பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / செய்திகள் / சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் குடிமைப் பணி நேர்முக தேர்வுக்கு இலவச பயிற்சி
பகிருங்கள்

சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் குடிமைப் பணி நேர்முக தேர்வுக்கு இலவச பயிற்சி

சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் நடைபெறவுள்ள குடிமைப்பணி நேர்முகத் தேர்வுக்கு இலவச பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கடந்த ஆண்டு நடைபெற்ற குடிமைப் பணி முதல்நிலை தேர்வை 6 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள். இவர்களில் 13,365 பேர் தேர்ச்சி பெற்று முதன்மை தேர்வுக்கு தகுதி பெற்றனர். தமிழகத்தில் 810 பேரும், சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் 423 பேரும் முதன்மை தேர்வுக்கு தகுதி பெற்றனர். முதன்மை தேர்வு கடந்த அக்டோபர் 28-ம் தேதி நடைபெற்றது. அத்தேர்வின் முடிவு நேற்று முன்தினம் (ஜனவரி 10) வெளியிடப்பட்டது. இதில் இந்திய அளவில் 2568 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 218 பேர் தேர்வாகியுள்ளனர். இவர்களில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் அனைத்து பயிற்சி மையங்களிலும் சேர்த்து 171 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இவர்களுக்கு வரும் பிப்ரவரி 2-வது வாரத்தில் டெல்லியில் நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்காக சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் சிறந்த வல்லுநர்கள் மூலம் மாதிரி நேர்முகத் தேர்வில் அனைத்து போட்டியாளர்களும் கட்டணமின்றி பங்கேற்கலாம். நேர்முகத் தேர்வு பயிற்சியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் interview@shankarias.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், 9003073321 என்ற செல்போன் எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம்.

ஆதாரம் : தி இந்து

Back to top