பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / செய்திகள்
பகிருங்கள்

செய்திகள்

தேதி தலைப்பு விவரம்
Mar 22, 2018 10:09 AM இந்திய விமானத்துறையில் வேலைவாய்ப்புகள் - போலி விளம்பரங்கள் குறித்து ஆணையம் எச்சரிக்கை இந்திய விமானத்துறையில் வேலைவாய்ப்புகள் இருப்பதாக வரும் போலி விளம்பரங்களைப் பார்த்து ஏமாற வேண்டாம் என குறித்து இந்திய விமானநிலைய ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Mar 22, 2018 10:06 AM காசநோயாளிகள் குறித்து தகவல் தெரிவிக்காவிட்டால் டாக்டர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை காசநோயாளிகள் குறித்த தகவல்களை அரசுக்கு தெரிவிக்காவிட்டால், மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள், மருந்தாளுநர்கள் ஆகியோருக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Mar 21, 2018 10:15 AM மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கு மார்ச் 25-ம் தேதி முதல் அகில இந்திய ஒதுக்கீடு மருத்துவ பட்டமேற்படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு வரும் 25-ம் தேதி முதல் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
Mar 21, 2018 10:23 AM ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க வங்கிகளில் சிறப்பு மையம் ஏற்பாடு ஆதார் அட்டை வழங்குவதற்காக பல்வேறு வங்கிக் கிளைகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Mar 20, 2018 10:33 AM முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக சேமிக்க இளைஞர்களை ஈர்க்கும் ‘இணையப் பெட்டகம்’ இந்திய அரசு செய்து தந்துள்ள ஒரு வசதி - டிஜி-லாக்கர். தமிழில், ‘இணையப் பெட்டகம்’ என்று கொள்ளலாம். இதன்மூலம் ஒருவர், தனது சான்றிதழ்கள், பத்திரங்கள், பிற முக்கிய ஆவணங்களைப் பாதுகாப்பாக சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
Mar 19, 2018 10:23 AM உணவு தானிய உற்பத்தியில் சாதனை - தமிழகத்துக்கு ‘கிரிஷி கர்மான்’ விருது உணவு தானிய உற்பத்தியில் சாதனை புரிந்ததற்காக தமிழகத்துக்கு ‘கிரிஷி கர்மான்’ விருதை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.
Mar 19, 2018 10:15 AM 11, 12-ம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு - ஆசிரியர்களுக்கு அரசு புதிய அனுமதி பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு பணியை ஆசிரியர்கள் வருவாய் மாவட்டத்துக்குள் விரும்பிய மையத்தில் மேற்கொள்ள அரசு தேர்வுத்துறை அனுமதி அளித்துள்ளது.
Mar 17, 2018 10:29 AM மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் தொடக்கம் தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் ஆன்லைனில் தொடங்கியது.
Mar 16, 2018 10:35 AM ஏழை குடும்பங்களுக்கு இரண்டரை லட்சம் வீடுகள் தமிழகத்தில் ஏழை குடும்பங்களுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Mar 16, 2018 10:29 AM அரசு மருத்துவ கல்லூரிகளில் புதிதாக 345 எம்பிபிஎஸ் இடங்கள் வரும் ஆண்டுகளில் நெல்லை, மதுரை, கன்னியாகுமரி, கோவை அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிதாக 345 இடங்கள் உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Back to top