ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருப்பது உடலில் நோயில்லாமல் இருந்தால் மட்டும் போதாது. நலம் என்பது உடல் உள்ளம் சமுதாயத்தில் நல்லதொரு நிலை என்று அனைத்திலும் முழுமை பெற்று இருக்க வேண்டும்.
ஒரு மனிதன் நன்கு படிக்கிறான், நல்லதொரு வேலையும் கிடைக்கிறது, யார் கிட்டேயும் பேசமாட்டான், ஆனால் சமுதாய வாழ்க்கையில் அவனது பங்கேற்ப்பு இல்லை என்றால், அவன் மனிதனாய் வாழ்ந்து என்ன பயன். ஆனால் ஒரு மனிதன் 5 வரை படித்து உள்ளான், நல்ல விவசாயம் செய்து வருகிறான், சமுதாய அக்கறையுடன் ஓய்வு நேரங்களில் செயல்படுகிறான், குடும்ப பிரச்சினைகளை தீர்த்து வைக்கிறான் என்றால் அது ஆரோக்கியம்.
இன்றைய கால கட்டங்களில் கைபேசி வந்தது போதும் குடும்பத்தில் உள்ள உறவுகளின் இடையில் தூரம் அதிகரித்து வருகிறது. மேலும் ஊடகங்களில் வரும் நிகழ்சிகளின் தாக்கங்கள் சமுதாயத்தின் மீது நேர்மறையான கருத்துக்களை இளைஞர் மனதில் விதைக்கிறது. இதனால் ஒரு சிறிய பிரச்சினைக்கு கூட நண்பர்களுடன், உறவினர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்க இயலாது, தவிர்க்கப்பட வேண்டிய முடிவுகளை எடுக்கிறான்.
ஓர் ஐந்தாண்டு காலமாக மருத்துவ மனைகளில் விடம் சாப்பிடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணம், சமுதாயத்தில் உள்ள நம்பிக்கை மேம்பட வேண்டும் என்பதையே குறிக்கிறது.
எனவே மக்களின் உடல் உள்ளம் நலம் காக்க பள்ளி கல்லூரிகளில் நல்லதொரு பயிற்சி அவசியம் தேவை. மாணவர்களை படிப்பு மதிப்பெண் மட்டும், உடற்பயிற்சி உடன் சமுதாய தொலை நோக்கு பார்வை உடன் நல நம்பிக்கையுடன் பயிற்றுவித்தல் அவசியமான ஒன்று.
இனைந்து செயல்படுவோம் இனிய இளைஞர் சமுதாயம் காப்போம்.
ஆதாரம் : சர்ச்சில் துரை
மிக அருமை