பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / செய்திகள் / சென்னையில் நாளை முதல் சித்த மருத்துவ கண்காட்சி
பகிருங்கள்

சென்னையில் நாளை முதல் சித்த மருத்துவ கண்காட்சி

சென்னை அரும்பாக்கத்திலுள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் வரும் 15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை ‘நலம்வாழ் சித்த மருத்துவக் கண்காட்சி - 2018’ நடைபெறவுள்ளது.

சித்த மருத்துவ மாணவர்களுடன் கல்லூரியும் இணைந்து இதனை நடத்துகிறது. கண்காட்சியில் எந்த நோய்க்கு என்ன மாதிரியான யோகா, வர்மம் மற்றும் புற மருத்துவம் செய்யலாம் என்பது பற்றிய செயல்முறை விளக்கம் அளிக்கப்படும்.

மருத்துவ குணமுடைய மூலிகைகளும், 50-க்கும் மேற்பட்ட நெல் வகைகளும் இடம்பெறும். அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் செயல்பாடுகள் பற்றி விளக்குவதற்காக 20 அரங்கங்கள் அமைக்கப்படுகின்றன. கண்காட்சி நடைபெறும் 4 நாட்களும் இலவச மருத்துவ முகாமும் நடைபெறும்.

ஆதாரம் : தி இந்து

Back to top