பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / செய்திகள் / ‘இன்சூரன்ஸுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்’
பகிருங்கள்

‘இன்சூரன்ஸுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்’

அனைத்துவிதமான இன்சூரன்ஸ் பாலிசிகளுடனும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏ) அறிவுறுத்தி உள்ளது.

அனைத்துவிதமான இன்சூரன்ஸ் பாலிசிகளுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, இந்தியக் காப்பீட்டு திட்ட ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏ) காப்பீட்டு நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில் பொதுக் காப்பீடு, ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, வாகனக் காப்பீடு உள்ளிட்ட அனைத்துவிதமான பாலிசிகளிலும், பாலிசிதாரர்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

தையடுத்து, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர் பற்றிய கேஓய்சி படிவத்தில் ஆதார் எண்ணை குறிப்பிடுமாறு வலியுறுத்தி வருவதாக ஆயுள்காப்பீட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆதாரம் : தி இந்து

Back to top