பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / செய்திகள் / அரசின் 25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
பகிருங்கள்

அரசின் 25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களில் சேர தமிழகம் முழுவதும் இதுவரை ஒரு லட்சத்து 9 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்று (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும்.

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் (சிறுபான்மையினர் பள்ளிகள் நீங்கலாக) அறிமுக வகுப்புகளில் (எல்கேஜி, ஒன்றாம் வகுப்பு) சமூகத்தில் நலிவடைந்த பிரிவினர், விளிம்பு நிலையில் உள்ளவர்கள், வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். இந்த சிறப்பு இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கான கல்விச் செலவுகளைச் (அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டணம்) சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகங்களுக்கு அரசு வழங்கிவிடும்.

இந்நிலையில், 2018-19-ம் கல்வி ஆண்டில் 25 சதவீத இட ஒதுக்கீட்டுப் பிரிவில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் ஏப்ரல் 20-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. விண்ணப்பிப்பதற்கு இன்று (மே 18) கடைசி நாள் ஆகும். மே 28-ம் தேதி சம்பந்தப்பட்ட கல்வித் துறை அதிகாரிகள் முன்னிலையில் குலுக்கல் நடத்தி இடஒதுக்கீடு பெற்ற குழந்தைகள் ஜூன் 1-ம் தேதி பள்ளியில் சேர்ந்துகொள்ளலாம்.

ஆதாரம் : தி இந்து

Back to top