பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / செய்திகள் / சென்னை புத்தகக் காட்சி ஜன.10-ல் தொடக்கம்
பகிருங்கள்

சென்னை புத்தகக் காட்சி ஜன.10-ல் தொடக்கம்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) நடத்தும் 41-வது புத்தகக் காட்சி கீழ்ப்பாக்கத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் வரும் 10-ம் தேதி தொடங்குகிறது.

புத்தகக் காட்சியில் புத்தகங் ளுக்கு 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். நுழைவுக் கட்டணம் ரூ.10. 12 வயதுக்கு குறைவான குழந்தை களுக்கு அனுமதி இலவசம். இது தவிர, அரசு மற்றும் தனியார் பள்ளி குழந்தைகளின் வருகைக்காக சுமார் 5 லட்சம் இலவச அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. வளாகத்தில் கார்கள், இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு மேல் வாகனங்கள் வந்தால் பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் அவற்றை நிறுத்தலாம்.

புத்தகக் காட்சி வளாகத்தில் பணம் பெற 2 ஏடிஎம் இயந்திரங்களும், 15 இடங்களில் டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இலவச வைஃபை வசதியும் உண்டு. சொற்பொழிவுகள், மாணவர்களுக்கான போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முதன்முறையாக இந்த ஆண்டு எந்த அரங்கில் எந்தப் புத்தகம் உள்ளது என்பதை ரோபா மூலம் அறிந்துகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் தாங்கள் விரும்பும் புத்தகம் உள்ள அரங்கைத் தேடி அலைய வேண்டியதில்லை. அந்த ரோபோவை பார்த்து அரங்குக்கு நேரடியாகப் போய் புத்தகத்தை வாங்கி நேரத்தை மிச்சப்படுத்தலாம். புத்தகக் காட்சி குறித்த கூடுதல் விவரங்களை www.bapasi.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ஆதாரம் : தி இந்து

Back to top