பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / செய்திகள் / குரூப்-4 போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்
பகிருங்கள்

குரூப்-4 போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

சென்னைப் பல்கலைக்கழகத் தில் நடைபெறவுள்ள குரூப்-4 போட்டித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகளில் சேர விரும்புவோர் பல்கலைக்கழகத்தை நேரில் அணுகலாம்.

பல்கலைக்கழகங்களில் போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழகமும் சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் (பொது) இணைந்து அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் முன்ஆயத்த பயிற்சி வகுப்புகளை இலவசமாக நடத்தி வருகின்றன.

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 போட்டித் தேர்வில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மனுதாரர்கள் எளிதில் வெற்றி பெற வசதியாக இந்தப் போட்டித் தேர்வுக்கான முன்ஆயத்த பயிற்சி வகுப்புகள் நடத்தவுள்ளன.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.

இதில் சேர விரும்புவோர் உரிய கல்விச் சான்றுகளுடன் இம்மாதம் 3-வது வாரத்தில் சென்னைப் பல்கலைக்கழக வழிகாட்டும் மைய இயக்குநர் அல்லது சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை அலுவலக நேரங்களில் நேரில் தொடர்பு கொள்ளலாம்

ஆதாரம் : தி இந்து

Back to top