பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / செய்திகள் / இணையதள குற்றங்களை தடுக்க மத்திய அரசு சார்பில் பயிற்சி
பகிருங்கள்

இணையதள குற்றங்களை தடுக்க மத்திய அரசு சார்பில் பயிற்சி

‘சைபர் கிரைம்’ எனப்படும் இணைய தள குற்றங்களை தடுக்க 1200 தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மத்திய அரசு பயிற்சி அளிக்கவுள்ளது.

தேசிய குற்றப் பதிவு மையத்தின் புள்ளிவிவரப்படி கடந்த 2011 முதல் 2014-ம் ஆண்டு வரை இணையதளக் குற்றங்கள் சுமார் 300 சதவீதம் அதிகரித்துள்ளன. இந்த அதிகரிப்பு 2013 முதல் 2014 வரை மட்டும் 70 சதவீதமாக உள்ளது. 2015-ல் பாதுகாப்பு தொடர்பான 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இணையதள குற்றங்களை மத்திய அரசின் தேசிய தொழில்நுட்ப ஆய்வு நிறுவனத்தின் கீழ் செயல்படும் ‘இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜென்ஸி ரெஸ்பான்ஸ் டீம்’ சமாளித்துள்ளது. இது தொடர்பாக ‘ஐடி சட்டம் 2000’-ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்தக் குற்றங்கள் பெரும்பாலும் அமெரிக்கா, துருக்கி, சீனா, பாகிஸ்தான், பிரேசில், அல்ஜீரியா, சவுதி அரேபியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து செய்யப்படுகின்றன.

நாடு முழுவதிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையால் இணையதள குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. இதை சமாளிக்க சில தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உதவியுடன் மத்திய, மாநில அரசுகளின் நிறுவனங்கள், முப்படைகள், பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் ஆகியவற்றில் உள்ள தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரிகளில் 1200 பேரை தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

ஆதாரம் : தி இந்து

Back to top