பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / செய்திகள் / ஆதாரை தாமாக முன்வந்து பயன்படுத்த அனுமதிக்கும் அவசர சட்டத்துக்கு ஒப்புதல்
பகிருங்கள்

ஆதாரை தாமாக முன்வந்து பயன்படுத்த அனுமதிக்கும் அவசர சட்டத்துக்கு ஒப்புதல்

வங்கிக் கணக்கு தொடங்கவும், செல்போன் சிம் கார்டு வாங்கவும் தாமாக முன்வந்து ஆதாரைப் பயன்படுத்த அனுமதிக்கும் அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த ஒப்புதல் வழங்கி உள்ளார்.

வங்கிக் கணக்கு தொடங்கவும் செல்போன் சிம் கார்டு வாங்கவும் அடையாள ஆவணமாக ஆதார் எண்ணை வழங்கவாடிக்கையாளர்கள் தாமாக முன்வந்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் ஆதார் எண்ணை கட்டாயமாக கேட்கக்கூடாது. அதேநேரம் தனியார் நிறுவனங்கள் ஆதார் முக்கிய தகவல்களை சேமிக்கக் கூடாது. இந்த சட்டத்தை மீறுவோருக்கு அதிகபட்சம் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்.

ஆதாரம் : தி இந்து

Back to top