பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

அன்னாச்சி பழம் - மருத்துவ குணங்கள்

உடல் ஆரோக்கியத்தை காக்கும் அன்னாச்சி பழத்தின் மருத்துவ குணங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

இயற்கை நமக்கு அளித்துள்ள கொடைகளில் முக்கியமானவை பழங்கள். இவற்றில் ஒவ்வொன்றிலும் பல்வேறு சத்துக்கள் இருப்பதுடன் மருத்துவ குணங்கள் இருப்பதும் நமக்கு பல நன்மைகளை செய்கிறது.

அன்னாசியில் மாங்கனீஸ் உள்ளிட்ட சத்துக்கள் நிறைய உள்ளன. சமீபத்திய ஆய்வுகளில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. அன்னாசி பெரும்பாலும் வெப்பமான பகுதிகளில் பயிரிடப்படுகிறது.

புரதத்தை செரிக்கக் கூடிய புரோமலைன் என்ற என்சைம் இதில் அதிகம் உள்ளது. இது ரத்தம் உறையாமல் பாதுகாக்கிறது. வைட்டமின் சி சத்தும் அன்னாசியில் அதிகம் உள்ளது.

இது இதய நோய்கள் மற்றும் மாரடைப்பில் இருந்து பாதுகாப்பளிக்கிறது. இப்பழத்தில் உள்ள இதர பிற வைட்டமின்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

அன்னாசி பழம் சாப்பிடுவதால் காது மற்றும் சளித்தொல்லை, ப்ளூ காய்ச்சல் உள்ளிட்டவற்றில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். இப்பழத்தில் உள்ள மாங்கனீஸ் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்களின் சக்தியை அதிகரிக்கும்.

மேலும் இதில் உள்ள தையாமின் மற்றும் வைட்டமின் பி சத்து, உடலில் உள்ள சுரப்பிகளின் செயல்பாட்டை சீராக்குகிறது. இதனால் உடலுக்கு அதிக சக்தி கிடைக்கிறது.

இது சோர்வின்றி செயல்பட ஏதுவாகிறது. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அன்னாசி நிறைய சாப்பிடலாம்.

ஆதாரம் : http://news.cinemay.in/

3.13978494624
Srinivasan Sep 25, 2018 10:08 AM

Thanks

ரா.பால நாகராஜன் Sep 11, 2018 05:23 AM

நன்றாக இருந்தது இதனை மேலும் கடைபிடிக்கவும்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top