பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / பாதத்தில் ஏற்படும் வெடிப்புகளை குணமாக்குவது எப்படி?
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பாதத்தில் ஏற்படும் வெடிப்புகளை குணமாக்குவது எப்படி?

பாதத்தில் ஏற்படும் வெடிப்புகளை குணமாக்குவது எப்படி? என்பதை பற்றிய குறிப்புகள்

  1. தரையைச் சுத்தம் செய்யப் பயன்படும் சோப் ஆயிலில் உள்ள கெமிக்கல், கால்களில் பட்டால் சிலருக்கு வெடிப்பு உண்டாகும்.
  2. ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவுங்கள். இது வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும்.
  3. கடுகு எண்ணெயை கால், கைகளில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாகும்.
  4. ஒரு நாள் பாத்திரம் தேய்க்கும் நாரில் தயிரை தொட்டு உள்ளங்காலில் தேயுங்கள். மறுநாள் தண்ணீரில் கல் உப்பைப் போட்டு நாரில் தொட்டு தேயுங்கள். தொடர்ந்து இப்படி செய்து வர, பாதம் மென்மையாக மாறுவதை காணலாம்.
  5. வெந்தயக் கீரையை அரைத்து கை, கால்களில் பத்து போல் அப்பி தேய்த்து கழுவி வந்தாலும், முரட்டுத் தன்மை போய் மிருதுவாகும்.
  6. மருதாணி பவுடருடன் டீத்தூள், சர்க்கரை, தேங்காய் எண்ணெய் கலந்து கை, கால்களில் இட்டுக் கொள்வது மிகவும் நல்லது. இது வெடிப்பு மற்றும் சொர சொரப்பை நீக்கி குளிர்ச்சியாக்கி, பஞ்சு போன்று மென்மையாக்கும்.
  7. உருளைக்கிழங்கை சீவி உலர்த்தி பவுடராக்கி தண்ணீரில் குழைத்து பூசி வந்தால், வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி, மிளிரும்.
  8. டூ வீலர் ஓட்டும்போது ஒட்டு மொத்த பிரஷரும் கைகளுக்குப் போவதால், கைகள் கன்னிப் போக வாய்ப்பிருக்கிறது! இதற்காக பயப்படத் தேவையில்லை. நேரடியாக வண்டியின் கைப்பிடியை பிடிக்காமல், கை உறை அணிந்து கொண்டாலோ, கைப்பிடியில் கம்பளியினால் செய்த உறையைப் பொருத்திக் கொண்டாலோ இந்தப் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

ஆதாரம் : தினமலர்

3.02898550725
TASNA Mar 16, 2016 05:04 PM

விகாஸ்பீடியாவில் உள்ள "பாதம் காக்கும் பத்து வழிமுறைகள்" என்ற கட்டுரையை படித்துப் பின்பற்றவும். நன்றி

Reshma Mar 16, 2016 03:34 PM

என் பாதத்தில் வெடிப்பு இல்லை ஆனால் தடித்து கடினமாக உள்ளது அதை மென்மையாக என்ன செய்ய வேண்டும் தோழி

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top