பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வாசகர் அனுபவங்கள் / வேலைவாய்ப்பு தகவல் அறிந்தேன்
பகிருங்கள்

வேலைவாய்ப்பு தகவல் அறிந்தேன்

விகாஸ்பீடியா வாட்ஸ்ஆப் மூலம் தகவல் அறிந்து வலைதளத்தை பார்த்தேன்.

என் பெயர் எஸ். ரூபவதி நான் சென்னை நீலாங்கரையில் வசிக்கிறேன். நான் கடந்த மார்ச் மாதம் விகாஸ்பீடியா தமிழ் வலைதளத்தில் வேலைவாய்ப்பு தகவல்களைப் பார்த்தேன். இதில் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத்தில் கணக்காளர் பதவிக்கு விண்ணப்பம் செய்திருந்தேன். என் விண்ணப்பத்தினை பரிசீலனை செய்து எனக்கு கடந்த செப்டம்பர் மாதம் அழைப்பு கடிதம் வந்தது. இதில் கலந்து கொண்டு எனக்கு பணி கிடைத்தது. இந்த பணி தற்காலிகம் தான் ஆனால் எனக்கு தற்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என்னுடைய குடும்பமும் வறுமை. தற்போது இருக்கும் சூழ்நிலையில் தனியார் துறையில் வேலைகிடைத்தும் பெண்கள் அவதிப்படுவதை பார்க்கும் போது எனக்கு இதன் மூலம் பணிகிடைத்தது மிக்க மகிழ்ச்சி. விகாஸ்பீடியா வாட்ஸ்ஆப் மூலம் தான் இத்தகவல் கிடைத்தது. பிறகு விகாஸ்பீடியா வலைதளம் சென்று பார்த்து இச்செய்தியினை அறிந்தேன். இந்த விகாஸ்பீடியா வலையதளத்தில் வேலைவாய்ப்புச் செய்தி மட்டுமல்ல அனைத்து துறை தகவல்களும் நாள்தோறும் பதிவு செய்யப்பட்டும் வருகிறது. இத்தகவலை நானும் என்னுடைய போஸ்புக் வழியாகவும், வாட்ஸ்ஆப் மூலமாகவும் தெரியப்படுத்திவருகிறேன். விகாஸ்பீடியா மேலும் சிறந்து வளர்ந்து நமது நாடு முன்னேற்றம் அடைய என்னுடைய வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

நன்றி

எஸ்.ரூபவதி,

கதவு எண். 766, கணேஷ் நகர், மகாலட்சுமி வீதி, நீலங்கரை, சென்னை 600115.

மின்னஞ்சல் : rubavathizachariah@gmail.com

கைப்பேசி : 8438510214

Back to top