பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / செய்திகள் / அம்மா ஸ்கூட்டர் - மாற்றுத்திறன் மகளிருக்கு கூடுதல் மானியம் உயர்த்தி அரசாணை
பகிருங்கள்

அம்மா ஸ்கூட்டர் - மாற்றுத்திறன் மகளிருக்கு கூடுதல் மானியம் உயர்த்தி அரசாணை

செப்டம்பர் 27 தேதியிட்ட ஊரக வளர்ச்சித்துறை அரசாணை எண்.143 வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதம் மகளிருக்கான மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தைத் தொடங்கியது. இத்திட்டத்தின்படி ஸ்கூட்டர் ஒன்றுக்கு அதிகபட்சமாக 50% மானியம் அல்லது ரூ.25,000 வழங்குவதாக அறிவித்து பொதுவாக அரசாணையை வெளியிட்டது.

மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016-ன்படி மத்திய, மாநில அரசுகள் எந்த ஒரு சமூகப் பாதுகாப்புத் திட்டம் தீட்டினாலும், மாற்றுத்திறனாளிகளுக்கென தனியாக கூடுதலாக 25% ஒதுக்கீடுகளைச் செய்ய வேண்டும். இந்நிலையில் செப்டம்பர் 27 தேதியிட்ட ஊரக வளர்ச்சித்துறை அரசாணை எண்.143 வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அரசாணையில், இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனம் வாங்க விரும்பும் தகுதியுள்ள மாற்றுத்திறன் மகளிருக்கு, மற்றவர்களுக்கு வழங்கப்படும் மானியத்தைவிட கூடுதலாக 25% உயர்த்தி அதாவது ரூ.31,250 வரை மானியம் வழங்குவதாக உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அரசாணையை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வரவேற்பதாக தெரிவித்துள்ளது.

ஆதாரம் : தி இந்து

Back to top