பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / செய்திகள் / ஐடிஐ-யில் சேர ஜூன் 27 வரை விண்ணப்பிக்கலாம்
பகிருங்கள்

ஐடிஐ-யில் சேர ஜூன் 27 வரை விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூர் மாவட்ட அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) சேர வரும் 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள பல்வேறு தொழிற்பிரிவுகளுக்கு 2018-19-ம் கல்வியாண்டுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. மாவட்ட கலந்தாய்வு முறையிலான இந்த சேர்க்கைக்கு www.skilltraining.tn.gov.inஎன்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விருப்பம் உள்ள 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் வரும் 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளம், சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் முறை பற்றி எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆகவே, தகுதியுள்ள மாணவ, மாணவியர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும், விவரங்களுக்கு அம்பத்தூர், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநர் மற்றும் முதல்வரை நேரடியாகவோ, 044–26252453 என்ற தொலைபேசி எண் மூலமோ தொடர்பு கொள்ளலாம்.

ஆதாரம் : தி இந்து

Back to top