க குணமுடையது.
  • இதனை இடித்து சாறு பிழிந்து 30-50 மி.லி. அளவு காலை, மாலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது சாப்பிடும்போது உணவில் புளி தவிர்க்கவும். மேலே கூறப்பட்ட அனைத்து நோய்களும் குணமாகும்.
  • கருவுற்ற தாய்மார்கள் இதனை வாரந்தோறும் சாப்பிட்டு வந்தால் குழந்தைப்பேறு எளிதாகும். சிறுநீர் எளிதாக பிரியும். இதனால் ஏற்படும் கை, கால் வீக்கம் வராது.
  • இதன் விதையைக் குடிநீராக கசாயம் செய்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியாகும்

ஆதாரம் : நல்வாழ்வு, மருத்துவம்

2.96226415094
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top