பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / செய்திகள் / சென்னை புத்தகக் காட்சி இன்று தொடக்கம்
பகிருங்கள்

சென்னை புத்தகக் காட்சி இன்று தொடக்கம்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) நடத்தும் 41-வது புத்தகக் காட்சி இன்று தொடங்குகிறது. இந்த புத்தகக் காட்சி 22-ம் தேதி வரை நடக்கிறது.

41-வது புத்தகக் காட்சி கீழ்பாக்கத்தில் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் இன்று தொடங்குகிறது. இந்த புத்தகக் காட்சி வரும் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது.

புத்தகக் காட்சியில் புத்தகங்களுக்கு 10 சதவீத கழிவு வழங்கப்படும். நுழைவுக் கட்டணமாக ரூ.10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 12 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு அனுமதி இலவசம். புத்தகக் காட்சி நடக்கும் பள்ளி வளாகத்தில் கார்கள், இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு மேல் வாகனங்கள் வந்தால் பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் அவற்றை நிறுத்தலாம்.

புத்தகக் காட்சி வளாகத்தில் பணம் பெற 2 ஏடிஎம் இயந்திரங்களும், பணம் செலுத்த 15 இடங்களில் டெபிட், கிரெடிட் கார்டு ஸ்வைப்பிங் செய்துகொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. வாசகர்கள் பயன்படுத்தும் விதமாக இலவச வைஃபை வசதி செய்யப்பட்டுள்ளது. வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் புத்தகக் காட்சி நடைபெறும்.

ஆதாரம் : தி இந்து

Back to top