பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / மஞ்சள் காமாலை- தடுப்பது எப்படி?
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மஞ்சள் காமாலை- தடுப்பது எப்படி?

மஞ்சள் காமாலை- தடுப்பது எப்படி? பற்றிய குறிப்புகள்

மஞ்சள் காமாலை தாக்குதல்

உயிரை கொல்லக்கூடிய மிக ஆபத்தான நோய்களில் ஒன்று தான் மஞ்சள் காமாலை. எனவே சரியான நேரத்தில் கண்டுபிடித்து சிகிச்சை மேற்கொள்வது அவசியம்.

 • வயதான ரத்த சிவப்பணுக்கள் மண்ணீரலில் (Spleen)அழிக்கப்படும் போது பிலிரூபின் (Spleen) என்ற நிறப்பொருள் உடலில் உற்பத்தி ஆகிறது.
 • இந்த பிலிரூபின் மலம், சிறுநீர் வழியாக வெளியேறுகிறது.
 • கல்லீரல் பாதிக்கப்பட்டாலோ, பித்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டாலோ கழிவுப்பொருளான பிலிரூபின் உடலிலேயே தங்கிவிடுகிறது. இதனால்தான் உடலில் மஞ்சள் நிறம் ஏற்படுகிறது.
 • மது அருந்துவதாலும், ஹெபடைட்டிஸ் கிருமிகள் கல்லீரலை தாக்குவதாலும் கூட மஞ்சள் காமாலை ஏற்படுகிறது.
 • வைரஸ் A மற்றும் E கிருமிகளால் ஏற்படும் மஞ்சள் காமாலை, அசுத்தமான நீரையும், ஈ மொய்த்த தின்பண்டங்களை உட்கொள்வதாலும் பரவுகிறது.
 • சாக்கடை நீர் கலந்த குடிநீர் மற்றும் அசுத்தமான நீரை குடிப்பவர்களுக்கும் இந்த ஆபத்து ஏற்படும்.
 • வைரஸ் B,C,D மற்றும் `G’ வகை கிருமிகள் ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது, அதாவது பலமுறை பலருக்கு பயன்படுத்திய ஊசியை உபயோகப்படுத்தும் போது பரவுகிறது.

அறிகுறிகள்

 • வாந்தி, குமட்டல், பசியின்மை, உடல் சோர்வு, வயிற்றின் வலதுபக்க மேல்பாகத்தில் வலி, மூட்டுவலி, வயிறுவீக்கம், காய்ச்சல், ரத்தக்கசிவு என ஒன்பது விதமான அறிகுறிகள் காணப்படும்.
 • கண்ணின் வெள்ளைப் படலத்திலும், நாக்கின் அடிப் பகுதியிலும் மஞ்சளாக இருக்கும்.
 • சிறுநீரும் மஞ்சள் நிறத்தில் போகும். மேலும் சிறுநீர் வெளியேற்றுவதிலும் சிரமங்கள் ஏற்படும்.
 • கல்லீரல் அழற்சியின் அடுத்தகட்டமாக கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீங்கி பெரிதாகும். இத்துடன் நிணநீர்க்கட்டிகளிலும் வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

சிகிச்சை முறைகள்

 • ரத்தப் பரிசோதனையின் மூலம் மஞ்சள் காமாலை நோயை உண்டாக்கும் வைரஸ் பற்றி கண்டறிய முடியும்.
 • இந்த வைரசுக்கு எதிரான எதிர்ப்பாற்றல், புரதத்தின் அளவு ரத்தத்தில் அதிகரித்திருப்பதை வைத்து மஞ்சள் காமாலை நோயின் தாக்கத்தை அறியலாம்.
 • ரத்தம், சிறுநீர் பரிசோதனைக்கு அடுத்தபடியாக அல்ட்ராசவுண்டு ஸ்கேன் மூலம் பித்தக்குழாயில் உள்ள கட்டிகள், கற்கள் போன்றவற்றை துல்லியமாக கண்டறியலாம்.
 • நோய் இருப்பது உறுதியான பின்னர், உணவு கட்டுப்பாட்டை கடைபிடிப்பது அவசியம்.
 • கல்லீரல் அழற்சி நீண்ட காலம் இருந்தால் அது கல்லீரல் புற்றுநோயாக மாறவும் வாய்ப்பு உள்ளது. மேலும் கல்லீரல் செயலழிந்து விடும் அபாயமும் உள்ளது.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

