பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / செய்திகள் / 25 ஆயிரம் பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச பட்டயக் கணக்காளர் பயிற்சி
பகிருங்கள்

25 ஆயிரம் பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச பட்டயக் கணக்காளர் பயிற்சி

பட்டயக் கணக்காளர் பணிக்கான தேவையைக் கருத்தில்கொண்டு 25 ஆயிரம் பிளஸ் 2 மாணவர்களுக்கு, 500 பட்டயக் கணக்காளர்களைக் கொண்டு வாரத்தில் ஒருநாள் இலவச பயிற்சி அளிக்கப்படும்

நாட்டில் ஜிஎஸ்டி அமலாக்கத்துக்கு பிறகு பட்டயக் கணக்காளர்களுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது. எனவே, பிளஸ் 2 படிக்கும்போதே, 25 ஆயிரம் மாணவர்களுக்கு, வாரத்துக்கு ஒரு நாள், 500 பட்டயக் கணக்காளர்களைக் கொண்டு இலவசமாக பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதன்முதலாக பட்டயக் கணக்காளர் பணிக்கான வகுப்புகள் இலவசமாக தமிழகத்தில்தான் நடத்தப்படுகின்றன.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அந்தந்த பகுதி கல்லூரிகளில் சேர்ந்த பிறகு, பட்டயக் கணக்காளர் பணிக்கான அடிப்படைத் தேர்வை எழுதும் வகையில் 15 நாள் இலவச பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு உணவு, தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும். பட்டயக் கணக்காளர் தேர்வு எழுதி வெற்றி பெற்றால் வாரம் ரூ.20 ஆயிரம் வரை சம்பாதிக்க முடியும்.

ஆதாரம் : தி இந்து

Back to top