பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / மஞ்சள் காமாலை- தடுப்பது எப்படி?
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மஞ்சள் காமாலை- தடுப்பது எப்படி?

மஞ்சள் காமாலை- தடுப்பது எப்படி? பற்றிய குறிப்புகள்

மஞ்சள் காமாலை தாக்குதல்

உயிரை கொல்லக்கூடிய மிக ஆபத்தான நோய்களில் ஒன்று தான் மஞ்சள் காமாலை. எனவே சரியான நேரத்தில் கண்டுபிடித்து சிகிச்சை மேற்கொள்வது அவசியம்.

  • வயதான ரத்த சிவப்பணுக்கள் மண்ணீரலில் (Spleen)அழிக்கப்படும் போது பிலிரூபின் (Spleen) என்ற நிறப்பொருள் உடலில் உற்பத்தி ஆகிறது.
  • இந்த பிலிரூபின் மலம், சிறுநீர் வழியாக வெளியேறுகிறது.
  • கல்லீரல் பாதிக்கப்பட்டாலோ, பித்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டாலோ கழிவுப்பொருளான பிலிரூபின் உடலிலேயே தங்கிவிடுகிறது. இதனால்தான் உடலில் மஞ்சள் நிறம் ஏற்படுகிறது.
  • மது அருந்துவதாலும், ஹெபடைட்டிஸ் கிருமிகள் கல்லீரலை தாக்குவதாலும் கூட மஞ்சள் காமாலை ஏற்படுகிறது.
  • வைரஸ் A மற்றும் E கிருமிகளால் ஏற்படும் மஞ்சள் காமாலை, அசுத்தமான நீரையும், ஈ மொய்த்த தின்பண்டங்களை உட்கொள்வதாலும் பரவுகிறது.
  • சாக்கடை நீர் கலந்த குடிநீர் மற்றும் அசுத்தமான நீரை குடிப்பவர்களுக்கும் இந்த ஆபத்து ஏற்படும்.
  • வைரஸ் B,C,D மற்றும் `G’ வகை கிருமிகள் ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது, அதாவது பலமுறை பலருக்கு பயன்படுத்திய ஊசியை உபயோகப்படுத்தும் போது பரவுகிறது.

அறிகுறிகள்

  • வாந்தி, குமட்டல், பசியின்மை, உடல் சோர்வு, வயிற்றின் வலதுபக்க மேல்பாகத்தில் வலி, மூட்டுவலி, வயிறுவீக்கம், காய்ச்சல், ரத்தக்கசிவு என ஒன்பது விதமான அறிகுறிகள் காணப்படும்.
  • கண்ணின் வெள்ளைப் படலத்திலும், நாக்கின் அடிப் பகுதியிலும் மஞ்சளாக இருக்கும்.
  • சிறுநீரும் மஞ்சள் நிறத்தில் போகும். மேலும் சிறுநீர் வெளியேற்றுவதிலும் சிரமங்கள் ஏற்படும்.
  • கல்லீரல் அழற்சியின் அடுத்தகட்டமாக கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீங்கி பெரிதாகும். இத்துடன் நிணநீர்க்கட்டிகளிலும் வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

சிகிச்சை முறைகள்

  • ரத்தப் பரிசோதனையின் மூலம் மஞ்சள் காமாலை நோயை உண்டாக்கும் வைரஸ் பற்றி கண்டறிய முடியும்.
  • இந்த வைரசுக்கு எதிரான எதிர்ப்பாற்றல், புரதத்தின் அளவு ரத்தத்தில் அதிகரித்திருப்பதை வைத்து மஞ்சள் காமாலை நோயின் தாக்கத்தை அறியலாம்.
  • ரத்தம், சிறுநீர் பரிசோதனைக்கு அடுத்தபடியாக அல்ட்ராசவுண்டு ஸ்கேன் மூலம் பித்தக்குழாயில் உள்ள கட்டிகள், கற்கள் போன்றவற்றை துல்லியமாக கண்டறியலாம்.
  • நோய் இருப்பது உறுதியான பின்னர், உணவு கட்டுப்பாட்டை கடைபிடிப்பது அவசியம்.
  • கல்லீரல் அழற்சி நீண்ட காலம் இருந்தால் அது கல்லீரல் புற்றுநோயாக மாறவும் வாய்ப்பு உள்ளது. மேலும் கல்லீரல் செயலழிந்து விடும் அபாயமும் உள்ளது.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

  • காரமான மசாலா உணவுகளை வகைகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
  • மஞ்சள் காமாலை வந்து ஐந்து மாதங்கள் வரை அசைவ உணவுகள் எடுக்கக் கூடாது.
  • முட்டையில் மஞ்சள் கரு, அதிக புரதம் உள்ள பருப்பு, சோயா வகைகள் மற்றும் எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.
  • சுகாதாரமற்ற இடங்களில் விற்கும் குளிர்பானம், உணவு வகைகளை உண்பதையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
  • எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகள் சாப்பிடுவது மிக முக்கியம்.

பாதுகாப்பு முறைகள்

  • மழைக்காலங்களில் நீரை கொதிக்க வைத்து ஆறிய பின் அருந்தவேண்டும்.
  • நோய் தொற்றை தவிர்க்க சுற்றுப்புறத்தை மிக தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • குழந்தைப் பருவத்தில் மஞ்சள் காமாலை தடுப்பூசி போடுவதன் மூலம் நோய் ஏற்படுவதை தடுக்கலாம்.
  • சுகாதாரமான கழிப்பிடத்தை பயன்படுத்த வேண்டும், ஈக்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • கல்லீரல் பாதிப்பு நோய் உள்ளவர்கள் மது அருந்தும் பழக்கத்தை கண்டிப்பாக விட்டுவிட வேண்டும்

ஆதாரம்: தமிழ்செய்தி நாளிதழ்

Filed under:
3.24418604651
Prabhakaran Mar 12, 2018 05:58 PM

Thanks for ur information

kannamma Mar 09, 2018 01:32 PM

கல்லீரல் பாதிப்பு நோய் உள்ளவர்கள் மது அருந்தும் பழக்கத்தை கண்டிப்பாக விட்டுவிட வேண்டும்

மணி Feb 28, 2018 11:57 AM

கண்ணீல் மஞ்சள் நிறமாக தெரிகிறது இது மஞ்சள் காமலை எனறு தெரிஈந்து விட்ட பிறகு அத்தகு தேவையான உணவு வகைகள் எடுத்துக் கொள்வது குறித்த தகவல்கள் தேவை

ஈஸ்வரன் Jan 06, 2018 03:44 PM

சென்னிமலை அருகே உள்ள சிலமகவுண்டம்பாலயத்தில் மஞ்சள் காமாலைலைக்கு மருந்து கொடுத்து வேர் கட்டப்பட்டு வருகிறது. பத்தியம் இல்லை 100% குணமாகும்.

கெளதம் Dec 21, 2017 12:27 PM

எனக்கு கண்கள் எப்பொழுதும் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது வயிற்றில் அவ்வ ேபாது வலி ஏற்படுகிறது
மஞ்சள் காமைலயா இருக்குமா இதற்க்கு நிவாறனம் என்ன

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top