 • காரமான மசாலா உணவுகளை வகைகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
 • மஞ்சள் காமாலை வந்து ஐந்து மாதங்கள் வரை அசைவ உணவுகள் எடுக்கக் கூடாது.
 • முட்டையில் மஞ்சள் கரு, அதிக புரதம் உள்ள பருப்பு, சோயா வகைகள் மற்றும் எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.
 • சுகாதாரமற்ற இடங்களில் விற்கும் குளிர்பானம், உணவு வகைகளை உண்பதையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
 • எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகள் சாப்பிடுவது மிக முக்கியம்.

பாதுகாப்பு முறைகள்

 • மழைக்காலங்களில் நீரை கொதிக்க வைத்து ஆறிய பின் அருந்தவேண்டும்.
 • நோய் தொற்றை தவிர்க்க சுற்றுப்புறத்தை மிக தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
 • குழந்தைப் பருவத்தில் மஞ்சள் காமாலை தடுப்பூசி போடுவதன் மூலம் நோய் ஏற்படுவதை தடுக்கலாம்.
 • சுகாதாரமான கழிப்பிடத்தை பயன்படுத்த வேண்டும், ஈக்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
 • கல்லீரல் பாதிப்பு நோய் உள்ளவர்கள் மது அருந்தும் பழக்கத்தை கண்டிப்பாக விட்டுவிட வேண்டும்

ஆதாரம்: தமிழ்செய்தி நாளிதழ்

Filed under:
3.22471910112
மேத்யூ May 20, 2017 10:30 AM

எனக்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை மஞ்சள்காமாலை வந்து கொண்டே இருக்கிறது.. இதை எப்படி முழுமையாக குண படுத்துவது

shareef Feb 14, 2017 03:51 PM

இடம்: கெங்காரன் பாளையம்..விழுப்புரம்... நாட்டு மருந்து ஒரு வீட்டில்...பாரம்பரியம் மாக தாரங்க.... நன்றாக குணம் ஆகும் ... யாரை கேட்டாலும் சொல்லுவார்கள்....

விஷ்வா Jan 05, 2017 03:48 PM

மஞ்சள் காமாலை b ஐ குணபடுத்த முடியுமா?

TASNA Dec 21, 2015 10:35 AM

அருகில் உள்ள மருத்துவமனையை அணுகி ஆலோசனைப் பெறுதலே சிறந்தது.

சங்கிதா Dec 19, 2015 08:27 PM

நல்ல கருத்து எங்க அப்பவுக்கு கல்லீரல்மஞ்சள் காமாலை புத்துநோய் இருக்கு இதுக்கு சிகிச்சை இருக்க கொஞ்சம் சொல்லவும்

ravi sankar Jun 12, 2015 11:14 AM

உயிரை கொல்லக்கூடிய மிக ஆபத்தான நோய்களில் ஒன்றான மஞ்சள் காமாலை. பற்றிய பயனுள்ள தகவல்கள். பலமுறை பலருக்கு பயன்படுத்திய ஊசியை உபயோகப்படுத்தும் போது பரவுகிறது என்ற செய்தி புதியதாக இருந்தது. .மஞ்சள் காமாலை வந்து ஐந்து மாதங்கள் வரை அசைவ உணவுகள் எடுக்கக் கூடாது என்ற எச்சரிக்கை பலர் கடைபிடிக்காத ஒன்று .

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top