பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வாசகர் அனுபவங்கள் / விகாஸ்பீடியா மூலம் தொழில் கடனுதவி பெற்றேன்
பகிருங்கள்

விகாஸ்பீடியா மூலம் தொழில் கடனுதவி பெற்றேன்

என் மாதிரி இருக்கும் நபருக்கு விகாஸ்பீடியா ஒரு வரபிரசாதமாக விளங்கும். இவ்வலைதளம் மேலும் வளர மனமார வாழ்த்துக்கிறேன்.

விகாஸ்பீடியா வலைதளத்தில் கடந்த மாதம் சமூகநலத்தில் பதிவேற்றம் செய்த சுய தொழில் பற்றிய தகவல்களையும், தொழில் முனைவோர் வழிகாட்டி மற்றும் சுய தொழில் நிறுவனங்களையும் பார்த்தேன். மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஏனெனில் இந்த தகவல்களை விகாஸ்பீடியா வலைதளத்தில் பார்த்து எனது மாவட்டத்தில் உள்ள மாவட்ட தொழில் மையத்தில் சுய தொழில் தொடங்க கடந்த மாதம் 16.07.2016 அன்று விண்ணப்பம் செய்தேன். இந்த விண்ணப்பத்தை மாவட்ட தொழில் மையத்தில் பரிசீலினை செய்து எனக்கு அழைப்பு கடிதம் கிடைக்கப்பெற்று தற்போது நேர்முகத்தேர்வுக்கு சென்று வந்துள்ளேன். நேர்முகத் தேர்வில் அவர்கள் இந்தியன் வங்கிக்கு கடன்தேவையான விபரங்களை அனுப்பியுள்ளதாக தெரிய வருகிறது. இதன் மூலம் நான் தொழில் தொடங்கி வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலை கொடுத்து உதவுவேன்.  இச்செய்தியை விகாஸ்பீடியாவில் பெற்றேன் என்பது மிக்க மகிழ்ச்சி. மேலும் இதுபோன்ற என் மாதிரி இருக்கும் நபருக்கு விகாஸ்பீடியா ஒரு வரபிரசாதமாக விளங்கும் என்றும் இவ்வலைதளம் மேலும் வளர மனமார வாழ்த்துக்கிறேன்.

நன்றி

இப்படிக்கு

அபிராமி, திண்டுக்கல்

போன் : 9498049377

Back to top