பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / செய்திகள் / சிறப்பு எம்பிஏ படிப்பு சென்னை ஐஐடி அறிமுகம்
பகிருங்கள்

சிறப்பு எம்பிஏ படிப்பு சென்னை ஐஐடி அறிமுகம்

பணியில் உள்ளவர்கள் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் படிக்கும் வகையிலான சிறப்பு எம்பிஏ படிப்பை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான நுழைவுத்தேர்வுக்கு வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பணியில் இருப்பவர்கள் படிக்க வசதியாக ஐஐடியின் நிர்வாகவியல் துறை 2 ஆண்டுகால சிறப்பு எம்பிஏ படிப்பை (Executive MBA) அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போதைய தேவை, டிஜிட்டல் பொருளாதாரம், எதிர்கால உற்பத்தி, சர்வதேச உத்தி போன்றவற்றை எதிர்கொள்ளும் வகையில் இந்த புதிய எம்பிஏ படிப்பு இருக்கும். இதற்கான வகுப்புகள் ஒரு வாரம் விட்டு ஒரு வாரம், வாரஇறுதி நாட்களில் (அதாவது சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில்) நடைபெறும். சிறந்த, நீண்ட அனுபவம் வாய்ந்த பேராசியர்கள் வகுப்பு எடுப்பார்கள். அடுத்த ஆண்டு ஜனவரியில் வகுப்புகள் தொடங்கும்.

பட்டப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்படிப்பில் சேரலாம். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். நுழைவுத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். தகுதியுள்ள பட்டதாரிகள் நவம்பர் 30-ம் தேதிக்குள் ஆன்லைனில் (https://doms.iitm.ac.in/emba) விண்ணப்பிக்க வேண்டும்.

ஆதாரம் : தி இந்து

Back to top