பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / செய்திகள் / ஆதார் வைத்திருப்பவர்களுக்கு புதிய ’விர்ச்சுவல்’ அடையாள அட்டை
பகிருங்கள்

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு புதிய ’விர்ச்சுவல்’ அடையாள அட்டை

ஆதார் விவரங்கள் பாதுக்காக்கப்பட வேண்டும் என்ற கவலை மக்களிடம் அதிகரித்து வரும் நிலையில், புதிய மெய் நிகர் (விர்ச்சுவல்) அடையாள அட்டையை தேசிய தனிநபர் அடையாள ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தனிநபர் ரகசியங்கள் காக்கப்படும் நோக்கத்துடன், குறைவான தகவல்களை மட்டுமே கொண்ட, தற்காலிக மெய்நிகர் அடையாள அட்டையை தேசிய தனிநபர் அடையாள ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

மொபைல் போன் சிம்கார்டு உள்ளிட்டவற்றிற்கு, இந்த மெய்நிகர் அடையாள அட்டையை பயன்படுத்தலாம். இதன் மூலம் ஆதாரில் பதிவு செய்துள்ள முழு விவரங்களின் ரகசியம் வெளியாகக்கூடும் என்ற அச்சம் எழாது. ஆதார் எண் பதிவு செய்தவர்கள், தேவை ஏற்படின், இணையதளத்தில் இருந்து, குறைந்த தகவல்களுடன் கூடிய இந்த மெய்நிகர் அடையாள அட்டையை தாங்களே உருவாக்கிக் கொள்ள முடியும்.

குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பயன்படுத்தக்க இந்த அடையாள அட்டை தற்காலிகமானதாக இருக்கும். தேவை ஏற்படின், ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும், இதுபோன்ற தற்காலிக அடையாள அட்டையை பெற முடியும்.

இதுமட்டுமின்றி பல்வேறு ஏஜென்சிகளுக்கும், தனிநபரின் ஆதார் குறித்த அனைத்து தகவல்களையும் தருவதற்கு பதிலாக குறிப்பிட்ட சில தகவல்களை மட்டும் அளிக்கவும் தேசிய தனிநபர் அடையாள ஆணையம் முடிவு செய்துள்ளது.

ஆதாரம் : தி இந்து

Back to top