பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / செய்திகள் / அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு
பகிருங்கள்

அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நவம்பர் 23 முதல் 25-ம் தேதி வரை சென்னை, விழுப்புரம், மதுரை ஆகிய 3 இடங்களில் நடைபெற உள்ளது.

அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு நடத்தப்பட்ட போட்டித்தேர்வு முடிவின்படி சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை, விழுப்புரம், மதுரை ஆகிய 3 இடங்களில் நவம்பர் 23 முதல் 25-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான அழைப்புக்கடிதத்தை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அழைப்புக்கடிதம் தபால் மூலம் தனியாக அனுப்பப்பட மாட்டாது. இணையதளத்தில் வெளியிடப்படும் அழைப்புக் கடிதத்தையே சான்றிதழ் சரிபார்ப்பின்போது எடுத்தவர வேண்டும்.

சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் மையம், பாடப்பிரிவு மற்றும் நாள் விவரம் வருமாறு:

1. நிர்மலா மகளிர் மேல்நிலைப்பள்ளி, தெப்பக்குளம் அருகில், காமராஜர் சாலை, மதுரை - பொறியியல் அல்லாத பாடங்கள் - நாள்: நவம்பர் 24, 25

2. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, விழுப்புரம் - பொறியியல் அல்லாத பாடங்கள் - நாள்: நவம்பர் 24, 25.

3. சென்ட்ரல் பாலிடெக்னிக், சிஐடி வளாகம், தரமணி, (இந்திரா நகர் எம்ஆர்டிஎஸ் ரயில்நிலையம் அருகில்-மத்திய கைலாஷ் பஸ் ஸ்டாப் அருகில்) - பொறியியல் பாடங்கள் - நாள்: நவம்பர் 23, 24, 25.

ஆதாரம் : தி இந்து

Back to top