பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / செய்திகள் / கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் சத்து மாத்திரை மாற்றம்
பகிருங்கள்

கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் சத்து மாத்திரை மாற்றம்

அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் சத்து மாத்திரையை மாற்றி வழங்கும்படி தேசிய சுகாதார இயக்கம் உத்தரவிட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் கால்சியம் லேக்டேட் சத்து மாத்திரை, கர்ப்பிணிகள் மட்டுமின்றி தேவைப்படும் அனைவருக்கும் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்படுகிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய சுகாதார இயக்கம் (என்எச்எம்) ஆய்வு செய்ததில், கால்சியம் லேக்டேட் மாத்திரையை உட்கொள்வதால் வயிற்று உபாதைகள் ஏற்படுவதாகத் தெரியவந்தது.

இதையடுத்து கால்சியம் லேக்டேட் மாத்திரைக்கு பதிலாக கால்சியம் கார்போனைட் என்ற சத்து மாத்திரையை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கால்சியம் கார்போனைட் மாத்திரையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆதாரம் : தி இந்து

Back to top