பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / காலையில் எழுந்ததும் புத்துணர்ச்சியுடன் இருக்க குறிப்புகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

காலையில் எழுந்ததும் புத்துணர்ச்சியுடன் இருக்க குறிப்புகள்

காலையில் எழுந்ததும் புத்துணர்ச்சியுடன் இருக்க செய்ய வேண்டியவைகள்.

புதிய நாள்

ஒவ்வொரு நாளையும் புதிதாக துவங்குங்கள். பழையதை நினைத்து நினைத்து இன்றைய புதிய நாளை வீணாய் கொன்றுவிடாதீர்கள். எனவே, முதலில் நேற்றைய வெற்றியை நினைத்து காலரை தூக்குவதும், தோல்வியை நினைத்து கண் கலங்குவதும் நிறுத்துங்கள். இவை இரண்டுமே உங்களது முன்னேற்றத்தை தடுக்கும் முட்டுக்கட்டைகள் ஆகும்!

தியானம்

தியானம் உங்கள் மனதை ஒருநிலைப்படுத்த உதவும். உங்கள் மனம் ஒருநிலை ஆகும் போது, நீங்கள் செய்யும் எந்த ஒரு வேலைகளிலும் தெளிவான முடிவு எடுக்க முடியும். இது வெற்றியை பரிசளிக்கும்.

படிக்கும் பழக்கம்

காலை வேளைகளில் புத்தகம் அல்லது நாளிதழ்களை படிப்பது நல்ல பழக்கம் ஆகும். இது உங்கள் மூளையை சுறுசுறுப்பாக இருக்க வைக்கும்.

நிதானம் தேவை

விடிந்தும் விடியாது உங்களது நாளை துரிதமாக நகர்த்தாமல் கொஞ்சம் பொறுமையுடன் ஆரம்பியிங்கள். பொறுமையும், நிதானமும் மிக முக்கியம். இவை இரண்டும் இல்லாதவர்கள் தான் மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை என்ற இருவருடன் நட்பு பாராட்டுவார்கள்.

உடற்பயிற்சி

தியானம் உங்கள் மனநிலையை மேம்படுத்த உதவுவது போல, உடற்பயிற்சி உங்கள் உடல்நிலையை மேம்படுத்த உதவும். மனதும், உடலும் மேம்படும் போது உங்கள் வாழ்க்கை மேம்படும்.

இன்றைய வேலைகள்

இன்று நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை முன்பே முடிவு செய்து வேலை பார்ப்பது நல்லது. எந்த முன்னேற்பாடும் இன்றி நாளை துவக்குவது தான் பெரும்பாலான பிரச்சனைகளை உண்டாக்குகிறது. மற்றும் இதன் கூடுதல் வினையாய் உடல்நல கோளாறுகளும் ஏற்படுகின்றன.

3.09183673469
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top