பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / செய்திகள் / இணையவழி ஆவணப் பதிவுக்கு 11 வங்கிகள் மூலம் கட்டணம் செலுத்தும் வசதி
பகிருங்கள்

இணையவழி ஆவணப் பதிவுக்கு 11 வங்கிகள் மூலம் கட்டணம் செலுத்தும் வசதி

இணையவழி ஆவணப்பதிவைத் தொடர்ந்து, பதிவுக்கான கட்டணத்தை இணையவழி கட்டும் வசதியில் 11 வங்கிகளை பதிவுத்துறை சேர்த்துள்ளது.

இணைய வழி மற்றும் நேரடியாகவும் பதிவுத்துறைக்கு கட்டணம் செலுத்துவதற்காக மென்பொருளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஏற்கெனவே 6 வங்கிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றுடன் மேலும் 5 வங்கிகள் புதிதாக சேர்க்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பரோடா வங்கி, அலகாபாத் வங்கி, ஐடிபிஐ, சிண்டிகேட் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, யூனியன் வங்கி, விஜயா வங்கி ஆகிய 11 வங்கிகள் மூலம் தற்போது கட்டணம் செலுத்தலாம்.

மேலும், 1800 102 5174 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைக் கொண்ட சேவை மையம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பதிவுத்துறையின் சேவைகள் குறித்த விவரங்கள், ஆலோசனைகளைப் பெறலாம்.

ஆதாரம் : தி இந்து

Back to top