பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / மனித உடல் உறுப்புகளின் செயல்முறைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மனித உடல் உறுப்புகளின் செயல்முறைகள்

மனித உடல் உறுப்புகளின் செயல்முறைகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

மனித உடல்

அக்குபஞ்சர் சித்தாந்தபடி மனித உடலில் உள்ள முக்கியமான 12 உருப்புகளில் ஒவ்வோரு உறுப்பும் இரண்டு மணி நேரம் அதனுடைய உயிர்சக்தி ஓட்டத்தின் உச்ச கட்ட இயக்கத்தில் இருக்கும். ஒரு மனிதனின் உடல்நிலை நன்றாகவோ அல்லது நோய்வாய்படுவதோ இந்த உயிர்சக்தி ஓட்டத்தின் தன்மையை பொறுத்ததேயாகும். ஒருவர் இயற்கையின் விதிகளை மீறும்போது இயற்கை அவர்க்கு அளிக்கும் தண்டனையே நோய் என்பது மருத்துவ மொழி.

ஒவ்வோரு மனிதனும் இயற்கையின் படைப்பே என்பதால் இயற்கையே குருவாக மதித்து அது காட்டும் வழியில் நடப்பதே ஒவ்வோரு மனிதனின் கடைமையாகும்.

ஒரு மனிதன் ஆரோக்கியமான வாழ்கையை நடத்த வேண்டுமென்றால் அவனது உடல் மொழியை கேட்டு கற்றுக்கொள்ள வேண்டும்.

உடல் உறுப்புகளின் செயல்முறைகள்

அதிகாலை --- 3-5 மணி--- நுரைஈறல் --- இந்நேரத்தில் எழுவது உடல் நலத்திற்கு மிகவும் நன்று. யோகாசனம், மூச்சுப்பயிற்சி, தியானம் போன்றவைகளை இந்நேரத்தில் செய்வது மிகவும் நல்லது. காரணம் விடியற்காலையில் 3.30 மணி முதல் 5 மணி வரை வெட்டவெளியில் அமுதகாற்று (ozone) வீசுகின்றது. அந்த நேரத்தில் எழுந்து தியானம் செய்வதால் நாம் ஒரு புதிய சக்தியை பெறுவோம். உதாரணமாக நடைபாதையில் படுத்து உறங்கும் ஏழை எளிய மக்களை அதிகமாக எந்த நோயும் தாக்குவதில்லை. இதற்கு காரணம் வெட்ட வெளியில் அவர்கள் அதிகாலையில் அந்த அமுத காற்றை சுவாசிப்பதுதான். ஆஸ்துமா நோயாளிகளால் இந்த நேரத்தில் தூங்க முடியாது. மூச்சு விட இயலாது சிரமபடுவர்.

காலை --- 5-7 மணி --- பெருங்குடல் --- இந்நேரத்தில் கண்டிப்பாக எழுந்திருக்க வேண்டும். இந்நேரத்தில் எழுந்திருபவர்களுக்கு கண்டிப்பாக மலச்சிக்கல் இருக்காது. மலம் கழித்து குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும், அதனால் நரம்பு தளர்ச்சி ஏற்படாது. "விடியலில் எழுந்திருபவன் வாழ்கையில் தோற்றதில்லை" என்பது மருத்துவ பழமொழி. வாழ்வில் என்றும் அவர்களுக்கு வெற்றிதான் கிடைக்கும்.

காலை --- 7-9 மணி --- வயிறு --- கண்டிப்பாக இந்நேரத்தில் காலை உணவை முடித்திருக்க வேண்டும்.

