பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / செய்திகள் / ஆயுள் காப்பீடுகளுக்கான பிரீமியம் செலுத்த மேம்படுத்தப்பட்ட ஆன்லைன் சேவை அறிமுகம்
பகிருங்கள்

ஆயுள் காப்பீடுகளுக்கான பிரீமியம் செலுத்த மேம்படுத்தப்பட்ட ஆன்லைன் சேவை அறிமுகம்

அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடுகளுக்கான பிரீமியங்களை, காப்பீடுதாரர்கள் ஆன்லைன் மூலம் செலுத்துவதை ஊக்கப்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்ட ஆன்லைன் சேவையை அஞ்சல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

அஞ்சல் ஆயுள் காப்பீடுக்கான பிரீமியத்தை அரசு ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் இருந்தே மாதம்தோறும் பிடித்தம் செய்து கட்டும் வசதி உள்ளது. ஆனால், கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு எடுத்தவர்கள் தங்களது பிரீமியத்தை அஞ்சல் நிலையங்களில் செலுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு ஆன்லைன் மூலம் பிரீமியம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாடு முழுவதும் 34,707 காப்பீடுகளுக்கான பிரீமியம் மட்டுமே ஆன்லைன் மூலம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆன்லைன் மூலம் பிரீமியம் செலுத்துவதை அதிகரிப்பதற்காக ஆன்லைன் சேவை மேம்படுத்தப்பட்டுள்ளது. https://pli.indiapost.gov.in/CustomerPortal/PSLogin.jsp என்ற லிங்கில் சென்று காப்பீடுதாரர்கள் தங்களுக்கென ஒரு ஐடி-யை உருவாக்க வேண்டும். இதற்காக, காப்பீடுதாரர் தனது மொபைல் எண், இ-மெயில் முகவரி ஆகியவற்றை அருகில் உள்ள அஞ்சல்நிலையத்தில் சென்று பதிவு செய்ய வேண்டும்.

இந்த ஆன்லைன் சேவை வசதியை பயன்படுத்தி காப்பீடுதாரர்கள் தங்களது பிரீமியத் தொகையை எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் செலுத்தலாம். இதற்காக, அஞ்சலகங்களை தேடிச் செல்ல வேண்டியதில்லை. ஆன்லைன் மூலம் பணம் செலுத்திய உடன் அதற்கான ரசீது இ-மெயிலில் உடனடியாக அனுப்பி வைக்கப்படும். மேலும், பாலிஸியின் தற்போதைய நிலை, இதுவரை செலுத்தப்பட்ட பிரீமியத் தொகை (ஜிஎஸ்டி வரி உட்பட), பாலிசி மீதான கடன் பெறும் வசதி, காப்பீட்டை திரும்ப ஒப்படைத்தல் (சரண்டர் செய்தல்), முதிர்வு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை ஆன்லைன் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்த ஆன்லைன் சேவையை பயன்படுத்தி பிரீமியம் செலுத்துவதன் மூலம் காப்பீடுதாரர்களுக்கு நேரமும், அலைச்சலும் மிச்சமாகும்.

ஆதாரம் : தி இந்து

Back to top