பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / செய்திகள் / சென்னையில் 154 தபால் நிலையங்களில் 154 அஞ்சலகங்களில் ஆதார் திருத்தம், பதிவுக்கு வசதி தொடக்கம்
பகிருங்கள்

சென்னையில் 154 தபால் நிலையங்களில் 154 அஞ்சலகங்களில் ஆதார் திருத்தம், பதிவுக்கு வசதி தொடக்கம்

சென்னையில் உள்ள 154 அஞ்சல் அலுவலகங்களில் புதிதாக ஆதார் பதிவு செய்தல், ஏற்கனவே உள்ள ஆதார் விவரங்களைத் திருத்தம் செய்வதற்கான வசதி தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை நகரில் உள்ள 154 அஞ்சல் நிலையங்களிலும் ஆதார் பதிவு செய்வதற்கான உபகரணங்கள் (கிட்) வழங்கப்பட்டு இந்த வசதி படிப் படியாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது இப்பணி நிறைவடைந்து அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவைகளில் புதிதாக ஆதார் பதிவு செய்தல் மற்றும் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

புதிதாக ஆதார் பதிவு செய்ய கட்டணம் ஏதும் கிடையாது. ஏற்கெனவே உள்ள ஆதாரில் விவரங்களைத் திருத்தம் செய்ய ரூ.30 கட்டணம் செலுத்த வேண்டும் என்று அஞ்சல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : தி இந்து

Back to top