காலை --- 9-11 மணி --- மன்னிரல் --- மிகச்சிறிய சிற்றுண்டியோ, பானங்களோ அல்லது தண்ணீர் கூட சாப்பிடகூடாது. அப்படி எதாவது சாப்பிட்டால் மன்னிரலில் பாதிப்பு ஏற்பட்டு உடலில் உஷ்ணம் அதிகரிக்கும். மேலும் நாம் உண்ணும் உணவு, நீர் ஆகியவை வயிற்றில் ஜீரணிக்க நெடுநேரம் எடுத்துகொல்கிறது. உணவின் ஜீரனத்தில் மன்னிறலின் பங்கு பற்றி நமக்கு தெரிந்ததே. உணவு சாப்பிட்டதும் ஏற்படவேண்டிய சுருசுருபிற்கும், புத்துணர்வுக்கும் பதிலாக அசதியும், தூக்கமும் இந்நேரத்தில் அவர்களை ஆட்கொள்ளும். நாளடைவில் பசி குறையும். காலையில் யோகாசன பயிற்சிகளை முடித்தபின் சிலருக்கு மேற்படி குறிகள் அந்நேரத்தில் தோன்றும். அதற்கு காரணம் அவர்களுக்கு மன்னிரல் செயல் இயக்க குறைவுதான். நீரிழிவு நோயாளிகளுக்கு தொந்தரவு அதிகரிக்கும் நேரமிது. (படபடப்பு, மயக்கம், தூக்க கலக்கம் ஏற்படும்).

நண்பகல் --- 11-1 மணி --- இருதயம் --- கடினமான வேலை ஏதும் செய்யாமல் தண்ணீர் மட்டும் குடித்து உடலை சாந்தப்படுத்திக்கொள்ளலாம். நகரத்தில் உள்ள எல்லா தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் விழிப்புடன் இருக்கும் நேரமிது. காரனம் இந்த நேரத்தில் தான் இருதய நோயாளிகளுக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கும் மாரடைப்பு ஏற்படும் சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கும். அதனால் அதை தவிர்க்க இவர்கள் இந்த நேரத்தில் படுத்து தூங்காமல் இருக்க வேண்டும், அப்படி தூங்கினால் அபான வாயு பிரானவாயுடன் கலந்து மாரடைப்பு ஏற்படுத்தும் அல்லது முகவாதம் அல்லது பக்கவாதம் அல்லது ஒட்டுவாதம் மற்றும் உடல் வலிகள் நிச்சயம் தோன்றும்.

பகல் --- 1-3 மணி --- சிறுகுடல் --- மதிய உணவை முடித்து ஐந்து நிமிடங்கள் கண்களை மூடி ஓய்வு எடுக்கலாம். படுத்து உறங்குவதை இந்நேரத்தில் தவிர்க்க வேண்டும்.

பிற்பகல் --- 3-5 மணி --- சிறுநீர்ப்பை --- பானங்களோ அல்லது தண்ணீரோ அருந்த உகந்த நேரம். முதுகு வலி இடுப்பு வலி வரும் நேரம்.

மாலை --- 5-7 மணி --- சிருநீரகம் --- வழக்கமான வேலைலிருந்து விடுபட்டு இரவுக்கு முன்பாகவே வீடு வந்து சேரவேண்டும். ரீனல்பெயிலியர் முதல் நீர்கடுப்பு வரை ஏற்படும்.

இரவு --- 7-9 மணி --- இருதய மேலுறை --- இந்நேரத்திற்குள் கண்டிப்பாக இரவு உணவை முடித்திருக்க வேண்டும். மார்புவலி, பாரம், படபடப்பு தோன்றும்.

இரவு --- 9-11 மணி --- மூன்று வெப்பமூட்டி --- காலை முதல் மாலை வரை உழைத்து கலைத்த மனித உறுப்புகளுக்கு ஓய்வு தரவேண்டிய நேரம். இந்நேரத்திற்கு பின்பு கண் விழித்திருத்தலோ படிப்பதோ கூடாது.

நடுநிசி --- 11-1 மணி --- பித்தப்பை --- இந்நேரத்திற்குள் கண்டிப்பாக தூங்கிக்கொண்டிருக்க வேண்டும். இந்நேரத்தில் விழித்திருந்தால் அடுத்த நாள் உங்கள் முழு சக்தியை இழக்க நேரிடும்.

மிக அதிகாலை --- 1-3 மணி --- கல்லிரல் --- இந்நேரத்தில் ஆழ்ந்த நித்திரையில் இருக்க வேண்டும். இந்நேரத்தில் விழித்திருந்தால் கண்டிப்பாக கண்ணின் பார்வை சக்தி குறையும், உறக்கம் பாதிக்கும், உடல் அரிப்பு, நமைச்சல் அதிகரிக்கும்.

ஆதாரம் : கல்விச்சோலை

2.96610169492
ஆனந்தகுமார் Aug 05, 2017 12:31 PM

அருமையான தகவல்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top