பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / செய்திகள் / ஜனவரி 12-ல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-40 ராக்கெட்
பகிருங்கள்

ஜனவரி 12-ல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-40 ராக்கெட்

‘கார்டோசாட்-2’ உட்பட 31 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-40 ராக்கெட், வரும் 12-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

விண்ணில் செலுத்தப்பட உள்ள 31 செயற்கைக்கோள்களில் மிக முக்கியமானது ‘கார்டோசாட்-2’. அதிநவீன சென்சார் தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த செயற்கைக்கோள், புவியின் மேற்பரப்பை மிக துல்லியமாக படமெடுக்கும் திறன் கொண்டது. இதற்காக பிரத்யேக கேமராக்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த செயற்கைக்கோள் அனுப்பும் படங்கள் வரைப்பட தயாரிப்பு, நில அளவீடு போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். 710 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் புவியின் கீழ் வட்டப் பாதையில் சுற்றி வரும்.

ஆதாரம் : தி இந்து

Back to top