பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / உணவுமுறையால் நோய்கள் உருவாக காரணம்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

உணவுமுறையால் நோய்கள் உருவாக காரணம்

இயற்கை உணவுகளை மறந்ததினால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி இங்கே காணலாம்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சாப்பிட்டு வந்த இயற்கையாக விளைந்த சத்துள்ள உணவு வகைகளை சாப்பிடுவதை நிறுத்தி விட்டு நம்மில் பலர் செயற்கை உணவு வகைகளுக்கு மாறியதாலும் சுகாதாரமற்ற உணவுகளை எடுத்துக்கொள்வதாலும், இன்று புதிது புதிதாக பல நோய்கள் உருவாகி வருகின்றன.

இயற்கை உணவு

விவசாய நிலத்தில் சிறு, குறு தானியங்கள் சாகுபடி செய்து அவற்றை அறுவடை காலத்தில் அறுவடை செய்து அவற்றை உணவாக்கி பயன்படுத்துவதை பலரும் மறந்து விட்டோம்.

இதனால் தான் பாரம்பரியமான இயற்கை உணவுகள் இன்று காட்சி பொருட்களாக மாறி வருகிறது. தற்போது நம்மிடையே உள்ள முறையற்ற உணவு பழக்க வழக்கத்தால் சுமார் 10 பேரில் 8 பேருக்கு சர்க்கரை நோய் போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.

காரணம் அரிசி உற்பத்திக்காக பல விதமான பூச்சி மருந்துகளை விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். எனவே இனியாவது பாரம்பரிய உணவு முறைகளை பின்பற்றினால் நோய்கள் இன்றி வாழலாம். இரும்பு சத்துள்ள உணவுகளான காய்கறி, கீரைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சுகாதாரமற்ற உணவு

அதுமட்டுமின்றி சுகாதாரமில்லாத உணவு முறைகளின் மூலம் பல தொற்று நோய்களும் ஏற்படுகின்றன. சுத்தம், சமைத்த மற்றும் சமைக்காத உணவை தனித்தனியே வைத்தல், உணவைப் பாதுகாப்பான தட்பவெப்பத்தில் பராமரித்தல், கழுவுதல் மற்றும் மூடி வைப்பதன் மூலமாக பாதுகாப்பான தண்ணீர் மற்றும் உணவைப் பயன்படுத்தி, உணவு மற்றும் தண்ணீரினால் ஏற்படும் நோய்களை தடுக்கலாம்.

கேள்வி பதில்

1. உணவின் மூலம் பரவும் நோய்கள் என்றால் என்ன?

பாக்டீரியாக்கள் இருக்கும் உணவுப் பொருளை உண்பதால் உணவின் மூலமாகத் தொற்று நோய் ஏற்படுகிறது. அதை சாப்பிட்ட பின்னர் உடலுக்குள் சென்றுத் தொற்றை ஏற்படுத்துகிறது.

2. உணவின் மூலம் தொற்று ஏற்படக் காரணம் என்ன?

முறையற்ற உணவுத் தயாரிப்பு முறைகள், பாதுகாப்பு முறைகள் மற்றும் வீட்டில் சுத்தம் பேணப்படாமல் இருத்தல் அகிய காரணங்களால் உணவின் மூலம் நோய்கள் பரவுகிறது.

3. தண்ணீர் மூலம் பரவும் நோய்களுக்கான காரணங்கள் யாவை?

குடிக்கும் நீர் நிலைகளில் பாதிப்படைவதாலும், மிருக மற்றும் மனிதக் கழிவுகள் குடிதண்ணீர் நிலைகளில் கலப்பதாலும் தண்ணீர் மூலம் பரவும் நோய்கள் ஏற்படுகின்றன.

4. உணவு மற்றும் தண்ணீர் மூலம் பரவும் முக்கிய நோய்கள் யாவை?

டைபாய்டு, மஞ்சள் காமாலை, காலரா

ஆதாரம் : கரூர் மாவட்ட குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்

3.08064516129
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top